உலகின் அபாயகரமான லேப்டாப் விற்பனைக்கு வந்துள்ளது: காற்று கூட நுழையமுடியாத ஒரு பெட்டியில் உள்ளது.

10.2-இன்ச் கொண்ட லேப்டாப் தற்சமயம் ஏலம் விடப்பட்டுள்ளது, இதற்கான துவக்க விலையே 1.2மில்லியன் அமெரிக்கடாலர்களாக உள்ளது.

|

உலகின் மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படும் 6 வைரஸ்கள் நிறைந்த சாம்சங் லேப்டாப் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது, குறிப்பாக சர்வதேச அளவில் சுமார் 100பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இந்த லேப்டாப் மூலம் சேதாரம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் அபாயகரமான லேப்டாப் விற்பனைக்கு வந்துள்ளது: என்னென்ன சிறப்பம்சம்

மேலும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் xp மென்பொருளின் கீழ் இயங்கும் இந்த லேப்டாப் தான் உலகின் அபாயகரமான லேப்டாப் என்று கூறப்படுகிறது. பின்பு இது வெறும் லேப்டாப் மட்டுமல்ல அபாயகரமான இயந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

 சாம்சங்

சாம்சங்

வெறும் 10.5 இன்ச் அளவிலான திரை மட்டுமே கொண்டு, விண்டோஸ் Xp அமைப்பில் செயல்படும் இந்த சாம்சங் லேப்டாப்பில் உலகின் மிக அபாயகரமான 6 வைரஸ்கள் உள்ளன. இந்த 6 வைரஸ்கள் இதுவரை 7லட்சம் கோடி வரையிலான சேதத்தை உலகில் ஏற்படுத்தியுள்ளது.

க்யோ ஒ டாங்

க்யோ ஒ டாங்

பின்பு இதனை உருவாக்கியவர் க்யோ ஒ டாங் என்பவர் ஆவார், சைபர் செக்யூரிட்டி துறையில் ஆழமான உள்ளுணர்வு கொண்ட இவரை ஒரு மிகப்பெரிய கலைஞர் என்று தான் அழைக்க வேண்டும். உலகத்தில் 7 லட்சம் கோடி வரையிலான சேதங்களை ஏற்படுத்திய ஒன்றை உருவாக்கிய கலைஞர்.

 1.2மில்லியன்

1.2மில்லியன்

10.5-இன்ச் கொண்ட லேப்டாப் தற்சமயம் ஏலம் விடப்பட்டுள்ளது, இதற்கான துவக்க விலையே 1.2மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்த லேப்டாப் ஏலம் விடப்படும் செய்தி வைரலானது, இந்த ஏலம் நிகழ்வு லைவ் ஆகக் ஒளிபரப்பப்படும் அளவுக்கு வரவேற்புப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காற்று கூட  நுழையமுடியாத ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது

காற்று கூட நுழையமுடியாத ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது

இதில் உள்ள அபாயகரமான வைரஸ்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்க இந்த லேப்டாப் தற்போது காற்று கூட நுழையமுடியாத ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது, பின்பு The Persistence of Chaos என்ற இணையதளத்தில் இந்த சாம்சங் லேப்டாப்-க்கான ஏலம் நடைபெறுகிறது.

Best Mobiles in India

English summary
worlds-most-dangerous-on-auction-for-1-2-million-the-persistence-of-chaos-news: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X