10 பணியாளர்கள் & 144 வெள்ளை டால்பின்கள் உயர்பலி கொடுத்து உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு.!

|

ஒன்பது வருட கட்டுமானத்திற்கு பிறகு சீனாவின் புதிய பிரம்மாண்ட பாலம் இன்று சீன அதிபர் ஸீ ஜிங்பிங்-ஆல் திறக்கப்பட்டது.

உலகின் நீளமான கடல் பாலம் சீனாவில் திறப்பு..

55 கிலோமீட்டர் நீளம் கொண்ட உலகின் நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த கட்டுமானம், பேர்ல் நதி முகத்துவாரத்தை கடந்து சீனாவின் மெயின் லேண்ட் நகரத்தை ஹாங்காங் மற்றும் மகாயு நகரங்களுடன் இணைக்கிறது. இந்த புதிய பாலமானது சான்பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பாலத்தை விட 20 மடங்கு நீளமானது.

ஹாங்காங்

ஹாங்காங்

இந்த பாலத்திற்கு அருகில் உள்ள ஹாங்காங் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதற்கும், தரையிறங்கவும் ஏதுவாக மற்றும் கப்பல்கள் கடப்பதற்கு வழிவிடும் வகையிலும், இந்த பாலத்தின் ஒரு பகுதி சுமார் 7 கிலோமீட்டர் நீளத்திற்கு கடலுக்கடியில் சுரங்கப்பாதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

4லட்சம் டன் இரும்பு

4லட்சம் டன் இரும்பு

இந்த பாலத்தை கட்டுவதற்காக சுமார் 4லட்சம் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சிட்னியின் ஹார்பர் பாலத்தை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதை போன்று 8 மடங்கு ஆகும். இந்த பாலமானது கடலின் தரைப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள தூண்கள், பிரம்மாண்ட கோபுரங்களின் தொங்கும் கேபிள்கள் மற்றும் இரு செயற்கை தீவுகளின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

நிலநடுக்கம்

பொறியாளர்களின் கருத்துப்படி,ரிக்டர் அளவுகோலில் 8 வரை பதிவாகும் நிலநடுக்கம், மிகப்பெரிய சூறாவளி அல்லது 3 லட்சம் டன் எடை கொண்ட கப்பலுடன் மோதல் போன்றவற்றை இந்த பாலம் தாக்குபிடிக்கவல்லது.

வெள்ளை டால்பின்கள்

வெள்ளை டால்பின்கள்

இந்த பாலத்தின் கட்டுமானப் பணியின் போது 10 பணியாளர்கள் இறப்பின் காரணமான கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது மற்றும் அப்பகுதியில் வசிக்கும் வெள்ளை டால்பின்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றிய பயமும் நிலவியது. 2003 188ஆக இருந்த வெள்ளை டால்பின்கள் படிப்படியாக குறைந்து தற்போது அப்பகுதியில் வெறும் 47மட்டுமே உள்ளது.

164 கிலோமீட்டர்

164 கிலோமீட்டர்

அனைத்துவகை பாலங்களிலும் மிகவும் நீளமான பாலமும் சீனாவில் தான் உள்ளது. சுமார் 164 கிலோமீட்டர் நீளமுடைய தான்யாங்- குன்சான் கிராண்ட் பாலம், ஷாங்காய் மற்றும் நான்ஜிங் இடையேயான நீர் மற்றும் நிலப்பரப்பை கடந்துசெல்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
World’s longest sea bridge opens between Hong Kong and mainland China: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X