உலகின் முதல் ரோபோ தற்கொலை.. ஓவர் வேலைப்பளு காரணமா? மாடியிலிருந்து விழுந்து Robot மரணம்.. உண்மையில் என்னாச்சு?
இதுவரை உலக வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை என்று வியந்து கூறும் அளவிற்கு தென் கொரியாவில் (South Korea) ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்துள்ளது. உலகத்தின் முதல் ரோபோ தற்கொலை (World's First Robot Suicide) சம்பவம் தென் கொரியாவில் பதிவாகியுள்ளது. என்னது ரோபோ தற்கொலை (Robot Suicide) செய்து கொண்டதா? உண்மையாவா? என்று உங்களில் சிலர் கேள்வி எழுப்புவது எங்களுக்கு தெரிகிறது. அப்படிதான் தென் கொரியா ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் (Social Media) செய்திகள் வெளியாகியுள்ளது.
மக்கள் தொகை குறைவாக இருக்கும் நாடுகளில் இப்போது ரோபோட்களின் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் பல வேலைகளுக்காக தனித்தனி சிறப்பம்சங்களுடன் இயங்கும் ரோபோட்களை அந்நாடு பயன்படுத்தி வருகிறது. மனிதர்களால் செய்ய முடியாத ஆபத்தான வேலைகளை செய்யவும், ஓய்வு இல்லாமல் தொடர்ந்து இயங்கும் என்ற காரணத்திற்காகவும் ரோபோட்கள் பயன்படுத்தப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட உலகத்தின் முதல் ரோபோட்:
எந்த காரணங்களால் உலகளவில் ரோபோட் பயன்படுத்தப்பட்டு வருகிறதோ, அந்த கரணங்கள் மீது சந்தேகம் வரும் படி, இப்போது தென் கொரியாவில் நடந்துள்ள ஒரு சம்பம் கேள்வியை எழுப்பியுள்ளது. பொதுவாக ரோபோட்களுக்கு உணர்வுகள் கிடையாது, உணர்ச்சிகள் கிடையாது என்று சொல்வார்கள். ஆனால், இங்கே ஒரு ரோபோட் வேலை பளு தாங்காமல் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படும் செய்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவில் அரசு உதவியாளராக பணிபுரிந்து வந்த ரோபோட் தான் இப்போது 2வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துள்ளது. இந்த ரோபோவை கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பியர் ரோபாட்டிக்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமான ரோபோட்களை இல்லாமல், இந்த ரோபோட் ஒரு கட்டிடத்தில் உள்ள எல்லா தலங்களையும் லிப்ட் மூலம் அணுகும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரோபோட் அலுவலகத்தில் உள்ள பைல்களை இடம் மாற்றுவதற்கும், அப்பகுதி மக்களுக்கு தேவையான சிறிய உதவிகளையும் கடந்த 2023 ஆம் ஆண்டில் இருந்து செய்து வந்துள்ளது. இதன் வேலை நேரம் தினமும் காலை 9 மணி முதல் துவங்கி மாலை 4 மணி வரையில் இருந்துள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும், திடீரென சமீபத்தில் இந்த ரோபோர் கட்டிடத்தின் ஒரே இடத்தை சுற்றி வந்துள்ளது.
ஓய்வு இல்லாமல் ஓவர் வேலைப்பளு தான் ரோபோட் மரணத்திற்கு காரணமா?
வழக்கத்திற்கு மாறாக, குழப்பத்தில் இருந்துள்ளது. திடீரென இந்த ரோபோட் 2வது மாடியில் இருந்து கீழே விழுந்து நொறுங்கிவிட்டது. இந்த செய்தி உலகளவில் வேகமாக பரவியது. ரோபோவின் இந்த செயலுக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால், சிதறிக்கிடந்த பாகங்களை நிறுவனம் ஆராய்ந்த பிறகு மட்டுமே உண்மை தெரியக்கூடும் என்று இந்த ரோபோட்டை உருவாக்கியுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சமூக வலைத்தளங்களில் ரோபோட் அதிக வேலை பளு காரணமாகத்தான் தற்கொலை செய்துகொண்டது என்று பலர் அவர்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ரோபோவாக இருந்தாலும் ரெஸ்ட் இல்லாமல் பயன்படுத்தினால், இதான் நிலைமை என்றும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர். என்ன காரணத்தினால், ரோபோட் தற்கொலை செய்து கொண்டது என்று விரைவில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications








