இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டு:செயலிழக்கும் போது வெடித்து சிதறிய வீடியோ!

|

இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டன் வீசிய ஒரு பெரிய குண்டு போலந்து துறைமுகமான ஸ்வினோஜ்ஸில் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யும்போது நீருக்கடியில் வெடித்து சிதறியது.

இரண்டாம் உலகப்போர்

இரண்டாம் உலகப்போர்

1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டுவரை உலக நாடுகளிடையே இரண்டாம் உலகப்போர் நடந்தது. இந்த போரில்தான் முதன்முறையாக மனித வரலாற்றில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது. அணு ஆயுதம் தாக்கம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடாது என உலக நாடுகள் முணைப்பு காட்டி வருகிறது.

அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் குண்டுகள்

அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் குண்டுகள்

இந்த நிலையில் இரண்டாம் உலக போரில் வீசப்பட்ட குண்டுகள் அவ்வப்போது பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட பல குண்டுகள் செயலிழந்த நிலையில் இருந்தாலும் சில குண்டுகள் வெடிக்கும்நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

போலந்தில் வீசப்பட்ட குண்டுகள்

போலந்தில் வீசப்பட்ட குண்டுகள்

அதன் வகையில் நாஜி ஆக்கிரமத்த போது போலந்து இரண்டாம் உலகப் போர் முழுவதும் தொடர்ந்து குண்டுவீச்சுக்கு ஆளானது, இதனால் பல நகரங்கள் பேரழிவிற்கு உள்ளானது. அதில் ஒரு வெடிகுண்டு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏர்டெல் Vs ஜியோ Vs விஐ: ரூ.599, ரூ.598 விலையில் சிறந்த சலுகை வழங்கும் நிறுவனம் எது?

5000 ஆயிரம் கிலோ எடை கொண்ட டால்பாய் வெடிகுண்டு

5000 ஆயிரம் கிலோ எடை கொண்ட டால்பாய் வெடிகுண்டு

போலந்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு 1945 ஆம் ஆண்டு பிரிட்டன் வீசிய சுமார் 5000 ஆயிரம் கிலோ எடை கொண்ட டால்பாய் வெடிகுண்டு என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை செயலிழக்கும் பணியில் அந்நாட்டு கடற்படை தீவிரமாக செயல்பட்டது.

பூகம்ப வெடிகுண்டு

பூகம்ப வெடிகுண்டு

earthquake(பூகம்பம்) வெடிகுண்டு எனவும் டால்பாய் வெடிகுண்டு அழைக்கப்படுகிறது. போலந்தில் இருந்து இதுவரை கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டில் இது மிகப்பெரியது என தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடிகுண்டு ஜெர்மன் கப்பலான லுட்ஸோவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காயங்களும், சேதங்களும் ஏற்படவில்லை

இந்த வெடிகுண்டு செயலிழக்கும் பணியில் போலந்து கடற்படை தீவிரமாக செயல்பட்டிருந்த போது எதிர்பாராத நேரத்தில் இது நீருக்கடியிலேயே வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு வெடித்ததில் நீர் நீண்ட உயரத்திற்கு மேல் எழுந்தது. இதனால் எந்தவிதமான காயங்களும், சேதங்களும் ஏற்படவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
World War II Tallboy Bomb Found in Poland: Exploded during Deactivation

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X