Home
News

உலகின் மிக விலை உயர்ந்த போனிற்கு ஓனர் ஒரு இந்திய பெண்-ஆ? அதுவும் இந்த பிரபலத்தின் மனைவியா? யாருனு தெரியுமா?

இதுவரை நீங்கள் எத்தனையோ ஸ்மார்ட்போன்களை பாத்திருப்பீர்கள். உங்களுக்கு பெரும்பாலான முன்னணி பிராண்டுகளின் பெயர்கள் மற்றும் உலகத்தில் அதிக டிமாண்ட் ஆன ஸ்மார்ட்போன் மாடல்களை எல்லாம் கூட தெரிந்திருக்கும். ஆனால், உலகத்தில் மிகவும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

தெரியாதென்றால், இந்த பதிவு உங்களுக்கானது தான். உலகளவில் இதுவரை விற்பனை செய்யப்பட்ட விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் பட்டியலை தான் இங்கு நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். முன்னணி பிராண்டுகளாக இருந்தாலும், பல மில்லியன் டாலர் மதிப்பில் விற்பனையான விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் மாடல்களை பற்றி தான் பார்க்க போகிறோம்.

உலகின் மிக விலை உயர்ந்த போனிற்கு ஓனர் ஒரு இந்திய பெண்-ஆ?

ஃபால்கான் சூப்பர்நோவா ஐபோன் 6 பிங்க் டைமண்ட் (Falcon Supernova iPhone 6 Pink Diamond) என்ற இந்த சாதனம் அடிப்படையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான ஐபோன் 6 மாடலாகும். ஆனால், சாதாரண ஐபோன் 6 போல இல்லாமல், இந்த டிவைஸ் 24 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பின் பேனலில் பதிக்கப்பட்டுள்ள அரிய வகை பிங்க் நிற வைரம் தான் இதன் சிறப்பே.

இதன் விலை 48.5 மில்லயன் டாலர் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் சாதனம் தான் உலகின் மிகவும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் மாடலாக இன்று வரை கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.396 கோடி ஆகும். இந்த போனிற்கு சொந்தக்காரர் ஒரு இந்தியர் என்ற உண்மை தெரிந்தால், எங்களை போல் நீங்களும் அதிர்ச்சியில் ஆடிப்போய்விடுவீர்கள்.

யார் இந்த ஃபால்கான் சூப்பர்நோவா ஐபோன் 6 பிங்க் டைமண்ட் சொந்தக்காரர் என்று இணையத்தில் சர்ச் செய்த போது, இந்த போனின் ஓனர் நீதா அம்பானி என்று பல தகவல்கள் குறிப்பிடுகிறது. இருப்பினும், இது உண்மை அல்ல என்று சில தகவல்கள் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. உண்மை எதுவென்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. உலகத்திலேயே ஒரே ஒரு ஃபால்கான் சூப்பர்நோவா ஐபோன் 6 பிங்க் டைமண்ட் போன் தான் இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக விலை உயர்ந்த போனிற்கு ஓனர் ஒரு இந்திய பெண்-ஆ?

ஸ்டுவர்ட் ஹுகஸ் ஐபோன் 4S எலைட் கோல்டு (Stuart Hughes iPhone 4S Elite Gold) என்ற இந்த சாதனம் 9.4 மில்லியன் டாலர் விலையில் உருவாக்கப்பட்ட ஐபோன் 4S சாதனமாகும். இந்த சாதனத்தை ஸ்டுவர்ட் ஹுகஸ் 500 வைரங்கள், பிளாட்டினம் ஆப்பிள் லோகோ என்று முழு போனையும் 24 கேரட் தங்கத்தால் உருவாக்கியிருக்கிறார்.

டைமண்ட் கிரிப்டோ ஸ்மார்ட்போன் (Diamond Crypto Smartphone) என்ற இந்த சாதனம் 1.3 மில்லியன் டாலர் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்ட விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த ஸ்மார்ட்போன் முழுமையாக என்கிரிப்ட் செய்யப்பட்ட மிகவும் பாதுகாப்பான போன் மாடலாக திகழ்கிறது. இதை 50 வைரங்கள் மற்றும் திடமான பிளாட்டினம் மூலம் JSC Ancort என்ற டிசைனர் வடிவமைத்துள்ளார்.

கோல்டுவிஷ் லீ மில்லியன் (Goldvish Le Million) போன் விலை உயர்ந்த வைட் கோல்டு மற்றும் வைரங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 1.3 மில்லியன் டாலர் ஆகும். 2008 ஆம் ஆண்டில் உலகத்தின் மிகவும் விலை உயர்ந்த மொபைல் சாதனம் என்று புகழாரம் சூட்டப்பட்டு கின்னஸ் புத்தகத்திலும் இது இடம்பெற்றது.

உலகின் மிக விலை உயர்ந்த போனிற்கு ஓனர் ஒரு இந்திய பெண்-ஆ?

கிரேஸோ லுக்ஸர் லாஸ் வேகாஸ் ஜாக்பாட் (Gresso Luxor Las Vegas Jackpot) என்று இந்த போன் மிகவும் தனித்துவமானது. ஏனெனில், இது 200 மில்லியன் வருடங்கள் பழமையான ஆப்பிரிக்காவின் பிளாக்வுட் மரத்தின் துண்டை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கம் தங்கத்தாலும், இதன் நேவிகேஷன் பட்டன் வைரத்தாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 1 மில்லியன் டாலர் ஆகும்.

ஐபோன் 3G கிங்ஸ் பட்டன் (iPhone 3G Kings Button) என்று இந்த போன் முழுமையாக தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஹோம் பட்டன் 6.6 காரட் வைரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 2.5 மில்லியன் டாலர் ஆகும். வேர்ட்யு சிக்னேச்சர் கோப்ரா (vertu signature cobra) என்ற இந்த போன் பாம்பு போன்ற உருவத்தை வைரத்தாலும், ரூபி கற்களாலும் செதுக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.23 கோடியாகும். இவையெல்லாம் உலகின் மிகவும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் மாடல்களாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Worlds most expensive smartphone model worth Rs 396 crore device owned by an Indian
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X