Home
News

வெறும் ரூ.250/-க்கு தற்கொலை தடுப்பு சாதனம்; அசத்தும் அஸ்ஹானி.!

கடந்த ஆறு ஆண்டுகளில் 60 க்கும் அதிகமான மாணவர்கள் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு மாதமும் ஒரு தற்கொலை நடந்து உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800,000 மக்கள் உலகளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள், அதில் 135,000 (17 சதவிகிதம் பேர்) - உலக மக்கள் தொகையில் 17.5% பேர்களை கொண்ட - இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். 1987 க்கும் 2007 க்கும் இடைப்பட்ட காலத்தில், தற்கொலை விகிதம் 100,000 க்கு 7.9 ல் இருந்து 10.3 ஆக அதிகரித்து உள்ளது. குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் தற்கொலை விகிதம் அதிகரித்து உள்ளது. இந்த பட்டியலில் கோட்டாவிற்கும் ஒரு இடம் உண்டு.

வெறும் ரூ.250/-க்கு தற்கொலை தடுப்பு சாதனம்; அசத்தும் அஸ்ஹானி.!

கோட்டாவில் உள்ள விடுதி அறைகளின் சுவர்களிடம் ஓதுவதற்கு ஏகப்பட்ட சோக கதைகள் உள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் 60 க்கும் அதிகமான மாணவர்கள் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு மாதமும் ஒரு தற்கொலை நடந்து உள்ளது.

விடுதி வளாகங்களில் நிகழ்ந்துள்ள பெரும்பாலான தற்கொலைகள், தூக்கு போட்டு தொங்குவதால் ஏற்பட்டு உள்ளன, இதனை மனதிகொண்டு கோட்டா விடுதியில் சில தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருந்தாலும் கூட, அவைகள் ஒரு மின் பொறியாளர் கையில் எடுத்துள்ள பொறுப்பை போன்று இல்லை.

அப்படி என்ன பொறுப்பை கையில் எடுத்து உள்ளார்?

அப்படி என்ன பொறுப்பை கையில் எடுத்து உள்ளார்?

க்ரெம்ப்டன் கிரீவ்ஸில் ஓய்வுபெற்ற ஒரு பொது மேலாளரான ஷரத் அஸ்ஹானி, தற்கொலைகளை தடுக்கும் தற்காப்புத் திட்டத்தின் கீழ் 'தற்கொலை எதிர்ப்பு மின்விசிறிகளை' வடிவமைத்து உள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள முலுண்டில் வசிக்கும் இந்த 61 வயதான மனிதரின் கண்டுபிடிப்பு ஆனது டைம்ஸ் ஆஃப் இந்தியா வாயிலாக வெளியாகி உள்ளது.

தற்கொலைக்கு அனுமதிக்காது!

தற்கொலைக்கு அனுமதிக்காது!

ஷரத் அஸ்ஹானியின் கூற்றின் படி, அவர் உருவாக்கி உள்ள ஒரு ராட் தான் தற்கொலை தடுப்பிற்கான ஆதாரமாக உள்ளது. ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொள்ள விரும்பினால், இந்த ராட் பொருத்தப்பட்டுள்ள மின் விசிறி ஆனது தற்கொலைக்கு அனுமதிக்காது என்கிறார்.

இது எப்படி வேலை செய்கிறது?

இது எப்படி வேலை செய்கிறது?

ஒருவர் தன்னை தானே கயிற்றில் பிணைத்துக் கொண்டு மின் விசிறியில் தொங்கும் பட்சத்தில்,​ ஏற்கனவே ​தீர்மானிக்கப்பட்டுள்ள எடை அளவு தன் எல்லையை மீறும், இந்த இடத்தில் தான் ராட் மீதுள்ள "அன்லாட்சிங் மெக்கானிசம்" (unlatching mechanism) செயல்படுத்தப்படும். அது மின் விசிறியில் இணைக்கப்பட்டுள்ள ராட் தனை தானாகவே துண்டிக்க செய்யும். இதன் விளைவாக தூக்கில் தொங்க முயற்சித்த நபர் தரையில் விழுவார்.

கேள்விப்பட்டதும் 5,000 ராட்களை ஆர்டர் செய்து உள்ளது!

கேள்விப்பட்டதும் 5,000 ராட்களை ஆர்டர் செய்து உள்ளது!

இந்த தற்கொலை தடுப்பு ராட் ஆனது வெறும் ரூ.250 க்கு விற்கப்படுகிறது என்பதும், இதனை எந்த ஒரு பழைய அலல்து புதிய மின் விசிறியில் பொருத்தி இணைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோட்டா ஹோஸ்டல் அசோசியேஷன் இதைப் பற்றி அறிந்தபோது, ​​அந்த வளாகத்திற்கு 5,000 ராட்களை ஆர்டர் செய்து உள்ளது. மற்றும் அவைகள் அனைத்தும் கோட்டா ஹோஸ்டல்களில் நிறுவப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது. முதல் கட்டமாக 500 ராட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

ஷரத் அஸ்ஹானியை பாதித்த அந்த தற்கொலை!

