விதை நம்ம போட்டது: தெர்மாகோலுக்கு பதிலாக சோலார் பேனல்- நீர் தேக்கத்தில் சோலார் பேனல் மிதக்கவிட்ட நாடு!

|

சிங்கப்பூரில் Tengeh Reservoir நீர் தேக்கத்தில் 111 ஏக்கர் பரப்பளவில் சோலார் பேனல்கள் மிதக்கவிடப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சத்து இருபத்தி இரண்டாயிரம் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நிலக்கரிக்கு பதிலாக சோலார் பேனல்கள் மூலம் நடைபெறும் மின்சார உற்பத்தியால் ஒரு வருடத்துக்கு 32 ஆயிரம் டன் கார்பன்கள் வளிமண்டலத்தில் கலப்பது தடுக்கப்படுகிறது.

சோலார் பேனல்கள் மிதக்கவிட்டு மின் உற்பத்தி

சோலார் பேனல்கள் மிதக்கவிட்டு மின் உற்பத்தி

தற்போது நீர் தேக்கத்தில் சோலார் பேனல்கள் மிதக்கவிட்டு தயாரிக்கப்படும் சோலார் பேனல்கள் மூலம் ஐந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயக்குவதற்கு போதுமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. தெங்கே நீர்த்தேக்கம் பகுதியில் மிதக்கும் சோலார் பேனல் உற்பத்தி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சூரிய மின் உற்பத்தி பேனல்கள்

சூரிய மின் உற்பத்தி பேனல்கள்

தெங்கே நீர்த்தேக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி பேனல்கள் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஒருபடி மேலே போகும் என அந்நாட்டு பிரதமர் லீ ஹ்சியன் லூங் பாராட்டியுள்ளார். சுமார் 45 கால்பந்து மைதானங்களுக்கு சமமான பரப்பளவில் 1,22,000 சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தன்மை 25 ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடியவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

சூரிய பிவி அமைப்பு

சூரிய பிவி அமைப்பு

இந்த நீர்தேக்க பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய பேனல்களானது உலகின் மிகப்பெரிய சூரிய பிவி அமைப்புகளில் ஒன்றாகும் என தேசிய நீர் நிறுவனமான பப் மற்றும் செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளன.

சூரிய ஆற்றல் மூலம் மின் உற்பத்தி

சூரிய பேனல்கள் மூலம் மின்உற்பத்தி என்பது சூரிய ஆற்றல் வரிசைப்படுத்தலை நான்கு மடங்காக அதிகரிக்க தேசிய இலக்கிற்கு பங்களிக்கும் என கூறப்படுகிறது. மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சிங்கப்பூர் 100% பசுமையான நீர்வழங்கல் முறையை கொண்ட உலகின் சில நாடுகளில் ஒன்றாகும்.

சுற்றுச்சூழல் மாசு அடையாமல் இருப்பதில் கவனம்

சுற்றுச்சூழல் மாசு அடையாமல் இருப்பதில் கவனம்

சிங்கப்பூர் அதன் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் சுற்றுச்சூழல் மாசு அடைவதில் இருந்து வெளியே செல்வதற்கான வழிகளை கண்டறிவது என்பது முக்கியம் என பிரதமர் லீ தனது உறையாடலில் குறிப்பிட்டார். இந்த திட்டமானது தங்கள் சூரிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழங்குதலுக்கு பேருதவியாக இருக்கும் என நம்பப்படுவதாக கூறினார்.

குறைந்த கார்பன் உலகம்

குறைந்த கார்பன் உலகம்

இதுபோன்ற முறைகள் தொடர்ச்சியாக இங்கும் பிற பிராந்தியத்திலும் கட்டமைக்க இது முன்னோடியாக இருக்கும் என குறிப்பிட்டார். இது சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை நோக்கி மேலும் ஒரு படியை அதிகரிக்கும் என நம்பப்படுவதாகவும் குறிப்பிட்டார். குறைந்த கார்பன் உலகம் என்ற இலக்கை அடைய இது அடித்தளமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

பெருமளவு மாசு குறையும் என கணிப்பு

நீர்தேக்கத்தில் சோலார் பேனல்கள் அமைத்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஆனது நாட்டின் ஐந்து நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு போதுமானது என கூறப்படுகிறது. இது சுமார் 16000 நான்கு அறைகள் கொண்ட எச்டிபி பிளாட்களை இயக்குவதற்கும், கார்பன் வெளியேற்றத்தை ஆண்டுக்கு சுமார் 32 கிலோடன்கள் குறைப்பதற்கும் சமம் ஆகும். மேலும் இது 7000 கார்கள் பயன்பாடுகளை சாலையில் இருந்து எடுப்பதற்கு சமம் அதாவது 7000 கார்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்கு சமமாகும்.

நீரத்தேக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்கள்

நீரத்தேக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்கள்

நீரத்தேக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்களானது உலகின் மிகப் பெரியவைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சூரிய ஆற்றல் ஏராளமாகவும் சுத்தமாகவும், பசுமையாகவும் இருப்பதால் அடுத்தடுத்து பல நாடுகளில் இதுபோன்ற மின்உற்பத்தி முறை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
World's Largest Floating Solar Farms at Singapore Tengeh Reservoir

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X