"ஸ்கை" பறக்கும் வாகனம்.! கெத்தா பறந்து வரும் ஃபிளையிங் கார்.!

|

அலக்கா-ஐ டெக்னாலஜிஸ்(Alaka'i Technologies) என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம், ஸ்கை(Skai) என்ற பெயரில் புதிய பறக்கும் வாகனத்தை உருவாக்கி உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பார்ப்பதற்குச் சிறிய ஹெலிகாப்டர் போல இருக்கும் இந்த பறக்கும் 5 பேர் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம் சுற்றுபுறச்சூழகுக்கு ஏற்ற வகையிலும், மாசு மற்றும் நச்சுப் புகையை வெளியிடாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கை வாகனம் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக 644 கிலோ மீட்டர் துறை வரை பயணிக்க முடியும்.

இதில் அதிநவீன சூப்பர் டர்போ ரோட்டார்கள் மற்றும் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 6 மோட்டார் டிசைன் பிஎம்டபிள்யூ நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் ஸ்கை வாகனத்தில், 6 ரோட்டர்களில் 4 பெரிய ரோட்டரும் 2 சிறிய றோட்டரும் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் உதவியுடன் ஸ்கை வாகனம் செங்குத்தாக டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் முன் பகுதியில் ஓட்டுநருக்கான ஒரு இருக்கையும் பயணிகளுக்காக 4 இருக்கைகளும் பின்னால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கை வாகனத்தை டாக்ஸி மற்றும் ஆம்புலன்ஸ் ஆகா பயன்படுத்தப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான விலை மற்றும் இந்த வாகன சேவை எப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் என்ற விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Skai taxi could be the first taxi to run on hydrogen fuel cell : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X