ஷரத் அஸ்ஹானியை பாதித்த அந்த தற்கொலை!

கடந்த 2004 ஆம் ஆண்டில், மாடல் நஃபீஸா ஜோசப் தற்கொலை செய்து கொண்டது ஷரத் அஸ்ஹானியை மிகவும் பாதித்து உள்ளது. அதன் விளைவாகவே இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றிக்கும் மேலாக ஷரத் அஸ்ஹானியின் இந்த கண்டுபிடிப்பை, மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த விடுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டுமென்று விடுதி சங்கம் முடிவு எடுத்துள்ளது.

1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.!  கண்டுபிடித்த தமிழன்.!

1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.! கண்டுபிடித்த தமிழன்.!

நம் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் சராசரியாக ரூ.82க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இடங்களை பொறுத்து ஒரு ரூபாய் வரை மாற்றம் காணும். மேலும் ஒவ்வொரு நாளும் ஆமை வேகத்தில்
பெட்ரோல் விலை இறக்கம் காணும்.

ஆனால் முயல் வேகத்தில் பெட்ரோல் விலை உச்சத்தை எட்டும். இது பல நடுத்தர மற்றும் ஏழை எளியவர்களை அல்லோல் பட வைத்து விடும்.

இன்று நம் நாட்டில் இந்த நிலைமை தலை தூக்கி இருக்கின்றது. பெட்ரோலுக்கு நாம் மாற்று எரிபொருளாக மூலிகை பெட்ரோல் மற்றும் எத்தனாலை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றோம்.

நள்ளிரவு முதல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.150 என்றால் கூடவும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எண்ணெண்ணை நிறுவனங்களே பெட்ரோல் விலையை தீர்மானிப்பதால் நாம் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம்.

நம்மலை போல ஏழை குடும்பங்களை காப்பற்ற ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞர் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

கையை கடிக்கும் பொருளாதார சிக்கலில் இருந்து நம்மை காக்க ஆபத்து பாண்டவராக மாணவன் முருகன் உதித்துள்ளார் என்பது மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதுவும் ஒருலிட்டர் தண்ணீரில் 45 கிலோ மீட்டர் தூரம் மைலேஜ் கொடுக்கின்றது.

ஐடிஐ மாணவன்:

ஐடிஐ மாணவன்:

மாணவன் முருகன் பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக தண்ணீரை பயன்படுத்த முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார். இவரது கண்டுபிடிப்பு நமக்கே ஆச்சரியமூட்டுகின்றது. இவர் ஐடிஐ 2ம் ஆண்டு படித்து வருகின்றார். ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞன் என்பது பலருக்கும் தெரிந்தராத உண்மையாக இருக்கின்றது.

சொந்த ஊர்:

சொந்த ஊர்:

முருகனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் ரெங்சாமிபுரத்தை சேர்ந்தவர். முருகனின் தாய் தந்தை கூலி தொழிலாளியாக இருக்கின்றனர். இவருக்கு உடன் பிறப்புகளும் கூலி தொழிலாளர்களாக இருக்கின்றனர். இப்படி வறுமையில் வளர்ந்தாலும், இவரின் வான் உயர்ந்த எண்ணம் தான். இன்று கண்டுபிடிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

இந்த வள்ளுவரின் குறலே இவரின் புதிய கண்டுபிடிப்பும் துணை நின்று உள்ளது எனவும் கூறலாம்.

ஹேக்கத்தான்:

ஹேக்கத்தான்:

தொழில்நுட்ப ஆர்வலர்களை ஓரிடத்தில் திரளச் செய்து, நகர்ப்புறத்தில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண, மென்பொருள், செயலி போன்றவற்றை உருவாக்க தூண்டும் போட்டியே ஹேக்கத்தான். இதில் மாணவன் முருகன் இந்த போட்டியில் தனது பைக் உடன் கலந்து கொண்டார். அப்போது இவரை பற்றி பெரிதாக தெரியவில்லை. இது கோவையில் நடந்தது.

 சுடர் விளக்காயினும் தூண்டு கோல்:

சுடர் விளக்காயினும் தூண்டு கோல்:

சமீபத்தில் கனவு ஆசிரியர் விருது பெற்ற முகம்மது பிரேம் ரோஸ் சார்தான் நான் பள்ளியில் படிக்கும்போது எனக்கும் என் சக மாணவர்களுக்கும் அறிவியலில் வழிகாட்டியாக செயல்பட்டார். ஆகையால் சிறுவயதிலிருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளின் மேல் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அதனால் எட்டாம் வகுப்பிலிருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன்.

கண்டுபிடிப்புகள்:

கண்டுபிடிப்புகள்:

வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் ஏதாவது அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில்தான் என் கவனம் செல்லும். அப்படி உருவானதுதான் தண்ணீரில் செல்லும் சைக்கிள் படகு, வீடார் கருவி, காது கேளாதவர்களுக்கான கருவி போன்றவை.

கடலை பிரிக்கும் இயந்திரம்:

கடலை பிரிக்கும் இயந்திரம்:

இக்கண்டுபிடிப்புகள் பள்ளி அளவில் எனக்கு பல பரிசுகளை வாங்கித் தந்தன. மேலும் ‘யங் சயின்டிஸ்ட் 2017-18' போட்டியில் கலந்துகொண்டபோது எனது கண்டுபிடிப்பான விவசாயிகளுக்கு உதவும் எளிய முறையில் கடலை பிரிக்கும் இயந்திரம் முதல் பரிசை வென்றது.

 மாற்று எரிபொருள் முனைப்பு:

மாற்று எரிபொருள் முனைப்பு:

பெட்ரோலுக்கு முற்றிலும் மாறான ஒரு எரிபொருளைக் கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். என்னிடம் டூ விலர் இல்லாததால் இரண்டு வருடம் தண்ணீரை எப்படி மாற்று எரிபொருளாக பயன்படுத்தலாம் என்பதை ஆய்வு செய்து ஆயத்தமானேன் என்கிறார் முருகன்.

அப்பா வாங்கி கொடுத்த டூவீலர்:

அப்பா வாங்கி கொடுத்த டூவீலர்:

ஆறுமாதத்திற்கு முன் என் அப்பா செகண்ட் ஹேண்ட் டூ விலர் ஒன்றை வாங்கி தந்தார். அந்த பைக்கையே சோதனைக் கருவியாக கொண்டு தண்ணீரில் இயங்கும் பைக்கை வடிவமைத்தேன்'' எனக் கூறும் முருகன் தன் கண்டுபிடிப்பு வாகனம் செயல்படும் விதம் குறித்து விளக்கினார்.

சோலார் பேனல் உதவி:

சோலார் பேனல் உதவி:

தண்ணீரில் இயங்கும் வகையில் சோலார் பேனலுடன் இணைக்கப்பட்ட பேட்டரி, தண்ணீர் சேமிக்க கேன் என எனது பைக்கில் பல மாற்றங்கள் செய்தேன். ஸ்டார்ட் செய்ய மட்டும் சிறிது பெட்ரோல் தேவைப்படும். பின் பைக்கின் ஒரு புறம் வைத்துள்ள கேனில் ஒரு லிட்டர் தண்ணீருடன், 200 கிராம் சாதாரண உப்பு போட்டு கலக்க வேண்டும். பைக் ஸ்டார்ட் ஆனவுடன் பவர் சப்ளை தண்ணீருக்கு செல்லும். உப்பு கலந்த தண்ணீரிலிருந்து ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் தனித்தனியாக பிரியும்.

40 கி.மீ வரை ஓடுகின்றது:

40 கி.மீ வரை ஓடுகின்றது:

ஆக்ஸிஜன் வெளியேற, ஹைட்ரஜன் எஞ்சினுக்கு சென்று வாகனத்தை இயக்குகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள பைக்குகளைப்போல் இதிலிருந்து எந்த நச்சுப் புகையும் வெளியேறாது. மணிக்கு 45 கி.மீ வேகத்தில் செல்லும். ஒரு லிட்டர் தண்ணீரில் 40 கி.மீ வரை ஓடும். அதன் பிறகு கழிவாக மாறிவிடும் அந்த தண்ணீரை மாற்றிவிட வேண்டும்.

முழுமையாக தண்ணீரில் இயக்குவேன்:

முழுமையாக தண்ணீரில் இயக்குவேன்:

விரைவில் சோலார் மற்றும் பேட்டரியை அகற்றிவிட்டு, பெட்ரோல் டேங்கில் தண்ணீரை ஊற்றி ஓட்டும் வகையில் மாற்றி அமைக்க உள்ளேன்'' என்று ஆர்வமுடன் கூறும் முருகன் ‘‘தி நோபல் அறிவியல் மன்றம்'' எனும் பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை தொடங்கி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வுகள் மற்றும் சமூக சேவைகள் செய்துவருகிறார் மாணவன் முருகன்.

Best Mobiles in India

English summary
Worth just Rs 250 the anti-suicide ceiling fan is winning hearts in Kota hostels: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X