அதிகளவு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மனிதர்களுக்கு அதே அளவு பாதிப்பை ஏற்படுத்தும் !
செல்போன் மூலம் முன்பதிவுகள் எளிமையாவதும், முகநூல் மூலம் எண்னற்ற நண்பர்கள் கிடைப்பதும், மின்சாதன கருவிகள் வியக்க வைகை்கும் வகையில் வளர்ந்திருப்பது நம்மில் பலருக்கும் வேலையை சுலுவாக முடிப்பது சந்தோஷத்தையும் மன நிறைவையும் தரலாம்.
புதிய ஆன்டிராய்டு வாங்கியவுடன் இதை தான் செய்ய வேண்டுமாம்
என்றாலும் மின்சாதன கருவிகளால் ஆபத்து அதிகரிக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதை படிக்கும் பலரும் இது முற்றிலும் பொய் என்றும் இது நம்பக தன்மையற்றது என்றும் நினைக்கலாம்.
பல ஆராய்ச்சியாளர்கள் இரவு பகலாக உழைத்து மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தொழில்நுட்ப ஆபத்து குறித்து பல ஆய்வு முடிவுகளை வெளியிடுகின்றனர். அந்த வகையில் தொழில்நுட்பம் மூலம் ஏற்படும் சில ஆபத்துகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

மன அழுத்தம்
ஸ்மார்ட்போன் மற்றும் மன அழுத்தத்திற்கு நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி குருந்தகவல்களை பார்ப்பது இதற்கு முக்கிய காரணம் என்றும் சீரான இடைவெளி விட்டு ஸ்மார்ட்போனை பயன்டுத்துவது இதற்கான தீர்வாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கல் பரிந்துரைக்கின்றனர்.

முகப்பரு
அதிகமாக செல் போன் பயன்படுத்தினால் முகப்பரு ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. முடிந்த வரை போன்களை முகத்தின் அருகில் கொண்டு செல்லாமல் இருப்பது நல்லது.

ப்ளாக்பெரி
ப்ளாக்பெரி ஸ்மார்ட்போன்களின் விசேஷ சிறப்பம்சமாக கருதப்படும் ஸ்க்ரோலிங் பால் கட்டை விரலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இது தசைநாண் அழற்சிக்கும் வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கதிர்வீச்சு
செல்போன் மூலம் ஏற்படும் கதிர்வீச்சு மனிதர்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்று நீங்கள் பல முறை கேட்டிருக்கலாம். இருந்தும் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்னிக்கை அதிகரித்து கொண்டோ தான் இருக்கின்றது.

தொற்று
செல்போன் மூலம் தொற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும், இதை எதிர்கொள்ள அவ்வப்போது போன்களை சுத்தம் செய்வது நல்லது.

விபத்து
நிச்சயம் இதற்கு தொழில்நுட்பத்தை குறை கூற முடியாது என்றாலும் வாகனங்களை ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவது பேராபத்தை விளைவிக்கும். செல்போன் பயன்படுத்தும் அறிவு ஜீவிகள் வாகனங்களை ஓட்டும் போது மட்டுமாவது அதை தூரத்தில் வைத்தால் பலருக்கும் அது நன்மையாக இருக்கும்.

ஒவ்வாமை
போன்களை முகத்தின் அருகில் நீண்டநேரம் பயன்படுத்தினால் ஒவ்வைமை ஏற்படும், முடிந்த வரை போன்களை முகங்களைவிட்டு தள்ளியே வைக்கவும்

வைப்ரேட்
இது பலருக்கும் ஏற்படத்தான் செய்கின்றது, உங்களிடம் போன் இருக்கும் போது தீடிரென அது வைப்ரேட் ஆனதை போன்று உணர்வு ஏற்படும் ஆனால் உண்மையில் போன் வைப்ரே் ஆகியிருக்காது. முக்கியமான விஷயம் இதற்கு தீர்வே கிடையாது என்பது தான்

மணிக்கட்டு
கணினி அதிகமாக பயன்படுத்தினால் மணிக்கட்டில் பிரச்சனை ஏற்படும், அதிக டைப்பிங் செய்வதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். அதிகமாக டைப் செய்பவர்கள் சீரான இடைவெளியில் ஓய்வு எடுப்பது நல்லது.

முதுகு மற்றும் கழுத்து வலி
அதிக நேரம் கணினி பயன்படுத்துவது முதுக மற்றும் கழுத்து பகுதியில் வலியை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications