அதிரடியாக ஸ்மார்ட்போன்களுடன் நடக்கத் தடை விதித்த உலகின் முதல் நகரம்! எதற்காக என்று தெரியுமா?
ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்க்கையில் ஒரு முக்கிய பொருளாகவே மாறிவிட்டது, அன்றாட நடவடிக்கைகளில் ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், இவற்றால் சில கேடுகளும் நமக்கு இருக்கிறது என்பதே உண்மை. ஸ்மார்ட்போனால் ஏற்படும் கெடுதல்களைக் கருத்தில் கொண்டு ஜப்பானில் மக்கள் செல்போனுடன் நடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிக்கு காரணம்
என்ன என்று பார்க்கலாம்.

பல்வேறு பணிகளைச் செய்ய நமக்கு உதவும் இந்த கருவியைச் சிலர் கூட்டத்தில் நடக்கும் பொழுதும், வாகனம் ஓட்டும்போதும் பயன்படுத்துகின்றனர். வாகனம் ஓட்டும்போது மொபைல் போன்களின் பயன்பாட்டைக் குறைக்கஅரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சில நாடுகளில் இதற்கான கடுமையான சட்டமும் உள்ளது.
இப்போது, உலகத்தில் முதல் முறையாகச் சாலையில் நடப்பவர்கள் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள யமடோ நகரத்தில் உள்ள கனகாவா மாகாணத்தில் தான் இந்த விதி முதல் முறையாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகையுடன் இருக்கும் இந்த நகரத்தில் சுமார் 2,34,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் நடந்து செல்லும் போது இனி ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தக் கூடாது என்று புதிய கட்டுப்பாட்டை நகர அதிகாரிகள் விதித்துள்ளனர்.

யமடோ நகரித்தின் மக்கள் அதிகம் நடமாடும் இரண்டு ஹாட் ஸ்பாட்களில் அரசாங்கம் ஆய்வு நடத்திய பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த இரண்டு ஹாட் ஸ்பாட்களிலும் சுமார் 6,000 குடிமக்கள் என்ற விதத்தில், எத்தனை பேர் நடக்கும் பொழுதுசாலையில் கவனமில்லாமல் ஸ்மார்ட்போன் பயன்படுத்திச் செல்கின்றனர் என்ற ஒரு கணக்கைக் கணித்துள்ளனர்.
அதன்படி ஒரு புதிய கணக்கையும் இந்த ஆய்வுக் குழு பதிவு செய்துள்ளது.

இவர்கள் நடத்திய ஆய்வின் முடிவு படி, சுமார் 6000 குடிமக்களில் 720 பேர், அதவது 12 சதவீத மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை நடந்துகொண்ட பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. எனவே, கணக்கெடுப்புக்குப் பிறகு,
ஜூன் 1 ஆம் தேதி நடைபாதையிலும், சாலையிலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடைவிதிக்க வேண்டும் என்று நகரச் சட்டசபையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதிகாரிகள் இந்த ஆலோசனையை ஜூலை 2ம் தேதி அன்று நிறைவேற்றினர்.

இப்போது, வியாழக்கிழமை முதல் இந்த புதிய விதி நடைமுறைக்கு வந்துள்ளது, குடிமக்கள் நகரச் சாலைகள் அல்லது பொதுஇடங்களில் நடக்கும்போது எந்த டிஜிட்டல் சாதனங்களையும் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடைப்பயிற்சி போது மொபைல் சாதனத்தை அணுக வேண்டிய அவசியம் இருக்கும்போது, பாதசாரிகள் ஒதுக்குப்புறமாகப்பாதுகாப்பாக ஒரு இடத்தில் நின்று, வேண்டிய நேரம் வரை சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், யாராவது இந்த விதியை மீறும் பட்சத்தில், எந்தவித அபராதமும், கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய விதி குடிமக்கள் பொது இடங்களில் நடக்கும்போது அவர்களின்
சுற்றுப்புறங்கள் பற்றி அறிந்து கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்ற புரிதலுக்கான முதல் விழிப்புணர்வு முயற்சியாகும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications