உள்ளங்கையை ஸ்மார்ட்போனாக மாற்றும் சிக்ரெட் ப்ரேஸ்லெட்

By Meganathan
|

சிறிய பட்டை உங்களின் உள்ளங்கையை டேப்ளெட் இன்டெர்பேஸ் ஆக மாற்றி ஒவ்வொரு முறை மணிக்கட்டை திருப்பும் போதும் உள்ளங்கையை ஸ்மார்ட்போனாக மாற்றும்.

உள்ளங்கையை ஸ்மார்ட்போனாக மாற்றும் சிறிய பட்டை...

ஆறு மாதங்களில் உருவாக்கப்பட்ட சிக்ரட் ப்ரேஸ்லெட்டில் பிகோ ப்ரோஜெக்டர் மற்றும் எட்டு ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் இருக்கின்றன. தனி கருவியாக வேலை செய்யும் இது மணிக்கட்டை திருப்பி ஆன் செய்தவுடன் உள்ளங்கையில் ஆன்டிராய்டு இன்டெர்பேஸை காண்பிக்கும்.

உள்ளங்கையை ஸ்மார்ட்போனாக மாற்றும் சிறிய பட்டை...

பயனாளிகளின் விரல் மற்றும் விரல்களை கனித்து செயல்படும் வகையில் இதன் ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கருவியின் மூலம் மின்னஞ்சல்களை அனுப்பவும் முடியும் பெறவும் முடியும், மேலும் இணையம் பயன்படுத்துவது மற்றும் கேம் விளையடவும் முடியும்.

உள்ளங்கையை ஸ்மார்ட்போனாக மாற்றும் சிறிய பட்டை...

இதை பயனாளிகள் தங்களது ஸ்மார்ட்போனுடன் இணைத்து கொள்வதோடு ஸ்பீக்கர் போன் ஆப்ஷனை பயன்படுத்தி அழைப்புகளுக்கும் பதில் அளிக்க முடியும். சிக்ரட் ப்ரேஸ்லெட்டில் எல்ஈடி நோட்டிபிகேஷன் வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 16 / 32 ஜிபிக்களில் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சந்தையில் கிடைக்க இன்னும் 18 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் விலை இந்தியாவில் ரூ.24,000 வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
wristband turns your arm into a smartphone. A tiny new wristband can project a tablet interface onto your arm.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X