இதெல்லாம் யார் வாங்குவான்னு சொன்ன ஸ்மார்ட்போனை.. அடிச்சு புடிச்சு வாங்கிய 4 லட்சம் பேர்.. என்ன மாடல்?
இதெல்லாம் யார் வாங்குவார்கள் என்று பேசப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் தற்போது 4 லட்சம் யூனிட்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2025 பிப்ரவரி மாதம், ஹூவாய் நிறுவனம் மேட் எக்ஸ்டி (Huawei Mate XT) என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து ஒட்டுமொத்த மொபைல் மார்க்கெட்டிலும் பெரிய அளவிலான அதிர்வலைகளை உண்டாக்கியது.
ஏனென்றால் ஹுவை மேட் எக்ஸ்டி என்பது ஒரு ட்ரை போல்ட் ஸ்மார்ட்போனாகும். அதாவது மூன்றாக மடக்க கூடிய டிஸ்பிளேக்களை கொண்ட ஸ்மார்ட்போனாகும். முன்னரேகுறிப்பிட்டபடி, அறிமுகமான நேரத்தில் "இதெல்லாம் வியாபாரம் ஆகாது!" என்றே யூகிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஸ்மார்ட்போன் செம்ம டிமாண்டில் உள்ளது.

ஸ்மார்ட் சிப் கன்சல்டன்ட் என்று அழைக்கப்படும் டெக் பிளாக்கரின் கூற்றுப்படி, ஹூவாய் நிறுவனத்தின் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை கடந்துள்ளது. அவரின் கூற்றுப்படி மேட் எக்ஸ்டி ஏற்கனவே 400,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்றுள்ளது. ஆடம்பர அடுக்கு விலை நிர்ணயத்தில் (Luxury Tier Price Range) உள்ள ஒரு ஸ்மார்ட்போனுக்கு இது (அதாவது 4 லட்சம் யூனிட்கள் என்பது) ஒரு விதிவிலக்கான எண்ணிக்கையாகும்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூவாய் மேட் எக்ஸ்டி தான் - உலகின் முதல் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போனாகும். இதன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொறியியல் கண்டுபிடிப்புகளுக்காக இது வாடிக்கையாளர்கள் மத்தியில் உடனடி கவனத்தை ஈர்த்தது. அதன் தொடர்ச்சியாக 4 லட்சம் யூனிட்களை தாண்டிய விற்பனையை சந்தித்துள்ளது
ஹூவாய் மேட் எக்ஸ்டி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஹார்மனிஓஎஸ் 4.2 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது மொத்தம் 3 டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. முழுமையாக விரித்தால் இது 10.2-இன்ச் (3184 x 2232 பிக்சல்கள்) பிலெக்ஸிபிள் LTPO OLED டிஸ்பிலேவாக இருக்கும்.
அதை ஒருமுறை மடித்தால் 7.9-இன்ச் (2048 x 2232 பிக்சல்கள்) டிஸ்பிளேவாக மாறும். இரண்டாவது முறை மடித்தால் இது 6.4-இன்ச் திரை (10328 x 22308 x 2232, பிக்சல்கள்) டிஸ்பிளேவாக மாறும். ஹூவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைன் ஸ்மார்ட்போன் ஆனது எந்த சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது என்கிற விவரங்களை ஹூவாய் இன்னும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அது 16ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 256GB, 512GB மற்றும் 1TB என மொத்தம் 3 வகைகளில் கிடைக்கும்.
கேமராக்களை பொறுத்தவரை, வெளிப்புறத்தில், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS - optical image stabilization) கொண்ட 50-மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது 12-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (Ultra-wide camera) மற்றும் 12-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவையும் (Periscope Telephoto camera) கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Fingerprint Scanner) உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, இது 66W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கடைசியாக, அளவீடுகளில் இது சிங்கிள் ஸ்க்ரீனின் போது 156.7x73x12.8மிமீ, டபுள் ஸ்க்ரீனின் போது 156.7x143x7.45மிமீ மற்றும் ட்ரிபிள் ஸ்க்ரீனின் போது 156.7x219x3.6மிமீ உள்ளது. எடையை பொறுத்தவரை 298 கிராம் உள்ளது.
ஹூவாய் மேட் எக்ஸ்டி ஸ்மார்ட்போனின் விலை: சீனாவில் தற்போது, இந்த ஸ்மார்ட்போனின் 16GB+512GB மற்றும் 16GB+1TB மாடல்கள் முறையே 21,999 யுவான் (ரூ.2,56,830) மற்றும் 23,999 யுவான் (ரூ.2,80,180) க்கு வாங்க கிடைக்கின்றன. இருப்பினும், 19,999 யுவான் (ரூ.2,33,480) மதிப்புள்ள 16GB+256GB ஆப்ஷன் கையிருப்பில் இல்லை - ஒருவேளை குறைந்த உற்பத்தி அல்லது குறைந்த தேவை காரணமாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications