ரூ.400 கோடி மதிப்புள்ள வாட்ச் சொந்தக்காரர் நீங்களா? உலகின் விலை உயர்ந்த டாப் 8 கைக்கடிகாரம்!
மணி பார்க்கும் கருவியாக தொடங்கப்பட்ட கைக்கடிகாரம் காலப்போக்கில் காம்பஸ், தேதி என சில அம்சங்களை உள்ளடக்கி அறிமுகமானது. இந்த டிஜிட்டல் யுகத்தில் கைக்கடிகாரம் Smart Watch என்ற பெயரில் போன் பேசுவது, சேட்டிங் செய்வது என பல மேம்பட்ட அம்சங்களோடு விற்பனைக்கு கிடைத்து வருகிறது. ஆனால் இன்றளவும் மணி பார்க்கும் தேவைக்கு மட்டும் பயன்படும் கைக்கடிகாரங்கள் கோடிக் கணக்கில் மதிப்புக் கொண்டதாக இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

உலகின் விலை உயர்ந்த வாட்ச்கள்
சமீபத்தில் தமிழக அரசியல் வட்டாரங்களில் கூட வாட்ச் விவகாரம் சளசளப்பை ஏற்படுத்தியது. இவர் கட்டியிருக்கும் வாட்ச் அத்தனை லட்சம், அவர் கட்டியிருக்கும் இத்தனை லட்சம் என பல விவாதங்கள் நடந்தது. சரி, அந்த கதைக்குள் செல்ல வேண்டாம். உலகின் விலை உயர்ந்த வாட்ச்கள் குறித்த விவரங்களுக்கு வருவோம்.

நூற்றுக்கணக்கான கோடிகளில் வாட்ச்கள்
நூற்றுக்கணக்கான கோடிகளில் வாட்ச்கள் ஏலம் விட்ட ஏணைய நிகழ்வுகள் அரங்கேறி இருக்கிறது. கீழே வாட்ச்களின் விலை டாலர்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது 1 மில்லியன் டாலர் என்பது தோராயமாக ரூ.8.28 கோடி ஆகும். இதை வைத்து ஒவ்வொரு வாட்ச் இன் விலையையும் கணித்துவிடலாம்.

Graff Diamonds Hallucination
விலை: $55 மில்லியன்
இந்த வாட்ச் 2014 இல் ஏலம் விடப்பட்டது. இந்த கடிகாரம் மிகவும் நுட்பமான மற்றும் அசாதாரணமான ஆபரணமாகும். பல நிபுணர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களின் நீண்ட நேர கடின உழைப்பின் மூலம் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. இது 110 காரட் இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ப்ளூ நிற நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நுட்பமான கலைக்கு இது சிறந்த உதாரணமாகும்.
Laurence Graff என்பவர் இந்த கைக்கடிகாரத்துக்கு சொந்தக்காரர் ஆவார். ஏறத்தாழ இந்த வாட்ச் விலை ரூ.400 கோடி ஆகும். கிராஃப் டைமண்ட்ஸ் நிறுவனரான லாரன்ஸ் கிராஃப் நகைக்கடை சொந்தக்காரரும் பில்லியனர் தொழிலதிபரும் ஆவார்.

2. Graff Diamonds The Fascination
விலை: $40 மில்லியன்
152.96 காரட் வெள்ளை நிற வைரங்கள் இதில் உள்ளது. இந்த கடிகாரத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இதை கைக்காப்பாக மாற்றிக் கொள்ளலாம். இந்த கைக்கடிகாரம் 2015 இல் ஏலத்தில் காண்பிக்கப்பட்டது. இந்த வாட்ச் லாரன்ஸ் கிராஃப் என்பவருக்கு சொந்தமானது.

3. Patek Philippe Grandmaster Chime
விலை: $31 மில்லியன்
படேக் பிலிப் நிறுவனத்தின் மூலம் இந்த கிளாசிக் கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கைக்கடிகாரம் 6 நவம்பர் 2020 அன்று ஏலத்தில் விடப்பட்டது. உலகளவில் மூன்றாவது விலை உயர்ந்த கைக்கடிகாரம் இதுவாகும். நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் உழைப்பின் மூலம் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் அசெம்பிளி செய்வதற்கு மட்டும் 100,000 மணிநேரம் எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

4. Breguet Grande Complication Marie Antoinette
விலை: $30 மில்லியன்
இந்த வாட்ச் 1802 இல் தயாரிக்கப்பட்டது. இது முழு தங்கத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. Abraham-Louis Breguet என்பவர் இதை வடிவமைத்திருக்கிறார். உலக அளவில் விலை உயர்ந்த வாட்ச்களின் பட்டியலில் இது நான்காவது இடத்தில் இருக்கிறது.

5. Jaeger-LeCoultre Joaillerie 101 Manchette
விலை: $27 மில்லியன்
இந்த வாட்ச் ஆனது நுட்பமான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இது வெள்ளை தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 600 வைரங்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

6. Chopard 201-Carat
விலை: $25 மில்லியன்
சோபார்ட் நிறுவனம் மூலம் இந்த வாட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. பல ஆடம்பர நகைகளுக்கு இது கடுமையான போட்டியை வழங்குகிறது. இதில் பல்வேறு வண்ண வைரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கடிகாரம் 163 காரட் எடை கொண்டுள்ளது.

7. Patek Philippe Henry Graves Supercomplication
விலை: $24 மில்லியன்
படேக் பிலிப் நிறுவனம் தான் இந்த வாட்ச்சையும் தயாரித்துள்ளது. இந்த டைம்பீஸ் ஆனது இதுவரை வெளியான அதிநவீன இயந்திர கடிகாரங்களில் ஒன்றாக இருக்கிறது. 430 ஸ்க்ரீவ், 110 வீல்கள், 120 பிரிக்கக்கூடிய பாகங்கள் மற்றும் 70 கற்கள் உட்பட 920 பாகங்கள் இதில் உள்ளது. ஒவ்வொரு பாகங்களும் சிறிய அளவிலான கைவினைப்பொருளாக உள்ளன.

8. Rolex Paul Newman Daytona
விலை: $18.7 மில்லியன்
ரோலக்ஸ் நிறுவனத்துக்கு பெரிய அளவிலான விளக்கம் ஒன்றும் தேவையில்லை. இந்த வாட்ச் 1968 ஆம் ஆண்டில் பால் நியூமன் என்பவரால் தயாரிக்கப்பட்டது. 26 அக்டோபர் 2017 அன்று ஏலத்தில் காண்பிக்கப்பட்டது. இதிலும் பல்வேறு மேம்பட்ட விலை உயர்ந்த பொருட்கள் இடம்பெற்றிருக்கிறது.
Pic: Social Media


Click it and Unblock the Notifications








