அனகோண்டா பாம்பு போல இருக்கும் இது தான் உலகின் மிகப்பெரிய விவசாய பூமி.! எங்க இருக்கு தெரியுமா?

|

பார்ப்பதற்கு ஏதோ ராட்சச அனகோண்டா பாம்பு போலக் காட்சி அளிக்கும் இந்த உருவம் என்னது என்று பலரும் யோசித்திருப்பீர்கள்? இது என்னது என்ற உண்மையை நாங்கள் சொல்லினால் நீங்களே நம்புவதற்கு தயக்கம் காட்டுவீர்கள்.! காரணம், இது பாலைவன பூமியான துபாயில் உருவாகப் போகும் புதிய அக்ரி ஹப் (Agri Hub Dubai) ஆகும்.

அக்ரிகல்சுரல் ஹப் (Agricultural hub) என்றால் விவசாயம் செய்யப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு கூடாரம் என்று பொருள்.. இது வெறும் விவசாயம் கூடாரம் மட்டுமில்லை ஒட்டுமொத்த டூரிசம் அனுபவத்தையும் மாற்ற போகும் சொர்க்க பூமி. வழக்கமாகக் கூடாரம் என்றால் சிறிய அளவில் தான் இருக்கும், ஆனால், துபாய் என்று வரும்போது எல்லாமே பெரியதாகப் பிரமிக்கும் விதத்தில் தான் உருவாக்கப்படும் - அப்படி உலகின் மிகப்பெரிய ராட்சச விவசாய கூடாரமாக (World's Biggest Agri Hub) இந்த அக்ரிகல்சுரல் ஹப் உருவாக இருக்கிறது என்பதே உண்மை.!

அனகோண்டா பாம்பு போல இருக்கும் இது தான் உலகின் மிகப்பெரிய விவசாய பூமி.!

இந்த உலகின் மிகப்பெரிய விவசாய கூடாரம் பாலைவன பூமியில் விவசாயத்தை ஊக்குவிப்பது மட்டுமின்றி, சுமார் 10,000 நபர்களுக்கான வேலைவாய்ப்பையும் வழங்க உள்ளதாம். இது வெறும் ஒரு விவசாய கூடாரமாக இல்லாமல், துபாயின் முக்கிய டூரிசம் தளமாக மாறவும் இருக்கிறது என்பதே உண்மை.

இந்த வகையான புது டூரிசம் முறையைத் துபாய் அக்ரி டூரிசம் (Agritourism) என்று அழைக்கிறது. இந்த அக்ரி டூரிசம் என்பது விவசாயம் மற்றும் டூரிசம் இரண்டையும் கலந்து செய்யும் புதுவகையான பொழுதுபோக்கு அம்சமாகவும்; விவசாயத்திற்கான புது ஊக்குவிக்கும் யுக்தியாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பிளாக சொன்னால், 'ஒரே கல்லில் 2 மாங்கா'.!

அனகோண்டா பாம்பு போல இருக்கும் இது தான் உலகின் மிகப்பெரிய விவசாய பூமி.!

இந்த புதிய அக்ரி ஹப் மூலம் துபாய் தனது நாட்டிற்கும் வரும் விருந்தாளிகளை ஒரு விவசாய பூமியில் தங்குவதற்கான நேரடி அனுபவத்தை வழங்கவுள்ளது. இதற்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சிறிய வீடுகளும், பெரிய மாளிகைகளும், ஹோட்டல்களும் இங்கு உருவாக்கப்படுகிறது. இந்த இடங்கள் அனைத்துமே இந்த அக்ரிகல்சுரல் ஹப் உள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு மெகா சைஸ் ஃபார்ம் ஹவுஸ் ஆகச் செயல்படப் போகிறது.

இந்த விவசாய கூடாரத்திற்குள் - ரீட்டைல் கடைகள், கமர்சியல் கடைகள், பொழுதுபோக்கு அம்சம், கல்வி கூடாரம், தங்குவதற்கான இடங்கள், விவசாயத்திற்கான ஆராய்ச்சி கூடாரம் என்று பல வகையான இடங்களை இந்த கூடாரம் அடக்கி உள்ளது. இந்த விவசாய கூடாரத்திற்குள் உருவாக்கப்படும் காய்கறிகள் அனைத்தும் ஆர்கானிக் முறையில் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனகோண்டா பாம்பு போல இருக்கும் இது தான் உலகின் மிகப்பெரிய விவசாய பூமி.!

இதனால் இங்கு வருபவர்கள் பாதுகாப்பான மற்றும் சுத்தமான தூய உணவுகளை சாப்பிட்டு மகிழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்கு வரும் விருந்தாளிகள் நேரடியாக விவசாய தளத்திலிருந்து பறிக்கப்படும் பிரெஷ் உணவுகளை நேரடியாக அவர்கள் டைனிங் டேபிளில் சமைத்து உண்ணும் அனுபவம் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இங்கு இருக்கும் அக்ரி டெக் இன்ஸ்டிட்யூட் புதிய கோணத்தில் பாலைவனத்தில் எப்படி விவசாயம் செய்வது என்று ஆராய்ச்சியையும் நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாபெரும் ராட்சச அக்ரி ஹப் படைப்பின் மூலம், துபாய் உலகின் முதல் அக்ரி டூரிசம் முறையை அறிமுகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் ராட்சச அக்ரி ஹப் கட்டுமான பணிகள் 2030 ஆம் ஆண்டு துவங்கி 2050 ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்று துபாய் அறிவித்துள்ளது. இந்தியாவில் விவசாய நிலங்கள் எல்லாம் பிளாட்டாகவும், வீடுகளாகவும் மாறி வரும் சூழ்நிலையில், பாலைவன பூமியில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகத் துபாய் எடுத்துள்ள இந்த புதிய நடவடிக்கை பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதைப் பதிவு செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
World's Biggest Ever Man Made Agri Hub Will Built In Dubai To Change Face Of Agritourism

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X