இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத குண்டு., நீருக்கடியில் வெடித்தது.! திடீரென வைரலான வீடியோ.!

|

இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டனால் நிறுத்தப்பட்ட 5.4 டன் வெடிகுண்டு, கடந்த ஆண்டு நடுநிலையாக்கும் முயற்சியின் போது வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தண்ணீருக்குள் வெடித்துச் சிதறும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. அந்த வீடியோ இப்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இரண்டாம் உலகப் போரில் இப்படி ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத குண்டு

இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத குண்டு

வடமேற்கு போலந்தில் 2020 ஆண்டு அக்டோபரில், இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டனால் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை நடுநிலையாக்கும் முயற்சியின் போது நீருக்கடியில் வெடித்தது. வெடிகுண்டு வெடித்த வீடியோ சமூக ஊடகங்களில் மீண்டும் வெளிவந்து வைரலாகியுள்ளது. டால்பாய் என்றும் அழைக்கப்படும் இந்த பூகம்ப குண்டு, 2019 செப்டம்பரில் நீர்வழியை ஆழப்படுத்தும் பணியின் போது ஸ்ஸ்கெசின் துறைமுகத்துடன் இணைக்கப்பட்ட நீர் வழித்தடத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டது.

நீர் மேற்பரப்பில் திடீரென இடையூறு

நீர் மேற்பரப்பில் திடீரென இடையூறு

வீடியோவில், அமைதியான நீர் மேற்பரப்பில் திடீரென இடையூறு ஏற்படுவதைக் காணலாம், அதைத் தொடர்ந்து பெரிய வெடிப்பை நீருக்கு மேற்பரப்பில் காணலாம், நீருக்கு அடியில் வெடித்த வெடிகுண்டு மேற்பரப்பில் நீரை பவுண்டைன் போலக் காற்றில் நீரைப் பீச்சுகிறது. வீடியோவில் இரண்டாவது கேமராவின் ஆங்கிளும் இடம்பெற்றுள்ளது, அதில் கப்பல் கால்வாயிலிருந்து செங்குத்தான நீர் மலை உயர்ந்து வருவது போல் வெடிகுண்டு வெடித்த காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.

மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!

வேகம் சோனிக் வேகத்தை விட அதிகம்

வேகம் சோனிக் வேகத்தை விட அதிகம்

போலந்து கடற்படையின் டெமோலிஷன் வல்லுநர்கள் தொலைதூர சிதைவைப் பயன்படுத்தி வெடிகுண்டை நடுநிலையாக்க முயன்றபோது இந்த வெடிப்பு நிகழ்ந்தது. டிபிலேக்ரேஷன் (Deflagration) என்பது ஒரு வெடிப்பின் தீவிரத்தைக் குறைக்கும் ஒரு செயல்முறையாகும், இது ஆற்றல் வெளியீட்டின் வேகத்தை சோனிக் வேகத்தை விடக் குறைக்கிறது. சோனிக் வேகம் என்பது ஒலியின் வேகம் ஆகும். இது ஒரு வெடிப்பிலிருந்து ஆற்றல் வெளியீட்டின் வேகம் சோனிக் வேகத்தை விட அதிகமாக இருந்தால், அது ஒரு டெட்டனேஷன் (detonation) என அழைக்கப்படுகிறது.

750க்கும் மேற்பட்டோர் வெளியேற்றபட்டனர்

750க்கும் மேற்பட்டோர் வெளியேற்றபட்டனர்

எவ்வாறாயினும், இந்த வெடிகுண்டு சிதைத்து வெடிக்க வாய்ப்புள்ளது என்று கருதிய குழு, இந்த நடவடிக்கைக்கு முன்பாகவே அந்த பகுதியில் வசிக்கும் 750க்கும் மேற்பட்டோர் வெளியேற்றிவிட்டனர். இந்த சம்பவத்தின் போது எந்த காயமும், எந்த சேதமும் ஏற்படவில்லை என்று குழு அறிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட மீதமுள்ள ஆயுதங்களை போலந்து தேடி-தேடி அகற்றி வருகிறது என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை இயக்கத்தின் இதழின் அறிக்கை கூறுகிறது.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

96 மில்லியன் வெடிக்கும் பீரங்கி குண்டுகள்

96 மில்லியன் வெடிக்கும் பீரங்கி குண்டுகள்

1944 மற்றும் 1988க்கு இடையில், கண்டுபிடிக்கப்படாத மற்றும் வெடிக்காத ஆயுதங்கள் போலந்தில் 4,094 பேரின் உயிரைக் கொன்றது என்று அறிக்கை கூறுகிறது. 1944 முதல் 2003 வரை, ஆறாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிடப்பட்ட செலவில் 96 மில்லியன் வெடிக்கும் பீரங்கி குண்டுகள் அகற்றப்பட்டுள்ளது. வைரல் வீடியோவில் உள்ள குண்டு இரண்டாம் உலகப் போரின்போது போலந்து மீது வீசப்பட்டபோது வெடிக்கத் தவறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
World War II Bomb Explodes Underwater During Attempts to Defuse by Polish Navy : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X