பட்டாசா வெளியான வீடியோ.. உலகின் முதல் ஸ்மார்ட்வாட்ச் இது தான்.. இது வெளியான வர்ஷத்த சொன்னா நம்பமாடீங்க..
உலகின் முதன் ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) பற்றிய கானொளியை மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் (Rajeev Chandrasekhar) தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "நோக்கத்திற்கான தேடுதலில் தொழில்நுட்பம்" என்று அவர் வெளியிட்ட பதிவு இப்போது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்று உலகையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பல தொழில்நுட்பங்கள் சிறய முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டு கண்டுகொள்ளப்படாமல் இருந்தவை தான். அறிவியல் கோட்பாடுகளில் ஆரம்பித்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகள் வரை அனைத்தும் இந்த நிலையை கடந்தே நம் கவனத்திற்கு வந்து சேர்ந்திருக்கும். மின்சாரம், கணினி, ஸ்மார்ட்போன் என்று அனைத்துமே மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக உருவெடுக்கும் என்று அதனை கண்டுபிடித்தவர் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

Smartwatch: ஸ்மார்ட் கேட்ஜெட்டுகளின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் ஆரோக்கியம் என்று இரன்டையும் இணைக்கும் நவீன கருவியாக வலம் வந்துகொண்டிருப்பது ஸ்மார்ட்வாட்ச்கள். வாட்ச் என்பது மணி பார்க்க பயன்படும் கருவி என்பதை தாண்டி தகவல் பரிமாற்றம், ஹெல்த் மானிட்டர் (Health Monitor) என்று பல அம்சங்களுடன் ஸ்மார்ட்வாட்ச்கள் விற்பனைக்கு வர ஆரம்பித்துவிட்டனர். ஸ்மார்ட்வாட்ச் தாயரிப்பாளர்களும் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் சேர்த்துகொண்டே வருகின்றனர்.
இத்தகைய நவீன கருவியான ஸ்மார்ட்வாட்ச் சமீபகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று என்று தானே நீங்கள் நினைத்திருப்பீர்கள். அது தான் இல்லை. இந்தியாவின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இதற்கான பதில் உள்ளது. "நோக்கத்திற்கான தேடுதலில் தொழில்நுட்பம்" என்ற டேக் லைனுடன் உலகின் முதல் ஸ்மார்ட்வாட்ச் பற்றிய பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
1982 ஆம் ஆண்டு நடக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் கானொளி ஒன்றை மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ளார். கம்ப்யூட்டர் சார்ந்த தகவல்களை வெளியிடும் நிகழ்ச்சியான தி கம்ப்யூட்டர் க்ரோனிகள்ஸ்-ல் (The Computer Chronicles) தொகுப்பாளர்கள் ஸ்டீவர்ட் சீஃபெட் மற்றும் கேரி கில்டால் உலகின் முதல் ஸ்மார்ட்வாட்ச்சை கையில் ஏந்தி இருக்கும் கானொளி தான் அது.

சிறிய கீபோர்ட் போன்ற ஒரு கருவியும் அதனுடன் வாட்ச் போன்ற ஒரு கருவியும் அதில் காட்சி படுத்தப்பட்டிருக்கும். கீபோர்டுடன் அந்த ஸ்மார்ட் வாட்சை இணைத்தால் அந்த ஸ்மார்ட் வாட்ச் ஒரு கணினி போல செயல்படும். தகவல்களை ஸ்மார்ட் வாட்சின் திரையில் டைப் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம். பின்பு அந்த ஸ்மார்ட் வாட்சை கீபோர்டில் இருந்து பிரித்து எடுத்து கைகளில் அணிந்து எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.
செய்கோ (Seiko): என்ற ப்ராண்டின் முதல் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பான இது யூசி-2000 (UC-2000) என்று பெயர் சூட்டப்பட்ட மினியேச்சர் டேட்டா ஸ்டோரிங் கேட்ஜெட்டாகும் (Miniature Data Storing Gadget). இந்த கேட்ஜெட் பற்றிய கானொளியை பதிவிட்டு "1982 ஆம் ஆண்டின் முதல் ஸ்மார்ட் வாட்ச்சில் ஆரம்பித்து இன்றைய மார்வல் வரை தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி" என்ற அவரது பதிவு தொழிநுட்பம் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பது சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
உலகின் முதல் ஸ்மார்ட் வாட்சான செய்கோ யூசி-2000 இன்றைய நவீன ஸ்மார்ட் வாட்ச்சின் அம்சங்கள் இல்லை என்றாலும், தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளை பதிவு செய்து வைக்கும் வகையில் 2000 கேரக்டர்களுக்கான கொள்ளவை கொண்டிருந்தது.


Click it and Unblock the Notifications








