அடேங்கப்பா.. iOS 17-இல் இவ்வளவு புதிய வசதிகள் இருக்குதா? ஒரு கலக்கு கலக்கிய Apple.!
ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான மென்பொருள் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐஓஎஸ் 17 வெர்ஷன் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புதிய ஐஓஎஸ்-இன் பெரும்பாலான செயலிகளில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்கம்மிங் அழைப்புகளில் தற்போது ஒவ்வொரு காண்டாக்டிற்கும் குறிப்பிட்ட போஸ்டர்களை செட் செய்து கொள்ள முடியும். பின்பு வாய்ஸ்மெயில் சேவையில் கூகுள் ஏற்கனவே வழங்குவதைப் போன்றே வாய்ஸ்மெயில் தகவல்களை எழுத்து வடிவில் காண்பிக்கிறது.

அதேபோல் மெசேஜஸ் அம்சத்தில் எளிமையாக பதில் அனுப்புவது, ஆடியோ மெசேஜ்களுக்கு எழுத்து வடிவம் பெறுவது, இன்-லைன் லொகேஷன் விவரங்கள் மற்றும் செக்-இன் வசதி உள்ளது. இதுதவிர பேஸ்டைமில் நேரலை தகவல்களை வழங்க முடியும். மேலும் ஸ்டிக்கர் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டு இருக்கிறது. அதாவது இதில் எமோஜிக்களை ஸ்டிக்கர் மற்றும் எஃபெக்ட்களாக மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சிரி சேவையை இயக்க இனி ஹே சிரி என்று அழைக்காமல், வெறும் சிரி என்று மட்டும் கூறினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஒவ்வொரு முறையும் கமாண்ட் செய்யாமல், அடுத்தடுத்த கேள்விகளை கேட்க சிரி அதற்கு பதில் அளிக்கும். குறிப்பாக இந்த வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

மேலும் புதிய ஐஓஎஸ் வெர்ஷனில் ஷேரிங்கும் மிக எளிமையாக மாற்றப்பட்டு இருக்கும். அதன்படி நேம்டிராப் அம்சம் கொண்டு பயனர்கள் காண்டாக்ட் விவரங்களை அவர்களது ஐபோனினை மற்றவர் ஐபோன் அருகில் கொண்டு சென்றாலே பரிமாறிக் கொள்ளலாம். பின்பு இதேபோன்று புகைப்படங்களையும் மிகவும் எளிதில் ஷேர் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த புதிய ஐஒஎஸ்-இல் டைப்பிங் செய்வதும் எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் புதிதாக ஏ.ஐ சார்ந்த மாடலிங் ஆட்டோகரெக்ஷன் வசதியை வழங்குகிறது. டைப் செய்யும் போது ஏதேனும் புரியாத வார்த்தை இருப்பின், அதனை ஐஓஎஸ் 17 கண்டறிந்துவிடுகிறது. பின்பு புதிய ஐஓஎஸ் 17-இல் உள்ள ஜர்னல் ஆப் கொண்டு பயனர்கள் அவர்களது உணர்வுகளை பதிவு செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஐஓஎஸ் 17 வெர்ஷன் ஆனது ஆப்பிள் பயனர்களுக்கு பல்வேறு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். பின்பு நேற்று இரவு நடைபெற்ற WWDC 2023 நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்மெண்டெட் ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் விஷன் ப்ரோ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஹெட்செட் மெய்நிகர் தொழில்நுட்பத்தைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
இந்த விஷன் ப்ரோ ஹெட்செட் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பின்பு ஆக்மெண்டெட் ரியாலிட்டி மற்றும் வி.ஆர். எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி செயலிகளை சப்போர்ட் செய்கிறது இந்த ஹெட்செட். தனித்துவம் மிக்க டிசைன் கொண்டிருக்கும் விஷன் ப்ரோ மாடலை கட்டுப்படுத்துவதற்கு பிரத்யேக கண்ட்ரோலர் போன்று எந்த சாதனமும் தேவையில்லை. இதில் உள்ள ஏராளமான சென்சார்கள் மற்றும் கேமராக்களை கொண்டு வாய்ஸ் இன்புட் மற்றும் செய்கை மொழியிலேயே இதனை இயக்கி விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications