ரூ.32,980க்கு உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது
4.75 எம்எம் மெலிதாக இருக்கும் விவோ நிறுவனத்தன் எக்ஸ்5மேக்ஸ் உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையுடன் ரூ.32,980க்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஒப்போ ஆர்5 மற்றும் ஜியோனி ஈலைஃப் எஸ்5.1 போன்களை பின்னுக்கு தள்ளி எக்ஸ்5மேக்ஸ் உலகின் மெல்லிய ஸ்மார்ட்போனாக வெளியிடப்பட்டுள்ளது.
[கணினியில் வெளியாகுமா மெசேஜிங் அப்ளிகேஷன் வாட்ஸ்ஆப்]
சிறப்பம்சங்களை பொருத்த வரை எக்ஸ்5மேக்ஸ் அலுமினியம் ப்ரேம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதோடு 5 இன்ச் ஃபுல்-எஹ்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, 64 பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டல் கோர் சிப் மற்றும் 2 ஜிபி ராம் கொண்டுள்ளது.

மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. மேலும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மற்றும் 3ஜி, 4ஜி, ப்ளூடூத் 4.01 மற்றும் ஜிபிஎஸ் வசதிகளும் இதில் உள்ளது.
[இன்டெர்நெட் இல்லமால் யூட்யூப் வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி]
கேமராவை பொருத்த வரை 5 எம்பி முன் பக்க கேமராவும் 13 எம்பி ப்ரைமரி கேமராவும் உள்ளதோடு 2000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications