ஜில்லுனு ஒரு காதல்: மனைவியுடன் பாத்திரம் கழுவிய "பில்கேட்ஸ்"- எதற்கு தெரியுமா?

|

பில்கேட்ஸ் என்றால் நினைவுக்கு வருவது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை இயக்குநர், உலகின் மிகப்பெரிய பணக்காரர், உலக புகழ் பெற்றவர், பலரின் முன் உதாரணமாக இருப்பவர். ஆனால் இவர் அலுவலகத்துக்கென்று தொடர்ச்சியாக கடைசியாக சென்றது கடந்த 2008 ஆம் ஆண்டுதான் என்று கூறுப்படுகிறது.

பல்வேறு அறிவுரைகள் கேட்டிருப்போம்...

பல்வேறு அறிவுரைகள் கேட்டிருப்போம்...

பொதுவாக ஒரு ஆண் வெற்றிக்கு பின்னாடி பெண் இருப்பார் என்று கூறுவது உண்டு. அதேபோல் ஒருவர் அலுவலகத்தில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் போது அலுவலகத்தை நினைக்காதே, அலுவலகத்தில் இருக்கும் போது வீட்டை நினைக்காதே, முழு கவனத்தையும் ஒரு விஷயத்தில் செலுத்து போன்ற அறிவுரைகளை கேட்டிருப்போம். ஆனால் இது அனைத்தும் பில்கேட்ஸிடம் உள்ளது.

வருவாயில் ஒரு பகுதி

வருவாயில் ஒரு பகுதி

அதேபோல் பில்கேட்ஸ் சுகாதாரத்திற்கு மிகப்பெரிய முன்னுரிமை அளிப்பவர். பில்கேட்ஸ் தன் வருவாயில் ஒரு பகுதியை விவசாயம், உலகளாவிய வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு போன்ற அனைத்திற்கும் அளித்து வருகிறார். இருப்பினும் அவர்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்.

சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பில்கேட்ஸ்

சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பில்கேட்ஸ்

சமீபத்தில் கூட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் போன்ற அத்தியாவசிய வசதியில்லாத காரணத்தால் திறந்தவெளி கழிப்பறை பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்த பில்கேட்ஸ், தண்ணீர் தேவைப்படாத கழிப்பறையை அறிமுகப்படுத்தினார். அது தற்போது தென்னாப்பிரிக்காவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பேஸ்புக்கிலிருந்து போட்டோஸ், வீடியோஸ்களை கூகுள் போட்டோஸிற்கு நேரடியாக மாற்றலாம்!பேஸ்புக்கிலிருந்து போட்டோஸ், வீடியோஸ்களை கூகுள் போட்டோஸிற்கு நேரடியாக மாற்றலாம்!

பில் கேட்ஸ் குடும்பம்

பில் கேட்ஸ் குடும்பம்

பில் கேட்ஸ் ஜனவரி 1, 1994 ஆம் வருடம் மெலிண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஜெனிபர் காதரின் , போஃப் அடேல் என்று இரு மகள்களும் ரோடி ஜான் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

வெற்றி பாதைக்கான வழி

வெற்றி பாதைக்கான வழி

குடும்பத்தாருடன், நேரத்தை செலவிடும் பில்கேட்ஸ் இல்லற வாழ்க்கை குறித்து கூறுவதை கேட்கலாம். ஒருவரின் திருமண வாழ்க்கை வெற்றி பெறுவது என்பது அவர்களின் பொருளாதாரத்தை பொறுத்தோ, சமூகத்தில் அவர்களின் அந்தஸ்தை பொறுத்தோ இல்லை. கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருக்கும் புரிதல் மட்டும்தான் அவர்களின் வாழ்க்கையை வெற்றி பாதைக்கும், மகிழ்ச்சி பாதைக்கும் அழைத்து செல்லும்.

பாத்திரம் கழுவும் போது அனைத்தையும் பேசுவோம்

பாத்திரம் கழுவும் போது அனைத்தையும் பேசுவோம்

தனது மனைவி பாத்திரம் விளக்கும் போது நானும் சேர்ந்து அவருக்கு உதவி செய்வது வழக்கம். தினந்தோறும் இரவில் இருவரும் ஒன்றாக பாத்திரம் விளக்குவோம். இருவரும் அதிகமாக ஒன்றாக இருக்கும் நேரம் அதுமட்டும்தான். அந்த இடத்தில் நிறைய பேசுவோம். ஏதாவது மனஸ்தாபம் இருந்தாலும் அதை அந்த இடத்தில் பேசி முடித்துக் கொள்வோம்.

மர்மத்தை உடைத்த நாசா: விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு- புகைப்படம் வெளியீடுமர்மத்தை உடைத்த நாசா: விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு- புகைப்படம் வெளியீடு

அதிக நேரத்தை குடும்பத்தாருடன் செலவிடுங்கள்

அதிக நேரத்தை குடும்பத்தாருடன் செலவிடுங்கள்

குடும்ப வாழ்க்கையை உண்ணதமாக இருக்க வேண்டும் என்றால் அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அவர்களுடன் பார்க்கும் பணியில் தாமும் இணைந்து சேவை செய்ய வேண்டும் என தெரிவிக்கிறார்.

source: orissapost.com

Best Mobiles in India

English summary
World richest man bill gates still washing dishes- secret of success

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X