உலகின் முதல் satellite கனெக்‌ஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்- நியாயமான விலை!

|

Huawei நிறுவனம் ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனை மேட் 50 சீரிஸ் கீழ் இன்று அறிமுகம் செய்துள்ளது. ஒரு ஸ்மார்ட்போனை ப்ளாக்ஷிப் என குறிப்பிட்ட என்னென்ன அம்சங்கள் எல்லாம் தேவையோ அனைத்தும் இந்த ஸ்மார்ட்போனில் மேலோங்கி இருக்கிறது.

கடந்த சில காலமாக Huawei Mate 50 சீரிஸ் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இதனால் Huawei பிரியர்களிடம் இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வந்தது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.

Huawei Mate 50 சீரிஸ் அறிமுகம்

Huawei Mate 50 சீரிஸ் அறிமுகம்

Huawei Mate 50 சீரிஸ் இல் மூன்று மாடல்கள் வெளியாகி இருக்கிறது. அது மேட் 50 மற்றும் மேட் 50 ப்ரோ ஆகும்.

மற்றொன்று RS Porsche டிசைன் பதிப்பாகும். இது மேட் 50இ என அழைக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் உயர்தர சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ மேக்ரோ கேமரா இதில் உள்ளது.

மேலும் பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றிருக்கிறது.

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி சிப்செட்

மூன்று மாடல் ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியாகும் அனைத்து ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களிலும் இதே சிப்செட் தான் இருக்கிறது. இது வேகம் மற்றும் செயல்திறன் அடிப்படையில் சுமூகமாகவும் நீடித்தும் இருக்கிறது.

50 எம்பி பிரதான கேமரா

மேட் 50 தொடரில் ப்ரீமியம் மாடலாக இருப்பது மேட் 50 ப்ரோ ஆகும். இதில் 10 பிட் வண்ண தெளிவுத்திறன் உடன் கூடிய 6.74-இன்ச் OLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட்டைக் கொண்டிருக்கிறது.

அதேபோல் இதில் பிரதான கேமராவாக 50 எம்பி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. அதனுடன் 13 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் மூன்றாம் நிலை கேமராவாக டெலிபோட்டோ லென்ஸ் இடம்பெற்றிருக்கிறது.

சிறப்பான கேமரா அம்சம்

சிறப்பான கேமரா அம்சம்

புகைப்படத்தை மேம்படுத்தி வழங்கும் வகையில் டெலிபோட்டோ லென்ஸ் இல் RYYB சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த கேமராவில் OIS ஆதரவும் இருக்கிறது.

ஒட்டு மொத்தமாக கேமரா தொகுதி என்பது தனித்தனியாக தரமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

முன்பக்க கேமராவை பொறுத்தவரை 13 எம்பி அல்ட்ராவைட் சென்சார் இருக்கிறது.

மேலும் ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் ஃபேஸ் அன்லாக் அம்சத்திற்கு என 3D ToF சென்சார் இடம்பெற்றுள்ளது.

1% சார்ஜ் இருந்தாலும் போதும்

1% சார்ஜ் இருந்தாலும் போதும்

Mate 50 Pro ஆனது 66 வாட்ஸ் வயர்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4700 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. மேலும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

பேட்டரி ஆதரவில் சிறப்பம்சம் என்னவென்றால் ஸ்மார்ட்போனில் 1% சார்ஜ் இருந்தாலும் கூட, மூன்று மணிநேரம் வரை போனை காத்திருப்பு நிலையில் வைத்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது ப்ளூ, ஆரஞ்ச், சில்வர், ப்ளாக் மற்றும் வயலட் வண்ண ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது.

சாட்டிலைட் இணைப்பு ஆதரவு

சாட்டிலைட் இணைப்பு ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், Beidou Satellite Message 3 நெறிமுறை என அழைக்கப்படும் செயற்கைக்கோள் இணைப்பு இதில் வழங்கப்பட்டுள்ளது.

செல்லுலார் இணைப்பு இல்லாமலேயே நீங்கள் மெசேஜையும் இருப்பிடத்தை பகிர முடியும்.

செயற்கைக்கோள் ஆதரவை வழங்கும் உலகின் முதல் பிரபல ஸ்மார்ட்போன் இதுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட் 50 சிறப்பம்சங்கள்

மேட் 50 சிறப்பம்சங்கள்

மேட் 50 மாடலை பொறுத்தவரை இதில் 90Hz ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.7-இன்ச் OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

பிரதான கேமரா மற்றும் அல்ட்ராவைட் கேமரா லென்ஸ் ப்ரோ மாடல் போன்றே இருக்கிறது. மூன்றாம் நிலையில் இருக்கும் டெலிபோட்டோ லென்ஸாக இதில் 12 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதில் 4460 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இருக்கிறது. சார்ஜிங் ஆதரவுகள் ப்ரோ மாடல் போன்றே உள்ளது.

பிரத்யேக ஓஎஸ் ஆதரவு

RS Porsche டிசைன் பதிப்பு ஏரத்தாள ஒரே அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் டிசைன் என்பது பிற இரண்டு மாடல்களை விட சிறப்பாக இருக்கிறது. மூன்று மாடல்களும் புதிய HarmonyOS 3.0 மூலம் இயக்கப்படுகிறது.

சில நெருக்கடிகள் காரணமாக இந்த ஸ்மார்ட்போன்களில் 5G அணுகல் இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை, இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.57,458 ஆகும்.

Pic Courtesy: Social Media

Best Mobiles in India

English summary
world's first flagship smartphone with satellite connection: Huawei Mate 50 series

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X