சிங்கிள் டச் டிஸ்பிளே உடனே விரிவடையும்.. உலகின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போன்.. யார் உருவாக்கியது தெரியுமா?
எதிர்கால ஸ்மார்ட்போன்கள் என்ன வடிவில் இருக்கும் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரியாதென்றால், இப்போது தெரிந்துகொள்ளுங்கள். அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்கள் ரோலபில் டிஸ்பிளேவுடன் (Rollable display) வரக்கூடிய ஸ்மார்ட்போன்களாக இருக்க போகிறது என்பதே உண்மையாகும்.
போல்டபில் ஸ்மார்ட்போன்கள் இப்போது புது டிரெண்டாகி வருகின்றன. இதற்கு அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களாக ரோலபில் டிஸ்பிளேவுடன் சிறிய சைஸ் இல் இருந்து பெரிய சைஸ் மற்றும் பெரிய சைஸ் டிஸ்பிளேவில் இருந்து சுருங்கி சிறிய டிஸ்பிளே போனாக உருமாறும் ரோலபில் ஸ்மார்ட்போன்கள் தான் இனி மொபைல் மார்க்கெட்டை நிரப்பப்போகின்றன.

இதற்கு சாட்சியாக, விவோ (Vivo) மற்றும் டிரான்சிஷன் (Transsion) ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ரோலபில் டிஸ்பிளேவுடன் இயங்க கூடிய உலகின் முதல் ரோலபில் டிஸ்பிளே ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் கான்செப்ட் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ரோலபில் ஸ்மார்ட்போன்களின் முன்மாதிரிகளை நிறுவனம் இப்போது வெளியிட துவங்கியுள்ளது.
ஆனால், இன்னும் வணிகரீதியாக இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படவில்லை. இரண்டு சீன நிறுவனங்களும் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரோலபில் ஸ்மார்ட்போன்களை நுகர்வோருக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளன. 2024-ல் முதல் ரோலபில் ஸ்மார்ட்போன்களை Vivo மற்றும் Transsion கட்டாயம் அறிமுகம் செய்யுமென்று கூறியுள்ளது. இப்போதிலிருந்து இன்னும் 1 ஆண்டு காலத்திற்குள் இது சந்தையை எட்டும் என்று விவோ உறுதியளித்துள்ளது.
சீன நிறுவனங்கள் ரோலபில் ஸ்மார்ட்போன்களை முன்னோக்கி தள்ளுவதற்கான காரணம் சாம்சங்கை விட முன்னேற துடிப்பதாக டெக் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. போல்டபில் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங்கை மிஞ்சுவது 'கடினம்' என்பதை இந்நிறுவனங்கள் உணர்ந்துள்ளன என்பது மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கான எதிர்கால டிஸ்ப்ளேக்களைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கியுள்ளது.
இதில் ரோலபில் டிஸ்ப்ளேக்களும் அடங்கும். ஆனால், இப்போதைக்கு இது பெரும்பாலும் போல்டபில் ஸ்மார்ட்போன்களின் சந்தையில் கவனம் செலுத்தும். முதல் ரோலபில் ஸ்மார்ட்போன்களுடன், சீன நிறுவனங்கள் பந்தயத்தில் ஒரு தொடக்கத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்கை போலவே, விவோ நிறுவனமும் மொபைல் சந்தையில் போல்டபில் போன்களைக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், Vivo X Fold2 மற்றும் Vivo X Flip ஆகிய சாதனங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. முந்தையது புக் டைப் போல்டபில் சாதனமாகும். பிந்தையது நிறுவனத்தின் முதல் கிளாம்ஷெல் போல்ட் ஸ்மார்ட்போனாக வெளிவந்தது. விவோவின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே CSOT, சீனா ஸ்டார் ஒப்டாஎலக்ட்ரானிக்ஸ் (China Star Optoelectronics) மூலம் வழங்கப்படும் என ஊகிக்கப்படுகிறது.
மற்றொரு புறம் டெக்னோ நிறுவனம், அதன் டெக்னோ பாண்டம் அல்டிமேட் என்ற ரோலபில் ஸ்மார்ட்போன் சாதனத்தை டீஸ் செய்துள்ளது. இது ஒரு கான்செப்ட் ஸ்மார்ட்போன் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. Tecno Phantom Ultimate இன் டிஸ்பிளே ஆனது மேலே உள்ள ஒரு பட்டனை பிரஸ் செய்தவுடன் ஒரு பெரிய டிஸ்பிளேவாக விரிவடைகிறது. இந்த சாதனம் 6.55' இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஒருமுறை வெளிவந்தவுடன் 7.11' இன்ச் டிஸ்ப்ளேவாக விரிவடைகிறது.
இது 2,296 x 1,596 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 388 PPI கொண்ட AMOLED டிஸ்பிளேவாகும். கூடுதல் டிஸ்ப்ளே பின்புற பேனலில் தெரியும். டெக்னோ ஃபோனில் இருந்து வெளிவருவதற்கு ஒரு சிங்கிள் டிரைவ் மோட்டார் அமைப்பை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இது டெக்னோவின் இரண்டாவது கான்செப்ட் ஸ்மார்ட்போன் ஆகும். சீன நிறுவனம் Infinix மற்றும் itel உட்பட பல பிராண்டுகளும் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களின் மீது சைலெண்டாக கவனம் செலுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications








