தெய்வம்., பூமியை பிளந்தும் கொடுக்கும்- கிணறு தோண்டும்போது கிடைத்த அபூர்வ கல்- 510 கிலோ, ரூ.745 கோடி மதிப்பு!

|

கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும் என சொல்வார்கள். ஆனால் தெய்வம் கொடுக்கனும்னு முடிவு பண்ணிட்ட கூரையை பிச்சுக்கிட்ட மட்டுமல்ல பூமியை பிளந்துக் கொண்டும் கொடுக்கும் என்பதற்கு சாட்சியாக இங்கு ஒரு நிகழ்வு அமைந்துள்ளது. அப்படி கிடைக்கப்பட்ட பொருளின் மதிப்பு இந்திய மதிப்புப்படி ரூ.700 கோடிக்கும் மேல் என கூறப்படுகிறது.

இலங்கையின் ரத்தினபுரி எனும் பகுதி

இலங்கையின் ரத்தினபுரி எனும் பகுதி

இலங்கையில் ரத்தினபுரி எனும் பகுதி அமைந்துள்ளது. ரத்தினபுரி என்று பெயருக்கு மட்டும் வைக்கவில்லை காரணத்தோடுதான் வைத்திருக்கிறார்கள். இந்த பகுதியில் ரத்தினங்கள் அதிகமாகவே இருக்கும் காரணத்தால் இந்த பகுதிக்கு ரத்தினபுரி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் கமாகே. இவர் ரத்தின வியாபாரி ஆவார். இந்த நிலையில் தனது வீட்டின் பின்பகுதியில் கிணறு தோண்ட முடிவெடுத்துள்ளார்.

கிணறு தோண்டும் போது கிடைத்த கல்

கிணறு தோண்டும் போது கிடைத்த கல்

இதையடுத்து பணியாளர்களை வீட்டுக்கு அழைத்து கிணறு தோண்ட தொடங்கியுள்ளார். கிணறு தோண்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கல் ஒன்று தட்டுப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வழக்கம் கிடைக்கும் சாதாரண கல் என்றே நினைத்து அதை ஒதுக்கி வைத்துள்ளார். பின் இந்த கல்லின் தோற்றம் நிறம் பார்த்த உடன் அவருக்கு ஏதோ சந்தேகம் தோன்றியுள்ளது.

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல்

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல்

இதையடுத்து அந்த கல்லை ஆய்வு செய்ய அது தொடர்பான நபர்களை அழைத்துள்ளார். இந்த கல் ஆய்வு செய்யப்பட்டதில் இது நட்சத்திர நீலக்கல் என்பது தெரிய வந்துள்ளது. உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் என்பது இது தெரியவந்துள்ளது. இது இலங்கையின் கொல்லைப்புறத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரத்தினபுரி பகுதி மாணிக்கம் நிறைந்த பகுதிதான் என பலரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இது இலங்கையின் மாணிக்க தலைநகரம் என அழைக்கப்படுகிறது.

நட்சத்திர நீலக்கல் எடை சுமார் 510 கிலோ

நட்சத்திர நீலக்கல் எடை சுமார் 510 கிலோ

கண்டெடுக்கப்பட்ட நட்சத்திர நீலக்கல் எடை சுமார் 510 கிலோ ஆகும். இது 2.5 மில்லியன் கேரட் எடையுள்ள சபையர் கொத்து என தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணத்துக்காக இந்த கல் கண்டெடுக்கப்பட்ட முழு இருப்பிட விவரங்கள் தெரியப்படுத்தவில்லை. அவர் பெயர் கமாகே என்பது பிபிசி செய்தி நிறுவனத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கற்கள் உதிர்ந்து உயர்தர நட்சத்திர சபையர்கள் காணப்பட்டது

கற்கள் உதிர்ந்து உயர்தர நட்சத்திர சபையர்கள் காணப்பட்டது

இந்த கல்லை சுத்தம் செய்யும் போது ஒருசில கற்கள் உதிர்ந்து உயர்தர நட்சத்திர சபையர்கள் காணப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் இது என கூறப்படுகிறது. இந்த பாறைக்கு செரிண்டிபிட்டி சபையர் என பெயரிடப்பட்டுள்ளது. இது தனியார் ரத்தின சேகரிப்பாளர் அல்லது அருங்காட்சியங்களுக்கு தேவையானதாக இருக்கும் என்று தாங்கள் நினைப்பதாக இலங்கை தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மதிப்பு 100 மில்லியன் டாலர்களாக இருக்கும்

மதிப்பு 100 மில்லியன் டாலர்களாக இருக்கும்

சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 100 மில்லியன் டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது இந்த நட்சத்திர நீலக்கல்லின் இந்திய மதிப்பு ரூ.745 கோடி ஆகும் என கூறப்படுகிறது. இது சுயாதீன சர்வதேச நிபுணர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Pic Courtesy: ScreenGrab by Ada Derana Video

Most Read Articles
Best Mobiles in India

English summary
Worlds largest star sapphire cluster found by digging well in Srilanka

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X