Home
News

அடிபொலி சாரே.. ஷூவில் கேமரா, போன் சார்ஜர் வசதி: அட்டகாசமான ஸ்மார்ட் ஷூஸ் அறிமுகம் செய்த Ixigo.!

இப்போது உள்ள புதிய தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக புதிய தொழில்நுட்பங்கள் நமது தினசரி வேலைகளை எளிமையாக்குகிறது என்பது தான் உண்மை.

தொழில்நுட்பம் அடுத்த கட்டத்திற்கு

இந்நிலையில் தொழில்நுட்பம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது, அதாவது இக்ஸிகோ (ixigo)என்ற நிறுவனம் ஸ்மார்ட் ஷூக்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் ஷூக்கள் கேமரா, சார்ஜிங் போர்ட், லொகேஷன் டிராக்கர் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் வருகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட் ஷூக்களை குறித்து சற்று விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

ழுமத்தின் தலைமை செயல் அலுவலரும்,

Ixigo குழுமத்தின் தலைமை செயல் அலுவலரும், நிறுவனருமான அலோக் பாஜ்பாய் ட்விட்டரில் இந்த புதிய தயாரிப்பு குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார். அதன்படி இக்ஸிகோ நிறுவனம் இந்த புதுவகை ஸ்மார்ட் ஷூக்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் டவிட்டர் பகத்தில் வெளியிடப்பட்ட ஒரு டீஸர் வீடியோ இந்த ஸ்மார்ட் ஷூக்களின் அம்சங்களை விளக்குகிறது.

மார்ட் ஷூக்கள் இதுவரை

இதுபோன்ற ஸ்மார்ட் ஷூக்கள் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை, இந்த அசத்தலான ShoesX நீர்ப்புகா யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய முடியும். அதேபோல் இதற்கான பேட்டரிகீழ் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

 ஷூக்களின் மிகவும் சிறப்பான

குறிப்பாக இந்த ஷூக்களின் மிகவும் சிறப்பான அம்சம் என்னவென்றால், இதன் உதவியுடன் செல்பீ எடுக்க முடியம். குறிப்பாக ஷூஸ்எக்ஸ்(ShoesX)ஆனது 12எம்பி செல்பீ கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் மூலம் செல்பீ எடுப்பது தனி அனுபவம் கொடுக்கும் என்றே கூறலாம்.

ஷூக்களில் செல்பீ கேமராவைத்

இந்த ஸ்மார்ட் ஷூக்களில் செல்பீ கேமராவைத் தவிர அல்ட்ரா வைட் பின்பக்க கேமரா வசதியும் உள்ளது. இதன் மூலம் வழியில் உங்கள் பின்னால் யார் இருக்கிறார்கள், யார் துரத்துகிறார்கள் என்பதை எளிமையாக அறிந்து கொள்ளலாம். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ந்த ஸ்மார்ட் ஷூக்களில் ஆண்டி-

அதேபோல் இந்த ஸ்மார்ட் ஷூக்களில் ஆண்டி-தெஃப்ட் சென்சார்கள் இருப்பதால், வெளியிடங்களில் காலணிகளை போட்டு விட்டு பயம் இல்லாமல் சென்று வரலாம். குறிப்பாக காலணிகளை யார் தொடுகிறார்கள் அல்லது யார் திருடுகிறார்கள் என்பதையும் இது உங்களுக்கு எளிமையாக தெரியப்படுத்தும். மேலும் இந்த தகவலை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செயலியுடன் தெரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக ShoesX ஷூவில் Auto Warmer Sole அம்சம் உள்ளது. இது உங்கள் கால்களை 20 டிகிரி குளிரிலும் கூட சூடாக வைத்திருக்கும். அதேபோல் இந்த ஷூவில் QR Code Scanner வசதியும் இருக்கிறது, இதன் உதவியுடன் உங்களால் எளிமையாக பணம் செலுத்த முடியும். இதுதவிர பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ஷூக்கள். விரைவில் ஷூஸ்எக்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதை வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் இருப்பு இருக்கும் போது மட்டுமே இந்த ஷூவை வாங்க முடியும். பின்பு இதன் விலை குறித்த தகவல்கள் இன்னும்வெளியிடப்படவில்லை. தற்போது முன்பதிவு செய்வதற்கான பக்கத்தை மட்டுமே திறந்துள்ளது அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
World's unique shoe Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X