Home
News

இந்த அம்சம் உலகத்துலயே இந்த Headphones-ல மட்டும் தான் இருக்கிறதாம்! அப்படி என்னப்பா புது அம்சம் இது?

டெக் துறையில் புதுமைக்கு பஞ்சமே இல்லை. தினமும் எதாவது ஒரு தொழில்நுட்ப புதுமைகளை படைப்பாளிகள் உருவாக்கிக்கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ஒரு புதுமையான ஹெட்போன்ஸ் வெளியாகியுள்ளது. இதற்கு முன் உலகத்தில் உள்ள எந்த சாதனத்திலும் இடம்பெறாத ஒரு அம்சம் இதில் உள்ளதாம்.

ஹெட்போன்ஸ் என்பது உலகளவில் அணைத்து மக்களாலும் பயன்படுத்தப்படும் சாதனமாகும். ஸ்மார்ட்போன், லேப்டாப், கேமிங் கருவிகள், கம்ப்யூட்டர் என்று எல்லாவற்றுடனும் ஹெட்போன்ஸ் சாதனங்கள் இணக்கமானவை. ஹெட்ஃபோன்களில் இருந்து எதிர்பார்க்கப்படும் அடுத்த பெரிய தொழில்நுட்பம் என்றால் அது லாஸ்லெஸ் ஆடியோ அம்சம் தான். லாஸ்லெஸ் ஹை-ரெஸ் ஆடியோ அம்சத்தை பல நிறுவனங்கள் கைப்பற்ற போராடி வரும் நிலையில், இறுதியாக ஒரு நிறுவனம் இதை அறிமுகம் செய்துவிட்டது.

இந்த அம்சம் உலகத்துலயே இந்த Headphones-ல மட்டும் தான் இருக்கிறதாம்!

யூனிட்டி என்று அழைக்கப்படும் ஒரு பிராண்டில் இருந்து இந்த புதிய ஹெட்போன்ஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்வீடனைச் சேர்ந்த ஆடியோ நிறுவனமான ஹெட் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் இதற்கு முன்பு பெரிய அளவில் கேள்விப்படாத ஒரு நிறுவனம் தான் என்றாலும் கூட, இது வைஃபை லாஸ்லெஸ் ஹெட்ஃபோன்களை உலகிற்கு முதன்முதலில் அறிமுகம் செய்கிறது என்ற பெருமையை கொண்டுள்ளது.

லாஸ்லெஸ் ஹெட்ஃபோன்கள் என்றால் என்ன? இது என்ன செய்யும்? இது முக்கியமாக Wi-Fi இணைப்பைப் பயன்படுத்தி உங்கள் காதுகளுக்கு லாஸ்லெஸ் ஆடியோவை நேரடியாகக் கொடுக்கிறது. புளூடூத் இணைப்புடன் கூடிய பாரம்பரிய ஹெட்ஃபோன்களால் இதை செய்ய முடியாது என்பதே உண்மை. தற்போது நாம் கேட்கும் பாடல்களுடன் ஒப்பிடுகையில், தரவுகளைச் சேமிப்பதற்காக இவை கம்ப்ரெஸ் செய்யப்படும் போது, அசல் தரவை இழக்க நேரிடுகிறது.

ஆனால், லாஸ்லெஸ் ஆடியோவுடன் இனி அசல் தரவை நாம் இழக்க வேண்டியதில்லை. அசல் ஹை-ரெஸ் ஆடியோ தரத்தை எந்தவித இழப்புகளும் இல்லாமல் மிகவும் துல்லியமாக நம்மால் கேட்க முடியும். யூனிட்டி வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் Wi-Fi இணைப்புடன் புளூடூத்தை ஆதரிக்கின்றன. இது 40mm டிரைவர்களை கொண்டுள்ளது. இவை USB டைப்-சி போர்ட் உடன் ஆதரிக்கிறது. எனவே இவற்றை நீங்கள் வயர்டு ஹெட்ஃபோன்ஸ் சாதனமாகவும் பயன்படுத்த முடியும்.

இந்த அம்சம் உலகத்துலயே இந்த Headphones-ல மட்டும் தான் இருக்கிறதாம்!

இது தவிர, இந்த ஹெட்ஃபோன்ஸ் 16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருவதால், ஹை-ரெஸ் இசையையும் நீங்கள் நேரடியாக ஸ்டோர் செய்து கேட்கலாம். Wi-Fi நெட்வொர்க் இல்லாவிட்டாலும், நீங்கள் ஹை-ரெஸ் இசையைக் கேட்க முடியும் என்பதே இதன் பொருள். நிறுவனத்தின் தகவல் படி, யூனிட்டி ஹெட்ஃபோன்ஸ் Wi-Fi வழியாக 24-பிட்/96kHz வரை லாஸ்லெஸ் ஹை-ரெஸ் இசையை ஆதரிக்குமாம். ஹெட் இந்த ஆடியோ தொழில்நுட்பத்தை "ஃபுல்-ஃபிடிலிட்டி ஸ்டாண்டர்ட்" என்று அழைக்கிறது.

இந்த ஹெட்போனின் பேட்டரி யூசேஜ் பற்றி பார்க்கையில், இந்த லாஸ்லெஸ் ஹை-ரெஸ் ஆடியோ மோட் மற்றும் புளூடூத் மோட் ஆகிய இரண்டு மோட்களிலும் சிறப்பாக முறையே ஆறு முதல் எட்டு மணிநேரம் வரை இயங்குகிறது. இந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் செயலில் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் EQ அம்சம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Spotify, Soundcloud போன்ற பிரபலமான இசைச் சேவைகளுடன் இணைக்கக்கூடிய இன்-ஹவுஸ் பிளேயர் ஆப்ஸுடன் இது இணக்கமானது.

உலகத்தின் முதல் லாஸ்லெஸ் ஹை-ரெஸ் ஆடியோ அம்சம் கொண்ட இந்த யூனிட்டி ஹெட்போன்ஸ் சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இந்த யூனிட்டி வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் $ 2,199 என்ற மிகப்பெரிய விலையைக் கொண்டுள்ளது. அதாவது, இந்திய மத்திபில் இதன் விலை சுமார் ரூ. 1,80,000 என கூறப்பட்டுள்ளது. getunity.com தளம் வழியாக இப்போது வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Worlds first Unity headphones device with lossless hi-res audio feature
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X