Home
News

இந்த iPhone விலை எவ்வளவு தெரியுமா? ஷாக்கில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் யூசர்கள்!

ஆப்பிள் (Apple) ஐபோன்களுக்கு (iPhone) இருக்கும் வரவேற்பு குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவை மற்ற போன்களைவிட அதிக விலைக்கு விற்றாலும், ஆண்டுக்கணக்கணக்கில் பணம் சேர்த்து வைத்து வாங்குவோர்களை பார்க்க முடியும். ஏன்? படித்து முடித்துவிட்டு, வேலைக்கு சென்ற பின்பு, முதலில் ஐபோன் வாங்க வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவ்வளவு மவுசு கொண்ட ஐபோன்களின் அம்சங்களை மட்டும் சும்மானு சொல்லிவிட முடியாது. அதன் விலைக்கேற்ப தரமாகவே இருக்கும். இந்த ஐபோன்களை வைத்தே பல யூடியூபர்கள், வீடியோக்களை எடுத்து பதிவிடுகின்றனர். ஆனால், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிரபல யூடியூபர் ஒருவர், தனது சொந்த செலவில் ஒரு ஐபோனையே உருவாக்கி காட்டியிருக்கிறார்.

இந்த iPhone போன் விலை எவ்வளவு? ஷாக்கில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் யூசர்கள்!

அதுவும், உலகமே வியக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் வடிவமைத்திருக்கிறார். இந்த போனின் அளவு 8 அடியை எட்டுகிறது. ஐபோன்களில் இருக்கும் பெரும்பாலான அம்சங்கள் கிட்டத்தட்ட இதிலும் இருக்கின்றன. குறிப்பாக, இந்த போன் உலகின் மிகப்பெரிய ஐபோன் (World's Largest iPhone) என்ற புகழைப் பெற்றுள்ளது. இந்த போனை உருவாக்க எவ்வளவு செலவு செய்யப்பட்டது.

இதற்கான காரணமென்ன உள்ளிட்ட விவரங்களை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நியூயார்க்கை சேர்ந்த யூடியூபர் மேத்யூ பீம் (YouTuber Matthew Beem) 40 லட்சத்துக்கும் அதிமான சப்ஸ்கிரைபர்களை வைத்துள்ளார். நம் நாட்டில் இருப்பதை போலவே, நியூயார்க்கிலும் யூடியூபர்கள் இடையே போட்டிகள் இருப்பதே, இவ்வளவு பெரிய ஐபோனை உருவாக்க காரணமாக இருந்திருக்கிறது.

ஆம், அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த யூடியூபர் Zach Hsieh, 2020ஆம் ஆண்டில் 6 அடி அளவில் ஐபோனை உருவாக்கியிருந்தார். இந்த போனே உலகின் மிகப்பெரிய ஐபோனாக கருதப்பட்டது. ஆனால், இந்த போனில் கொடுக்கப்பட்ட அம்சங்கள் ஐபோன்களில் இருக்கும் அளவுக்கு இருக்கவில்லை. இருப்பினும், இவரது முயற்சி பலரது பாராட்டையும், உலகளவில் பெயரையும் பெற்று தந்தது.

இந்த சாதனையை முறியடிக்க எண்ணிய யூடியூபர் மேத்யூ பீம், 8 அடி அளவில் ஐபோனை உருவாக்க திட்டமிட்டு, பல மாதங்களாக தொழில்நுட்ப வல்லுநர்களுடன் சேர்ந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டார். ஐபோன் ப்ரோ மேக்ஸ் போனை போலவே உருவாக்கும் பணி நடந்தது. கடந்த வாரம், ஒரிஜினல் ஐபோன்களின் இருக்கும் பெரும்பாலான ஆப்ஸ், கேமரா உள்ளிட்டவை கொண்டு 8 அடி அளவில் உருவாக்கி முடிக்கப்பட்டது.

இந்த போனை சில நாட்களுக்கு முன்பு நியூயார்க்கின் சப்வே சாலையில் பொதுமக்களின் பார்வைக்காக மேத்யூ பீம் வைத்தார். இதைக்கண்ட மக்கள், அந்த போனை பயன்படுத்திப் பார்த்து ஆச்சர்யப்பட்டனர். ஏனென்றால், அதில், ஆப்பிள் பே (Apple Pay), சபாரி பிரவுசர் (Safari Browser) உள்ளிட்ட ஆப்பிளின் பிரத்யேக ஆப்கள் முதல் இன்ஸ்டாகிராம் (Instagram), ட்விட்டர் (Twitter), பேஸ்புக் (Facebook) ஆப்கள் வரையில், ரெகுலர் போன்களில் பயன்படுத்துவதை போலவே இருந்துள்ளது.

இந்த போனுக்காக எல்இடி டிவிகளின் ஸ்கிரீன் பயன்படுத்தப்பட்டுள்ளது. லாக் பட்டன், வால்யூம் பட்டன்கள் மற்றும் மியூட் பட்டன் இடம்பெற்றுள்ளன. கேமராக்கள் உள்ளன. ஐபோன்களில் வரும் பினிஷிங் செய்யப்பட்டுள்ளது. இந்த போனை உருவாக்குவதற்கான செலவு, மற்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறித்து, மேத்யூ பீம் தனது, யூடியூப் பக்கத்தில் வெளியிட உள்ளார். இன்றைய நிலவரப்படி, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) போனே 6.7 இன்ச் அளவுடன் மிகப்பெரிய போனாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
World's Largest iPhone Measuring 8 Feet Built By YouTuber Matthew Beem
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X