உலகிலேயே இதுதான் கடைசி: அரியவகை உயிரினத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை!

|

வடகிழக்கு கென்யாவில் உள்ள உலகின் அரியவகை உயரினமான வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து பாதுகாக்க அதன் உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.

வித்தியாசமான உயிரினங்கள்

வித்தியாசமான உயிரினங்கள்

அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் வித்தியாசமான உயிரினங்களும் ஆச்சரியங்களும் நம்மை வியப்படைய செய்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற விஷயங்கள் நம்மை வியப்படைய செய்வதோடு பூரிக்க வைக்கும் விதமாகவே இருக்கிறது. உலகில் தொழில்நுட்பங்கள் வளர்ந்துக் கொண்டே போகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும், அதற்கு இணையான கண்டுபிடிப்புகளும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள்

வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள்

இந்த நிலையில் கென்யாவில் மார்ச் 2016 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன. லூசிசம் என்றழைக்கப்படும் அரிய மரபணு காரணமாக ஒட்டகச்சிவிங்கிகள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. ஒட்டகச்சிவிங்கிகள் அரியவகையில் காணப்பட்டாலும் இதற்கு தனித்துவமான பெயர்கள் இல்லை.

வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை பாதுகாக்கும் நடவடிக்கை

வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை பாதுகாக்கும் நடவடிக்கை

தற்போது வெள்ளை ஒட்டகச்சிவிங்கி தனியாக மேய்வதற்கு காரணம் இதேபோல் வெள்ளை நிறத்தில் இருந்த ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கி மற்றும் அதன் ஏழு மாத குட்டியும் கொல்லப்பட்டது. இதன்காரணமாக தற்போதுள்ள ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை பாதுகாக்கும் பொருட்டு இதன்மீது ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

வெள்ளை ஒட்டகச்சிவிங்கி மீது ஜிபிஎஸ் கருவி

வெள்ளை ஒட்டகச்சிவிங்கி மீது ஜிபிஎஸ் கருவி

எஞ்சியிருக்கும் இந்த ஒட்டகச்சிவிங்கி சோமாலியா எல்லைக்கு அருகிலுள்ள வறண்ட சவன்னா பகுதியில் சுற்றுவதால் வேட்டைக்காரர்களிடம் இருந்து பாதுகாக்க ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒட்டகச்சிவிங்கியின் கொம்பில் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஜிபிஎஸ் சாதனம் ஒட்டகச்சிவிங்கி இருக்கும் இடத்தை வனவிலங்கு பாதுகாவலர்களுக்கு தெரிவிக்க உதவும்.

Source: nrt-kenya.org

Most Read Articles
Best Mobiles in India

English summary
Worlds Last White Girafee Fitted With GPS tracker Device

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X