எந்த கொம்பனாலும் ஹேக் செய்ய முடியாது.. உலகின் பெஸ்ட் சேஃப்டி Mobile பட்டியல்.. டாப் 4 லிஸ்ட் இதோ..
மொபைல் (mobile) வழியாக பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகளை பலரும் சந்தித்து வருகின்றனர். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உலகில் தலை சிறந்த பாதுகப்பு அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன் பட்டியல் இதோ.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளது என்பது நாம் தவிர்க்க முடியாது. ஆனால் அதே நன்மைகளுக்கு இணையாக பிரச்சனைகளைலும் அதிகரித்துள்ளது. வங்கி கணக்கு விபரங்கள் முதல் அந்தரங்க விஷயங்கள் வரை ஒருவரது தகவல்கள் அனைத்தையும் சுலபமாக அவரது ஸ்மார்ட்போன் (smartphone) மூலம் எடுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தான் இன்றைய காலகட்டம் இயங்கி வருகிறது.

ஸ்மார்ட்போன்கள் இல்லாத கைகளே இன்று இல்லை என்ற சூழலில் இந்த பாதுகாப்பற்ற நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இது மாதிரியான பிரச்சனைகளை தவிர்க்கும் பாதுகாப்பு அம்சத்திற்காகவே பலர் ஐபோன் பக்கமும் செல்கின்றனர். ஆனால் இந்த ஐபோன் எல்லாம் ஜுஜூபி என்று கூறும் வகையில் சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் உலகில் வலம் வந்துகொண்டு இருக்கின்றன.
1. ப்யூரிசம் லிப்ரெம் 5 (Purism Librem 5):
பாதுகாப்பை தனது கொள்கையாக கொண்டுள்ள ப்யூரிசம் என்ற அமேரிக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தின் மாடல் தான் இந்த லிப்ரெம் 5. லினக்ஸ் (Linux) பியூர்OSல் செயல்படும் இந்த லிப்ரெம் 5 ஸ்மார்ட்போன் சாப்ட்வேர் (Software) மற்றும் ஹார்ட்வேர் (Hardware) என்று இரண்டு வகையான பாதுகாப்பு கண்ட்ரோல்களை பயனாளர்களுக்கு வழங்குகிறது.
அதாவது ப்ளூடூத் (Bluetooth), வைஃபை (Wi-Fi), நெட்வொர்க் (Network), கேமரா மற்றும் மைக்ரோபோன் (Microphone) என்று அனைத்தையும் பிசிகல் சுவிட்ச்களை (Physical Switches) கொண்டு கண்ட்ரோல் செய்ய முடியும். பவர்ஃபுல் (Powerful) விவான்டே (Vivante) GC7000லைட் GPU, 3GB RAM, 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை கொண்டு பெரிய டிஸ்பிலேவுடன் வரும் இந்த ஸ்மார்ட் போன் இந்திய விலைக்கு ரூ.83, 294க்கு விற்கப்படுகிறது.
2. சிரின் லாப்ஸ் ஃபின்னி யூ1 (Sirin Labs Finney U1):
உலகின் முதல் சைபர் ப்ரொடெக்டட் பிளாக்-செயின் எனேபிள்ட் (Cyber Protected blockchain enabled) ஸ்மார்ட்போன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்த சிரின் லாப்ஸ் ஃபின்னி யூ1 ஸ்மார்ட்போன். இன்பில்ட் இண்ட்ரூஷன் ப்ரிவென்ஷன் சிஸ்டம் (Inbuilt Intrusion Prevention System) அம்சத்துடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் செய்யப்படும் கால், மெசேஜ் மற்றும் ஈமெயில்கள் கூட ரியல்டைம் எண்டு-டூ-எண்டு என்கிரிப்ஷன் (Real-time end-to-end encryption) செய்யப்பட்டு தான் அனுப்பப்படும்.

