உலகின் மிகப்பெரிய செல்ஃபி, அடங்கப்பா மெய்யாலுமா?

Posted By:

இந்தாண்டு மிகவும் பிரபலமான அம்சமாக செல்ஃபி மாறிவிட்டது என்றே கூறலாம். இன்றைய காலகட்டத்தில் யாரை பார்த்தாலும் எங்க போனாலும் ஒரு செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் போட்டு விடுகின்றனர். அப்படி இருக்க மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஒரு செல்ஃபி எடுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய செல்ஃபி எடுக்கப்பட்டுள்ளது

செல்ஃபி என்பதும் சும்மா நினைச்சிடாதீங்க, இது தான் உலகின் முகப்பெரிய செல்பியாக. வங்கதேசத்தில் மைக்ரோசாப்ட் லூமியா 730 மூலம் எடுக்கப்பட்ட இந்த செல்ஃபியில் சுமார் 1,511 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த செல்ஃபி மைக்ரோசாப்ட் லூமியா 730யை பிரபலப்படுத்துவதற்காக எடுத்துள்ளனர்.

ஸ்மார்ட்போனை பிரபலப்படுத்த உலக சாதனையை படைத்திருக்கும் மைக்ரோசாப்ட் இந்த செல்ஃபியை எடுக்க படாத பாடு பட்டிருக்காங்கனு உங்களுக்கு தெரியுமா, இத்தனை பேரை ஒரே இடத்தில் அழைக்க பேஸ்புக் மூலம் அழைப்பு, செல்ஃபி எடுக்கும் இடத்தில் இலவச வைபை என மக்களை கவரும் அனைத்து அம்சங்களையும் வைத்து உலக சாதனையோடு தனது ஸ்மார்ட்போனையும் விளம்பரப்படுத்தியுள்ளனர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினர்.

எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க. இதுல இன்னும் ஒரு விஷயம் என்ன என்றால் இந்தியாவில் இன்று மைக்ரோசாப்ட் லூமியா 535 வெளியாவது தான். நீங்க எந்த மைக்ரோசாப்ட் ஸ்மார்ட்போனை வாங்க போறீங்க பாஸ்...

படம்: மைக்ரோசாப்ட் லூமியா வங்கதேச முகநூல் பக்கம்English summary
World's largest Selfie taken. Microsoft Lumia Bangladesh posted on its Facebook page, a gigantic selfie of around 1,151 people in Bangladesh, which is fit to be world’s largest selfie!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot