பிரபல வலைதளங்கள் ஆரம்பத்தில் இப்படி தான் இருந்தது
இன்டர்நெட் வரலாற்றில் பல இணையதளங்களை நாம் கடந்து வந்திருக்கின்றோம். இருந்தாலும் அவை அனைத்தும் பிரபலமடைவதில்லை. இணையங்களில் இன்று நாம் பயன்படுத்தி வரும் பல சேவைகள் நமக்கு உபயோகமாக இருந்து வருகின்றது.
அந்த வகையில் இன்று உலக பிரபலமாக இருக்கும் இணையதளங்கள் துவங்கப்பட்ட முதல் நாளில் எப்படி இருந்தது என்பதை புகைப்படங்களின் மூலம் இங்கு பாருங்கள்.

ஆப்பிள்
1996 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளம் இப்படி தான் இருந்தது.

ஈபே
1995 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தளம் இன்று உலகளவில் பிரபலமாக இருப்பது அனைவரும் அறிந்ததே.

பேஸ்புக்
இன்று பிரபல சமூக வலைதளமாக இருக்கும் பேஸ்புக் ஆரம்பத்தில் இப்படி தான் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ப்ளிக்கர்
2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ப்ளிக்கர் தளத்தில் 2013 ஆம் ஆண்டில் தினந்தோரும் 35 லட்சம் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

கூகுள்
உலகின் பிரபல சர்ச் என்ஜின் கூகுள் தான். இது 1996 ஆம் ஆண்டு இப்படி தான் இருந்தது.

லின்க்டு இன்
பேபால் மற்றும் யாஹூவில் பணியாற்றிய ஊழியர்கள் கலிபோர்னியாவில் லின்க்டு இன் தளத்தை துவங்கினர், இன்று லின்க்டு இன் 20 மொழிகளில் கிடைக்கின்றது.

டுவிட்டர்
2006 ஆம் ஆண்டு ஜாக் டார்சீ மற்றும் மூன்று பேர் கொண்ட குழுவினர் சேர்ந்து டுவிட்டர் தளத்தை துவங்கினர்.

யாஹூ
ஆரம்பத்தில் வெறும் யூஆர்எல் மட்டும் தான் யாஹூ கொண்டிருந்தது.

யூட்யூப்
பேபால் நிறுவனத்தில் பணியாற்றிய மூன்று முன்னாள் ஊழியர்களால் துவங்கப்பட்ட யூட்யூப் 2006 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் கைப்பற்றியது.


Click it and Unblock the Notifications