சீனா உருவாகியுள்ள உலகின் மிகப்பெரிய காற்றாலை.. இதன் ராட்சஸ சக்தி எவ்வளவு பெரியது தெரியுமா?

|

உலகின் மிகப்பெரிய காற்றாலையைச் சீனாவின் தனியார் நிறுவனம் தற்பொழுது வடிவமைத்து உருவாகியுள்ளது. உலகத்தின் மிகப் பெரிய காற்றாலை கருவி இது தான் என்று நிறுவனம் கூறியுள்ளது. உலகளவில் பெரிய உருவம் கொண்ட இந்த காற்றாலையின் ஆற்றலும் சாதாரணமானது அல்ல என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஒற்றை ராட்சஸ காற்றாலை கருவி சுமார் 20,000 வீடுகளுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்டது என்று கூறியுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய காற்று விசையாழியை உருவாக்கிய சீனா

உலகின் மிகப்பெரிய காற்று விசையாழியை உருவாக்கிய சீனா

சீன காற்றாலை மற்றும் ஆற்றல் வன்பொருள் தயாரிப்பாளர் நிறுவனம் ஒன்று உலகின் மிகப்பெரிய காற்று விசையாழியை உருவாக்கியுள்ளது. மிங்யாங் ஸ்மார்ட் எனர்ஜியால் உருவாக்கப்பட்ட இந்த காற்றாலை கருவி அல்லது காற்று விசையாழி கருவி சுமார் 242 மீட்டர் உயரமுள்ள ராட்சஸ உருவமாகும். இது 2023 ஆண்டுக்குள் வீடுகளுக்குச் சக்தி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறு கால்பந்து மைதானங்களை விட பெரியதா?

ஆறு கால்பந்து மைதானங்களை விட பெரியதா?

இந்த பிரமாண்டமான காற்று விசையாழி 118 மீட்டர் நீளமுள்ள கத்தி போன்ற இறக்கைகளைக் கொண்டுள்ளது. இது இயக்கத்தில் இருக்கும் போது மொத்தம் 46,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும் திறன் கொண்டது என்று நிறுவனம் கூறியுள்ளது. உங்களுக்குப் புரியும் படி எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், 46,000 சதுர மீட்டர் பரப்பளவு என்பது சுமார் ஆறு கால்பந்து மைதானங்களை விட அளவில் பெரியது என்று நாம் கூறலாம்.

2 மணி நேரம் தாமதமாக வந்த ரயில்.. 2035 பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.! IRCTC கொடுத்த இழப்பீடு எவ்வளவு தெரியுமா?2 மணி நேரம் தாமதமாக வந்த ரயில்.. 2035 பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.! IRCTC கொடுத்த இழப்பீடு எவ்வளவு தெரியுமா?

20,000 வீடுகளுக்குச் சக்தி அளிக்கும் திறன்

20,000 வீடுகளுக்குச் சக்தி அளிக்கும் திறன்

பிரம்மாண்டமான இந்த காற்று விசையாழிகள் 80-ஜிகாவாட் மின்சாரத்தை ஒரு மணிநேரத்தில் உருவாக்கும் திறன் கொண்டவை. இதே போல், மற்ற காற்றாலை நிறுவனங்களுடன் போட்டியின் அடுத்த சிறந்த விஷயத்துடன் இதை ஒப்பிடுகையில் GE இன் Haliade-X காற்றாலை கருவி சுமார் 74-ஜிகாவாட் மணிநேரத்தை மட்டுமே நிர்வகிக்கிறது. இந்த ஒவ்வொரு விசையாழிகளும் 25 வருட வாழ்நாள் செயல்படும் ஆற்றலைக் கொண்டது. மொத்தமாக 20,000 வீடுகளுக்குச் சக்தி அளிக்கும் திறன் கொண்டவை.

இதனால் சுற்று சூழலுக்கு என்ன நன்மை கிடைக்கும்?

இதனால் சுற்று சூழலுக்கு என்ன நன்மை கிடைக்கும்?

ஆச்சரியம் என்னவென்றால், இதன் இறக்கைகளை மட்டும் 19 மீட்டர் விட்டம் நீட்டிப்பதன் மூலம் நிறுவனத்தின் மைஎஸ்இ டர்பைன்களை விட 45 சதவிகிதம் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இது கடல் காற்று ஆற்றல் உற்பத்தியில் வீழ்ச்சியடையச் செய்யும். நிறுவனத்தின் உரிமைகோரல்களின்படி, இந்த காற்றாலைகளில் ஒன்று அதன் 25 வருட ஆயுட்காலத்தின் போது 1.6 மில்லியன் டன் CO2 உமிழ்வை அகற்றக் கூடியது என்று கூறப்பட்டுள்ளது.

நியூயார்க், லண்டன், சீனா, சிங்கப்பூரை ஓரங்கட்டிய இந்தியா: ஓடி ஒழிய முடியாத அளவிற்கு கேமரா.! எங்கு தெரியுமா?நியூயார்க், லண்டன், சீனா, சிங்கப்பூரை ஓரங்கட்டிய இந்தியா: ஓடி ஒழிய முடியாத அளவிற்கு கேமரா.! எங்கு தெரியுமா?

37 டன் எடை கொண்ட உலகின் மிகப் பெரிய காற்றாலை

37 டன் எடை கொண்ட உலகின் மிகப் பெரிய காற்றாலை

ஒரு மெகாவாட்டுக்கு வெறும் 37 டன் என நம்பமுடியாத அளவிற்கு இதன் எடை உள்ளது. இது கோபுரம் மற்றும் அடித்தள கட்டுமானத்தின் திறமையான பயன்பாட்டைச் செயல்படுத்துகிறது. மிங் யாங் ஸ்மார்ட் எனர்ஜியின் தலைவர் மற்றும் CTO கியிங் ஜாங், ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது, "எங்கள் புதிய மிகப்பெரிய காற்று விசையாழி MySE 16.0-242 துவக்கமானது தொழில்நுட்பம் பரிணாம வளர்ச்சிக்கு மூன்று அத்தியாவசிய இயக்கிகளின் சரியான விளக்கம்-தேவை, சேர்க்கை மற்றும் மறு செய்கை." இதுவாகும் என்று கூறியுள்ளார்.

மிசாரத்தை பற்றி இனி கவலை இல்லை

மிசாரத்தை பற்றி இனி கவலை இல்லை

அவர் மேலும் கூறினார், "பல ஆண்டுகளாக, நாங்கள் 10GW க்கும் அதிகமான ஒட்டுமொத்த டிராக் ரெக்கார்ட் மற்றும் ஹைபிரிட்-டிரைவ் தொழில்நுட்பத்துடன் மறு செய்கை அனுபவத்தைப் பெற்றுள்ளோம். இவை தயாரிப்பு ஆர் & டியில் விரைவான கற்றல் வளைவைக் கொண்டிருக்க உதவுகின்றன. இது நம்மைக் கடல் காற்றுத் தலைவராக நம்மை நிலைநிறுத்துகின்றது என்று அவர் கூறியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Worlds Biggest Wind Turbine Developed By MingYang Smart Energy Can Power 20000 Homes : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X