ஐபேட் உடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கட்டில் அறிமுகம்-ரூம் போட்டு யோசிப்பாங்களோ.!
இருந்தபோதிலும் இந்த தயாரிப்புக்கு அனைத்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்புயுள்ளது.
இப்போது வரும் சில புதிய தொழில்நுட்பங்கள் பல்வேறு வகையில் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, அதன்படி உலகின் முதல்முறையாக ஐபேட் உடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கட்டில் ஒன்று அறிமுகம்
செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் இந்த தயாரிப்புக்கு அனைத்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்புயுள்ளது, மேலும் ஐபேட் உடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கட்டில் தயாரிப்பு மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

பிர்ங்காம்
இங்கிலாந்தின் நாட்டில் பிர்ங்காம் எனும் நகரில் Babeek என்ற குழைந்தகளுக்காக ஃபர்னிச்சர் தயாரிப்பு விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது, இந்த நிறுவனம் தான் ஐபேட் உடன் கூடிய குழந்தைகளுக்கான கட்டிலை வடிவமைத்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

உரிமையாளர்
மேலும் அந்நிறுவனத்தின் உரிமையாளர் Gary Taylor என்பவரின் 9 மாத குழந்தையை தூங்க வைக்க அவர் மிகுந்த சிரமம் அனுபவித்து வந்ததால், ஐ-பேட் உடன் கூடிய கட்டிலை தயாரிக்கும் எண்ணம் அவருக்கு தோன்றியதன் விளைவாக இந்த கட்டில் தயாரித்ததாக Taylor கூறியுள்ளார்.

வீடியோக்கள்
பின்பு இதனால் ஐபேடில் உள்ள வீடியோக்களை பார்த்தவாறே குழந்தை எளிதில் தூங்கிவிடுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த காட்டிலின் விலை சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்கள்
வளர்ந்துவிட்ட தொழில்நுட்ப உலகில் குழந்தைகள் கூட மொபைல் உள்ளிட்ட சாதனங்களின் தாக்கத்திற்கு ஆளாகிவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்த வண்ணம் உள்ளனர், இந்நிலையில் இது போன்ற கட்டிலை
வடிவமைத்த அந்நிறுவனத்திற்கு சமூக வலைத்தளங்களில் பெற்றோர்கள் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.

அபாயம்
இது போன்று குழந்தைகளை தூங்கும் படுக்கையிலேயே அப்படிப்பட்ட ஒரு சாதனத்தை இணைத்தால், குழந்தைப் பருவம் தொட்டே அவர்களின் நடவடிக்கைகள் முடக்கப்படும் அபாயம் இருப்பதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications