இனி செல்ஃபீ கேமரா கண்ணுக்குத் தெரியாது.! செல்ஃபீ கேமராவை எங்க ஒளிச்சு வச்சுட்டாங்க தெரியுமா?

|

பிரபல ஸ்மார்ட்போன் டிசைனர் பென் ஜேஷ்கின், கடந்த மாதம் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளிக்கும்பொழுது ஒப்போ நிறுவனம் உலகின் முதல் அண்டர் டிஸ்பிளே கேமராவை உருவாக்கிவருவதாக இவர் சந்தேகிக்கிறார் என்று தெரிவித்திருந்தார். தற்பொழுது அவரின் சந்தேகம் உண்மை ஆகிவிட்டது.

அண்டர் டிஸ்பிளே செல்ஃபீ கேமரா தொழில்நுட்பம்

அண்டர் டிஸ்பிளே செல்ஃபீ கேமரா தொழில்நுட்பம்

ஒப்போ நிறுவனம் உலகின் முதல் அண்டர் டிஸ்பிளே செல்ஃபீ கேமரா தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. உலகில் முதல் முறையாக ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேயின் கீழ் பொருத்தப்பட்டுள்ள செல்ஃபீ கேமரா தொழில்நுட்பத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்போ நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

ஒப்போ செய்த டுவீட் இதுதான்

ஒப்போ நிறுவனம் இரண்டு தினத்திற்கு முன்பு, அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் " சரியான, அட்டகாசமான நாட்ச் இல்லாத ஸ்கிரீன் அனுபவத்தை முழுமையாய் அனுபவிக்க விரும்பும் பயனர்களுக்கு, இந்த செய்தி நிச்சயம் வியப்பூட்டக் கூடும். நீங்கள் எதிர்பார்த்திடாத உலகின் முதல் அண்டர் டிஸ்பிளே செல்ஃபீ கேமரா தொழில்நுட்ப"த்தை அறிமுகம் செய்கிறோம் என்று டுவீட் செய்திருந்தது.

இவங்க எல்லாம் பெரிய விஞ்ஞானி பாஸ்: உண்மையாத்தா இதை பாருங்க.!இவங்க எல்லாம் பெரிய விஞ்ஞானி பாஸ்: உண்மையாத்தா இதை பாருங்க.!

கேமராவ இங்கதான் ஒளிச்சு வச்சிருக்காங்க

கேமராவ இங்கதான் ஒளிச்சு வச்சிருக்காங்க

தற்பொழுது ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய அண்டர் டிஸ்பிளே செல்ஃபீ கேமரா தொழில்நுட்பத்தின் படி, ஸ்மார்ட்போனின் செல்ஃபீ கேமரா டிஸ்பிளேயின் கீழ் பொருத்தப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள கேமராக்களை போல் முழு தரத்துடன் இந்த கேமராக்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல மாற்றங்களை நோக்கி

இன்னும் பல மாற்றங்களை நோக்கி

தொடக்கநிலையில் தான் இந்த தொழில்நுட்பம் தற்பொழுது இருக்கிறது, இன்னும் பல மாற்றங்களை ஒப்போ நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போதிருந்து இந்த தொழில்நுட்பம் விற்பனை ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமும் 1.5ஜிபி முதல் 5ஜிபி வரை டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ.!தினமும் 1.5ஜிபி முதல் 5ஜிபி வரை டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ.!

ஒப்போவுக்கு சியோமி கொடுத்த பதிலடி இதுதான்

ஒப்போவுக்கு சியோமி கொடுத்த பதிலடி இதுதான்

ஒப்போ நிறுவனம் அண்டர் டிஸ்பிளே செல்ஃபீ கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த அடுத்த இரண்டு மணி நேரத்தில், சியோமி நிறுவனமும் அதன் அண்டர் டிஸ்பிளே செல்ஃபீ கேமரா தொழில்நுட்பம் பற்றிய தகவளை டுவீட் செய்தது. ஆனால் சியோமி நிறுவனம் ஒருபடி அதிகம் போய் எந்த ஸ்மார்ட்போனில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது என்ற தகவலையும் வெளியிட்டிருந்தது.

யாரு ஃபர்ஸ்ட்னு பார்க்கலாம்

சியோமி நிறுவனம், அடுத்து அறிமுகம் செய்யக் காத்திருக்கும் சியோமி மி 9 ஸ்மார்ட்போனில் தான் இந்த அண்டர் டிஸ்பிளே செல்ஃபீ கேமரா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. இப்பொழுது ரசிகர்களுக்கு எழுந்த உள்ள மிகப் பெரிய கேள்வி, எந்த நிறுவனம் முதலில் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் என்பது தான்.

போலீசையே ஏமாற்றி ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த போலி போலீசையே ஏமாற்றி ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த போலி "பேஸ்புக்" ஐபிஎஸ் அதிகாரி.!

Best Mobiles in India

English summary
World's First Under Display Selfie Camera TEchnology Introduced By Oppo : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X