Home
News

ஷாக் மேல் ஷாக்.. WWDC 2024 நிகழ்வு.. சுந்தர் பிச்சை, Google-ஐ நோக்கி பாயும் Apple-ன் Software அம்புகள்!

இந்த ஆண்டில் நடக்கும் மிக முக்கியமான டெக் ஈவன்ட்களில் ஒன்றான ஆப்பிளின் டபுள்யூடபுள்யூடிசி 2024 (Apple WWDC 2024) நிகழ்வானது இன்று (ஜூன் 10) இரவு தொடங்க உள்ளது. அறியாதோர்களுக்கு டபுள்யூடபுள்யூடிசி என்பது வேர்ல்ட்வைட் டெவெலப்பர் கான்ஃபிரென்ஸ் (Worldwide Developer Conference) என்பதன் சுருக்கம் ஆகும். உலகளாவிய தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் ஆப்பிள் ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் ஆப்பிள் நிறுவனம் இந்நிகழ்வின் வழியாகவே புதிய தயாரிப்புகளையும், புதிய மாற்றங்களை கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு நடந்த டபுள்யூடபுள்யூடிசி 2023 நிகழ்வில் ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிளின் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வாங்கவும் கிடைக்கிறது. ஆனால் இந்த ஆண்டு, வன்பொருளை விட மென்பொருளில் தான் ஆப்பிள் அதிக கவனம் செலுத்தும் என்பது போல் தெரிகிறது.

Apple-ன் WWDC 2024 நிகழ்வு: லைவ் ஸ்ட்ரீம் செய்வது எப்படி?

அதாவது இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் புதிய கேஜெட்டை அறிமுகம் செய்வது சந்தேகம் தான். மாறாக ஐபிஎஸ் 18 (iOS 18) மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ அம்சங்கள் என சாஃப்ட்வேர் தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் செலுத்தும்; முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய மாற்றங்களை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட ஒரு முக்கியமான டெக் ஈவென்ட்-ஐ உங்கள் வீட்டில் இருந்தபடியே லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) செய்வது எப்படி? ஆப்பிளின் இந்த டபுள்யூடபுள்யூடிசி 2024 நிகழ்வின் போது வேறு என்னென்ன புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய அறிமுகங்களை நாம் எதிர்பார்க்கலாம்? இதோ விவரங்கள்:

டபுள்யூடபுள்யூடிசி 2024 நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? டபுள்யூடபுள்யூடிசி 2024 நேரலையில் பார்க்க விரும்பும் ஆப்பிள் ரசிகர்கள் மற்றும் டெக் ஆர்வலர்கள், ஆப்பிளின் இணையதளம் மற்றும் யூட்யூப் சேனல் வழியாக இதை செய்யலாம். இந்நிகழ்வின் கீநோட் (Kwynote) ஆனது இந்திய நேரப்படி இன்று (ஜூன் 10) இரவு 10.30 மணிக்கு தொடங்கும்.

டபுள்யூடபுள்யூடிசி 2024 நிகழ்வில் என்னென்ன முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்? இந்நிகழ்வுகள் ஐஓஎஸ், ஐபாட்ஓஎஸ், மேக்ஓஎஸ் மற்றும் பலவற்றிற்கான முக்கிய அப்டேட்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஆண்டு, புதிய வன்பொருள் எதுவும் அறிவிக்கப்படாமல், மென்பொருளில் கவனம் செலுத்தப்பட்டு மேம்பட்ட ஏஐ தொழில்நுட்பங்கள் மூலம் ஏற்கனவே உள்ள தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

மேலும் இந்நிகழ்வில், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் உடனான போட்டித்தன்மையை தக்கவைக்க ஆப்பிள் நிறுவனம் அதன் ஏஐ திறன்களை வெளிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சாட்ஜிபிடி அடிப்படையிலான அம்சங்களும் இடம்பெறும். இதற்காக ஆப்பிள் நிறுவனம் ஓப்பன்ஏஐ போன்ற முக்கிய ஏஐ நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், ஆப்பிள் அதன் ஐபோன்கள் உட்பட அனைத்து ஐஓஎஸ் டிவைஸ்களுக்கும் சேர்த்து பாஸ்வேர்ட்ஸ் என்கிற புதிய ஆப்பை (Passwords App) அறிமுகம் செய்யும் என்றும் கூறப்படுகிறது. இது ஆப்பிளின் ஐஓஎஸ் டிவைஸ்களுக்கான லாக்இன் விவரங்களை நிர்வகிக்கும் ஒரு ஆப் ஆக இருக்கலாம். ஆப்பிள் நிறுவனமானது, ஐக்ளவுட் கீசெயினை (iCloud Keychain) பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் ஐபோன்கள், ஐபாட் அல்லது விஷன் ப்ரோ ஆகியவைகளின் பாஸ்வேர்ட்களை சேமிக்க ஏற்கனவே அனுமதிக்கிறது.

இதற்கிடையில் ஜூன் 10 அறிமுகமாகும் புதிய ஆப்பும் கூட இதே பாணியில் வேலைசெய்யும் என்று ஊகிக்கப்படுகிறது. இருப்பினும் இது அக்கவுண்ட்கள், வைஃபை நெட்வொர்க்குகள் மற்றும் பாஸ் கீகள் போன்ற பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்ட லாக்-இன்களை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் எளிமையாக கூறவேண்டும் என்றால்.. சந்தையில் உள்ள மற்ற பிரபலமான பாஸ்வேர்ட் மேனேஜர்களான 1பாஸ்வேர்டு மற்றும் லாஸ்ட்பாஸ் போன்றே ஆப்களை போல ஆப்பிளின் புதிய பாஸ்வேர்ட்ஸ் ஆப்பும் செயல்படலாம்.

Best Mobiles in India

English summary
WWDC 2024 Event How to Watch Livestream What to Expect on Most Awaited Apple Event Start June 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X