WWDC 2021: ஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு: லைவ் பார்ப்பது எப்படி?

|

WWDC 2021 இன்று ஜூன் 7 ஆம் தேதி தொடங்குகிறது. குறிப்பாக கடந்த ஆண்டைப் போலவே ஆப்பிளின் உலகளாவிய டெவலப்பர் மாநாடு முற்றிலும் ஆன்லைனில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் அந்நிறுவனம் சிறந்த மென்பொருள் வசதிகளையும் தரமான சாதனங்களையும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தை பயன்படுத்தும்

குறிப்பாக உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு ஐந்து நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் IOS, iPadOS, macOS, tvOS, மற்றும் watchOS போன்றவற்றின் புதிய பதிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்தஇயங்குதளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு
அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த நிகழ்வு.

லைவ் பார்ப்பது எப்படி?

அதேபோல் ஆப்பிள் நிறுவனம் இந்த நகழ்வில் தனது அடுத்த தலைமுறை மேக்புக் ப்ரோ மாடல்களை வெளியிடும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. WWDC 2021 முக்கிய லைவ்ஸ்ட்ரீம் ஆன்லைனில பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி
கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிளின் வளாகத்திலிருந்து இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படும், பின்பு இதை காலை 10 மணிக்கு ஆப்பிளின் யூடியூப் சேனல் மூலம் நாம் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

சார் உடனே அங்க போங்க: லைவ்வில் தற்கொலை முயற்சி- பேஸ்புக், போலீஸார் இணைந்து நடவடிக்கை!சார் உடனே அங்க போங்க: லைவ்வில் தற்கொலை முயற்சி- பேஸ்புக், போலீஸார் இணைந்து நடவடிக்கை!

டு மூலமாகவும் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று

அதேபோல் இந்த உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு நிகழ்ச்சி ஆனது ஆப்பிள்.காம் வலைத்தளம், ஆப்பிள் டிவி பயன்பாடுமற்றும் ஆப்பிள் டெவலப்பர் பயன்பாடு மூலமாகவும் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

 முக்கிய உரையில்

ஆப்பிள் WWDC 2021 முக்கிய உரையில் மென்பொருள் மையப்படுத்தப்பட்ட அறிவிப்புகளின் பட்டியலை உருவாக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புகளில் iOS 15 , iPadOS 15 , macOS 12 , watchOS 8 மற்றும் tvOS 15 ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மென்பொருள் புதுப்பிப்புகள் அனைத்தும் அவற்றின் பல்வேறு மேம்பாடுகளைக் கொண்டுவரும் என்று ஊகிக்கப்படுகிறது.

ஜியோபோன் 5ஜி தீபாவளிக்கு தான் அறிமுகமா? விலை இது தானா? புதிய தகவல் சொல்லும் விஷயமே வேற..ஜியோபோன் 5ஜி தீபாவளிக்கு தான் அறிமுகமா? விலை இது தானா? புதிய தகவல் சொல்லும் விஷயமே வேற..

ஐஒஎஸ் 15

ஐஒஎஸ் 15

இன்று நடைபெறும் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் ஐஒஎஸ் 15 இயங்குதளம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளிவரும்என்று கூறப்படுகிறது. குறிப்பாக இது வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக பல்வேறு அம்சங்களை கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. அதாவது புதிய iOS இல் தனியுரிமை அம்சங்களில் சில மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம். பின்பு iMessage வசதியில் பல அம்சங்கள் சேரக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஐபேட்ஒஸ் 15

ஐபேட்ஒஸ் 15

ஐபேட்ஒஸ் 15 ஆனது முகப்புத்திரையில் பல்வேறு மாற்றங்கள் வரும் என்று கூறப்படுகிறது. அதாவது மேம்பட்ட அம்சங்கள் இந்த ஐபேட்ஒஸ் 15 கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த அப்டேட் பல பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

 homeOS போன்றவற்றில் நாம் எ

அதேபோல் macOS 12, watchOS 8, tvOS 15, homeOS போன்றவற்றில் நாம் எதிர்பார்க்காத அம்சங்கள் இருக்கும்என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய மென்பொருள் வசதிகள் சிறந்த மாற்றத்தை தரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் புதிய 14-இன்ச் மற்றும் 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
WWDC 2021: Apple Developers Conference: How to Watch Live?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X