பார்வையற்றவர்களுக்கு சரியான நண்பன் - தி டாட்..!

Posted By:

ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக ஸ்மார்ட் வாட்ச்களும் பிரபலமாகிக் கொண்டே தான் இருக்கின்றன. அது ஒருபக்கம் இருக்க தொழில்நுட்பம் மக்களை சோம்பேறியாக மாற்றும் வேலையை மட்டும் செய்யவில்லை, மனித வாழ்வை மேம்படுத்தவும் செய்கிறது என்பதை உரக்க சொல்லும்படி உருவாக்கம் பெற்று, வெளியாகி உள்ளதுதான் - தி டாட் (The Dot)..!

கடன் வாங்கியாச்சும் 'இதை' வாங்கிடனும்..!

பார்வையற்றவர்களுக்கு சரியான நண்பன் - தி டாட்..!

'தி டாட்' தான் உலகின் முதல் ப்ரேயில்லி (Braille) ஸ்மார்ட் வாட்ச் ஆகும், ப்ரேயில்லி என்றால் பார்வையற்றவர்கள் தொடு உணர்வு மூலம் புரிந்துகொள்ளும் மொழியாகும். அதாவது சக மனிதரை போலவே பார்வையற்றவர்களும் நேரம் மற்றும் இதர தகவல்களை பெறக்கூடிய வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட் வாட்ச்..!

பார்வையற்றவர்களுக்கு சரியான நண்பன் - தி டாட்..!

தெற்கு கொரியாவில் உருவாக்கம் பெற்ற இது ஆப்பிள் போன்ற ஸ்மார்ட் வாட்ச்களுடன் போட்டி போட உருவாக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ப்ளூ-டூத் 4.0 வசதி கொண்ட இது 10 மணி நேரம் வரை பேட்டரி நீடிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரவில் கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்களுக்கு 'இது' சமர்ப்பணம்.!

பார்வையற்றவர்களுக்கு சரியான நண்பன் - தி டாட்..!

இது நேரத்தை மட்டும் அல்ல, குறிப்பிட்ட நிகழ்ச்சியை நினைவு படுத்தும், நண்பர்களுடன் தொடர்பு கொள்ள உதவும், வழி காட்டுதல் போன்ற பல வேலைகளையும் செய்யும். இதன் விலை 300 டாலருக்கும் குறைவாகவே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரேயில்லி மொழி தெரிந்தவர்களும் இதை பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

English summary
World’s first Braille smartwatch gives blind people a lifeline to information.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot