பஞ்ச பாண்டவா : உலகின் சிறு வயது ஹேக்கர்கள்.!!

By Meganathan
|

பஞ்ச பாண்டவா என்பதை பார்த்து இது ஹேக்கிங் குழுவின் பெயர் தான் என நினைத்தீர்களா? சாரி ஜி நீங்க நினைத்தது தப்பு.

இது ஹேக்கிங் குழுவின் பெயர் கிடையாது மாறாக உலகின் சிறிய வயது ஹேக்கர்களை தான் இப்படி கூறியுள்ளோம். ஸ்கூல் போகும் வயதில் இவர்கள் உலகையே திரும்பி பார்க்க வைக்கும் பல்வேறு சம்பவங்களை அரங்கேற்றி இருக்கின்றார்கள்.

பள்ளி படிப்பை கடக்கவில்லை என்ற போதும், பலரையும் திணறடிக்க செய்யும் உலகின் இளம் வயது ஹேக்கர்கள் குறித்த சுவார்ஸ்ய தகவல்களை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்..!

1

1

க்ரிஸ்டோஃபர் வோன் ஹாஸ்ஸல், இவரின் வயது 5

2

2

உலகின் மிக சிறிய ஹேக்கராக கருதப்படும் க்ரிஸ்டோஃபர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் எக்ஸ் பாக்ஸ் கேம் கன்சோலில் பாதுகாப்பு பிழைகளை கண்டறிந்திருக்கின்றார்.

3

3

தனது தந்தையின் எக்ஸ் பாக்ஸ் லைவ் அக்கவுண்டினை லாக் இன் செய்ய முயன்ற போது தவறான கடவுச்சொல்லினை பதிவு செய்தார் க்ரிஸ்டோஃபர், அதன் பின் பாஸ்வேர்டு வெரிஃபிகேஷன் திரையில் குறிப்பிட்ட ஸ்பேஸ்களை பதிவு செய்து சிஸ்டமினை அன்லாக் செய்தார். பின் இந்தச பிழையினை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.

4

4

பிழையை தெரிவித்த பின் அதனினை சரி செய்த மைக்ரோசாஃப்ட் க்ரிஸ்டோஃபருக்கு பரிசு வழங்கும் நோக்கில் எக்ஸ் பாக்ஸ் லைவ் கோல்டு பதிப்பின் ஒரு ஆண்டிற்கு இலவச சந்தா, நான்கு வீடியோ கேம் மற்றும் $50 ரொக்கம் பரிசாக வழங்கியது. இதோடு க்ரிஸ்டோஃபர் பெயரினை அறியப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்களின் பட்டியலில் இணைத்தது.

5

5

பெட்ஸி டேவிஸ், இவரின் வயது 7

6

6

பொது விழிப்புணர்வு நோக்கில் வை-பை பாதுகாப்பினை வலியுறுத்தும் விதமாக விர்ச்சுவல் ப்ரைவேட் நெட்வர்க் வழங்கும் தளமான www.hidemyass.com ஹேக்கிங் பரிசோதனை ஒன்றினை ஜனவரி 2015 ஆம் ஆண்டு நடத்தியது.

7

7

இதில் ஹேக்கர்கள் பொது வ-ைபை பயன்படுத்துவோர் மின்னஞ்சல் கணக்குகள், லாக்இன் தகவல்கள் மற்றும் ஆன்லைன் வங்கி கணக்குகளை எத்தனை எளிமையாக மேற்கொள்கின்றனர் என்பதை பரிசோதனை செய்ய முயன்றனர்.

8

8

தெற்கு லண்டன் பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமியான பெட்ஸி ஓபன் வை-பை ஹாட்ஸ்பாட் பயன்படுத்தும் லேப்டாப் கொண்டு கணினி ஒன்றினை ஹேக் செய்ய கேட்டு கொள்ளப்பட்டார். ஆன்லைன் வீடியோ டுடோரியல் பார்த்து சரியாக 10 நிமிடம் மற்றும் 54 நொடிகளில் ரோக் அக்செஸ் பாயின்ட் உருவாக்கி கம்ப்யூட்டரை ஹேக் செய்தார் பெட்ஸி.

9

9

ரூபன் பால், இவரின் வயது 9

10

10

9 வயதான ரூபன் பால் இந்தியாவை சேர்ந்தவர் என்பதோடு ஹேக்கர், ஆப் டெவலப்பர், சைபர் செக்யூரிட்டி நிபுணர், டெக்சாஸ் சார்ந்த ப்ரூடண்ட் கேம்ஸ் என்ற நிறுவனத்தின் சிஇஒ ஆவார்.

11

11

'இணையத்தில் நடைபெறும் அனைத்து வித குற்றங்கள் குறித்து குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்றும், அவைகளில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் சிறுவர்களுக்கு கற்பிக்க வேண்டும்' என குழந்தைகள் தினத்தன்று நடைபெற்ற கிரவுண்டு சீரோ சம்மிட் 2014 விழாவின் தன் உரையில் ரூபன் பால் தெரிவித்திருந்தார்.

12

12

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாதுகாப்பு பி-சைட்ஸ் மாநாட்டில் 15 நிமிடத்தில் காண்டாக்ட், கால் லாக் மற்றும் குறுந்தகவல்களை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவியில் இருந்து ஹேக் செய்வது எப்படி என்பதை விளக்கினார் ரூபன் பால்.

13

13

சைஃபை, இவரின் வயது 10

14

14

கலிஃபோர்னியாவை சேர்ந்த ஹேக்கரான இவர் தன்னை சைஃபை என அழைத்து கொள்கின்றார். இவர் பல்வேறு ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சேர்ந்த கேம்களை ஹேக் செய்து பாதுகாப்பு ஓட்டைகளை உருவாக்கியுள்ளார்.
தனக்கு நேரம் போகவில்லை எனில் இவ்வாறு செய்வதாக கூறப்படுகின்றது.

15

15

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற விழா ஒன்றில் தான் விளையாடிய கேம்கள் சலிப்பாகி விட்டதால் அவைகளை வை-பை கனகெஷனில் இருந்து நீக்கி நேரத்தை மாற்றி அவைகளை ஹேக் செய்வதாக தெரிவித்தார்.

16

16

முதலில் கேம்களுக்கான சீட்டிங் கோடு அதாவது கேமினை எளிமையாக முடிக்க பயன்படும் குறியீடுகளை கண்டறிவதில் துவங்கி அவைகளை ஹேக் செய்வதோடுகேம்களின் பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்பட செய்தார்.

17

17

அனானமஸ் ஹேக்கர், இவரின் வயது 11

18

18

இவர் மிகவும் இளம் வயது அனானமஸ் ஹேக்கிங் ஆர்வலர் என அழைக்கப்படுகின்றார். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற க்யூபெர் மாணவர் போராட்டங்களின் போது கனடாவை சேர்ந்த 11 வயது ஹேக்கர், கனடா அரசாங்கத்தின் இணையதளங்களுக்கு டிடாஸ் தாக்குதல்களை நடத்தினார். இதன் மூலம் இரண்டு நாட்களால் இவர் சுமார் $60,000 மதிப்பிலான சேதங்களை ஏற்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

19

19

ஹேக் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இவர், தான் எவ்வித அரசியல் நோக்கத்திற்காகவும் ஹேக் செய்யவில்லை என்றும் தான் ஹேக் செய்த தகவல்களை வீடியோ கேம் தயாரிப்பிற்காக பகிர்ந்து கொண்டதாக தெரிவித்தார்.

20

20

இணையதளங்களை ஹேக் செய்தமைக்காக மூன்று குற்றச்சாட்டுகளுக்காக 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இந்த சிறுவனம் சுமார் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக $265,904.09 இழப்பீடு கோரப்பட்டது.

Best Mobiles in India

English summary
World's Most Genius Child Hackers Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X