ஸ்னாப்ட்ராகன் 854 SoC ப்ராசசர், 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் கூகுள் ஆண்ட்ராய்டின் மாறுபட்ட வெர்ஷன் OS-ஆல் இயங்குகிறது. ஸ்மார்ட்போனை கூடுதலாக பத்திரப்படுத்திக் கொள்ள ஃபின்னி ஆப்லாக் (Finney App lock), 2 இன்ச் மல்டி-டச் சேஃப் ஸ்க்ரீன் (multi-touch safe screen) போன்ற அம்சங்களும் இதில் உள்ளன. இதன் விலை ரூ.74, 957 மட்டுமே.
3. பிட்டியம் டஃப் மொபைல் 2 (Bittium Tough Mobile 2):
"மொபைல் போன்களுக்கான அல்ட்ரா பாதுகாப்பின் புதிய ஸ்டாண்டர்ட்" என்ற டாக்லைனுடன் (Tagline) விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன் உண்மையாகவே பாதுகாப்பின் உச்சம் என்று கூறலாம். ஹார்டுவேர் மேனிபுலேஷன் (Hardware Manipulation) மற்றும் தகவல் திருட்டு ஆகியவற்றை தவிர்க்கும் டாம்பர்-புரூப் தொழில்நுட்பம் (Tamper-proof Technology) மற்றும் எண்டு-டூ-எண்ட் என்கிரிப்ஷன் போன்ற தொழில்நுட்பங்கள் வல்லுனர்களால் டிசைன் செய்யப்பட்டு இந்த ஸ்மார்ட்போனில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை எண்ட்-டூ-எண்ட் என்க்கிரிப்ட் செய்யும் பிட்டியம் செக்யூர் கால் தொழில்நுட்பமும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இதில் வயர்லெஸ் தொடர்புகளை ஹார்ட்வேர் மூலம் கண்ட்ரோல் செய்து கொள்ள முடியும். இந்திய விலைக்கு ரூ.1,44,162க்கு விற்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் அதற்கு மேற்பட்ட வெர்ஷன் OSல் இயங்குகிறது. மேலும், குவல்காம் ஸ்னாப்டிராகன் 670 SoC பிராசஸரை கொண்டுள்ளது.
4. கடிம் (Katim) R01:
ரகட் பில்ட் குவாலிட்டியுடன் (Rugged built quality) வரும் கடிம் R01 ஸ்மார்ட்போனும் மேலே கூறப்பட்ட வரிசையில் இணையும் ஒரு அல்ட்ரா-செக்யூர் (Ultra secure) போனாகும். இந்த ஸ்மார்ட்போன் டாம்பர்-ப்ரூப் அம்சத்துடன் MIL-STD 810 மிலிட்டரி அங்கீகாரம் கொண்டுள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கின்றது. பாஸ்வேர்ட் (Password) மற்றும் ஃபிங்கர்பிரிண்ட் (Finger print) என்று இரண்டு அடுக்கு பாதுகாப்பு அம்சத்துடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
இதன் USB இன்டர்பேஸ் கூட மால்வேர் தாக்குதல் மற்றும் தகவல் திருடுதலை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இது 18:29 ஆஸ்பெக்ட் ரேஷியோ (aspect ratio) 6.56 இன்ச் பெரிய திரையுடன் வரும் இந்த ஸ்மார்ட் போன் ஸ்னாப்ட்ராகன் 845 SoC பிராசஸரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஷீல்ட் மோட் எனேபிள் (Shield mode enable) செய்வதற்கான பிரத்தியேக பட்டனும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஷீல்டு மோடை எனேபிள் செய்தால் வயர்லெஸ் தொடர்புகள், மைக்ரோஃபோன் மற்றும் கேமராக்கள் செயல்படாது. ஹார்டன்ட் ஆண்ட்ராய்டு (Hardened Android) சார்ந்த கடிம்OS, ரகட் வெளிப்புறம் ஆகியவற்றுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் ரூ.91,717 விலைக்கு விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








