Home
News

அந்தரத்தில் தொங்கி 4ஜி திரைப்படம் பார்க்கும் வசதி அறிமுகம்.! நொறுக்கு தீனி ட்ரோன்ல வருது.!

கிரேனில் அந்தரத்தில் தொங்கி பார்க்கும் வசதியை 4ஜி நிறுவனம் இங்கிலாந்தில் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. இதில் திரைப்படங்களை துல்லியமாக 4 ஜி தொழில் நுட்பத்தின் உதவியோடு பார்க்கலாம்.

டூரிங் டாக்கீஸ்ல படம் பாத்து இருக்கன், டென்ட் கொட்டாய்ல படம் பார்த்து இருக்கன், டிவி படம் பார்த்து இருக்கன், 3டிலையும் படம் பார்த்துக்கு இருக்கரன் பா. இப்பதான் அந்தரத்துல அதுவும் 4ஜியில படம் பார்க்க போறான்.

அந்தரத்தில் தொங்கி 4ஜி திரைப்படம் பார்க்கும் வசதி  அறிமுகம்.!

சொன்ன எல்லாத்துலையும் படம் பார்த்து போர் அடிச்சு போச்சு பா, இனிமேல் எப்படி படம் பார்க்கறனும் நினைச்சவங்களுக்கு புதுசா 100 அடி அந்தரத்துல தொங்கி ஹாயா படம் பார்க்கலாம்.

இந்த வசதி புதுசா அறிமுகம் ஆகி இருந்தாலும் இப்பவே கூட்டம் குவியுது. கண்டிப்பா இது நம்ம நாட்டுல இல்ல. இந்த வசதியும் நம்ம நாட்டுல விரைவில் வரும். இது குறித்து விரிவா பார்க்கலாம்.

4G EE என்ற நிறுவனம்:

4G EE என்ற நிறுவனம்:

4ஜி இஇ என்ற நிறுவனம் தற்போது 4 ஜியில் படம் பார்க்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. குட்டி தியேட்டர் போலே அந்தரத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியில் படம் பார்ப்பது அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகின்றது.

இங்கிலாந்தில் அறிமுகமாகியுள்ளது:

கிரேனில் அந்தரத்தில் தொங்கி பார்க்கும் வசதியை 4ஜி நிறுவனம் இங்கிலாந்தில் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. இதில் திரைப்படங்களை துல்லியமாக 4 ஜி தொழில் நுட்பத்தின் உதவியோடு பார்க்கலாம்.

20 பேர் வரை அமர்ந்து பார்க்கலாம்:

20 பேர் வரை அமர்ந்து பார்க்கலாம்:

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யேக தியேட்டரில் 20 பேர் வரை அமர்ந்து புது தொழில் நுட்பத்தில் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம். நமக்கு கழிவறை செல்ல வேண்டும் என்றாலும் அங்கு சிறிய கழிவறையும் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

100 அடி அந்தரத்தில்:

100 அடி அந்தரத்தில்:

நாம் 100 அடி ஆகாயத்தில் இருந்தாலும் நமக்கு தேவைப்படும் போது நொறுக்கு தீனி மற்றும் தின்பண்டங்கள் சாப்பிட வேண்டும் என்று நினைத்து அருகே உள்ள கம்பியூட்டரிலோ இல்லை அங்கு நமக்கு கொடுக்கப்பட்டுள்ள மொபைலில் எண்ணிலோலோ ஆடர் கொடுத்தால், ட்ரோனிகளில் நாம் இருக்கும் இடத்தில் நொறுக்கு தீனி தானாக வந்து சேரும்.

கிரேன் உதவி:

கிரேன் உதவி:

கிரேன் உதவியோடு அந்தரத்தில் தொங்கும் பிரத்யேக தியேட்டரில் தற்போது 20 பேர் அமர்ந்து படம் பார்த்தாலும், அது திறந்தவெளியாக இருந்தாலும் விரைவில் ஏராளமானோர் அமர்ந்து பார்க்கும் வசதியை ஏற்படுத்தப்படும் என்று 4ஜி இஇ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் மேலே இருந்து காட்சி பார்த்தும், இயற்கை காட்சிகளோடு படம் பார்த்த அனுபவம் பார்வையாளர்களை மகிழ்ச்சி ஆழ்த்தியுள்ளது. இந்த வசதி இந்தியாவுக்கும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
World's First 4G Cinema in the Sky EE 4GEE Cinema : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X