ரூ.575க்கு கிடைக்கும் மைக்ரோ கம்ப்யூட்டர் அறிமுகம்

Written By:

நெக்ஸ்ட் திங், எனும் நிறுவனம் ரூ.575க்கு சிறிய ரக மைக்ரோ கம்ப்யூட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. சிப் என்றழைக்கப்படும் இந்த கருவி நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவு சிறியதாக இருக்கும்.

ரூ.575க்கு கிடைக்கும் மைக்ரோ கம்ப்யூட்டர் அறிமுகம்

சிப் என்பது ஓபன் ஹார்டு வேர் மைக்ரோ கம்ப்யூட்டர் ஆகும். இதில் க்ரெடிட் கார்டு போன்ற அளவில் ஒரே ஒரு சர்க்யூட் போர்டு மட்டும் தான் இருக்கின்றது. இதனை கீபோர்டு மற்றும் மானிட்டரில் இணைத்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இந்நிறுவனம் உலகின் விலை குறைந்த கம்ப்யூட்டரை ரூ.575க்கு வழங்கியுள்ளது என்ற பெருமையை பெற்றுள்ளது.

ரூ.575க்கு கிடைக்கும் சிப் மைக்ரோ கம்ப்யூட்டரானது இந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு விஜிஏ அடாப்டர் மற்றும் ஹெச்டிஎம்ஐ அடாப்டர் போன்றவைகளும் தேவைப்பட்டால் முறையே $19 மற்றும் $25க்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.575க்கு கிடைக்கும் மைக்ரோ கம்ப்யூட்டர் அறிமுகம்

சிப் மைக்ரோ கம்ப்யூட்டரின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 1ஜிகாஹெர்ட்ஸ் Allwinner 'R8' A13 பிராசஸர், Mali-400 GPU; 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டர்னல் மெமரி, யுஎஸ்பி போர்ட் மற்றும் OTG வசதியும் இருக்கின்றது. இதோடு வைபை 802.11 b/g/n, மற்றும் ப்ளூடூத் 4.0 கொண்டுள்ளது.

English summary
'World's First $9 Microcomputer' chip. check out here 'World's First $9 Microcomputer' chip. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot