செல்பீ ஸ்டிக் மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் 1926 ஆம் ஆண்டை சேர்ந்தது உங்களுக்கு தெரியுமா
ஸ்மார்ட்போன் காலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் செல்பீ குச்சிகளுக்கான தந்தையாக சைலன்ட் மூவிஸ் நிறுவனத்தை சேர்ந்த பெயின்டரை தான் குறிப்பிட வேண்டும்.
[2014 ஆம் ஆண்டின் டாப் 10 டேப்ளெட் பட்டியல்]
1926 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் வார்விக்ஷையர் என்ற இடத்தில் தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. செல்பீ ஸ்டிக் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் அர்னால்டு மற்றும் ஹெலன் ஹாக் தம்பதியினக் இடம்பெற்றிருக்கின்றனர். மேலும் இந்த புகைப்படம் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டுள்ளது.

திருமனமான ஒரு ஆண்டு கழித்து இந்த கருவி மூலம் இந்த தம்பதியினர் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் ஹாக்ஸ் என்பவர் தனது குடும்ப புகைப்படங்களின் தொகுப்பில் இருந்து கண்டெடுத்துள்ளார்.
[தொலைக்காட்சி ஸ்கிரீனுடன் லாப்டாப்பை இணைப்பது எப்படி]
டைம்ஸ் நிறுவனத்தின் மூலம் 2014 ஆம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் ஒன்றாக செல்பீ ஸ்டிக் அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications