உலகப் போரே நடக்கும்: கொரோனா வைரஸ் குறித்து ஒரு ஆண்டு முன்பே கணித்த பில் கேட்ஸ்!

|

சீனாவில் கொடிய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தாக்கமானது 11 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரில் தான் முதலில் ஏற்பட்டது. இதனால் அங்கு மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

1000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை

1000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை

நோயாளிகள் அதிகரிப்பால் போதிய மருத்துவமனையின்றி வுஹான் நகரம் ஸ்தம்பிக்க தொடங்கியது. இதன் காரணமாக 1000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையை கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கொரோனா தாக்கம் உள்ளவர்களை இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பிறருக்கு நோய்கள் பரவாமல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

106 பேர் உயிரிழந்ததாக தகவல்

106 பேர் உயிரிழந்ததாக தகவல்

தற்போதைய நிலைவரை கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கிய கடந்த சில வாரங்களிலேயே 106 பேர் உயிரிழந்ததாகவும், 2800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த பதற்றம் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் இந்த வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது.

50 லட்சம் பேர் வெளியேறி உள்ளதாக தகவல்

50 லட்சம் பேர் வெளியேறி உள்ளதாக தகவல்

வுஹான் நகரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், அந்த நகரத்தில் மக்கள் வெளியேருவதற்கும், உள்ளே வருவதற்கும் தடை செய்யப்படுமாறு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இந்த தடை செய்யப்படுவதற்கு முன்பாக சுமார் 50 லட்சம் பேர் நகரத்தில் இருந்து வெளியேறி உள்ளனர் என அந்த நகர மேயர் சோவ் சியான்வாங் அதிர்ச்சி தகவல் அளித்தார்.

29,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

29,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகள் உட்பட இந்தியாவின் 7 விமான நிலையங்களில் சுமார் 29,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்துக்குரிய 7 பயணிகளின் மாதிரிகள் மட்டும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அட்ராசக்க., 13 வகை ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு: சாம்சங்,சியோமி,விவோ என பல நிறுவனங்கள்அட்ராசக்க., 13 வகை ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு: சாம்சங்,சியோமி,விவோ என பல நிறுவனங்கள்

குறிப்பிட்ட சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்

குறிப்பிட்ட சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்

சீனாவில் வசிக்கும் இந்தியர்கள், சீனாவுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள், சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு ஆண்டுக்கு முன்பே கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

சூப்பர் வைரசால் இந்த உலகம் முழுவதும் பாதிக்கப்பட உள்ளது

சூப்பர் வைரசால் இந்த உலகம் முழுவதும் பாதிக்கப்பட உள்ளது

மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் கடந்த ஆண்டு மசாசூட்ஸ் மருத்துவ சங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசுகையில், விரைவாக பரவுகின்ற சூப்பர் வைரசால் இந்த உலகம் முழுவதும் பாதிக்கப்பட உள்ளது.

புலியிடம் தனியாக சிக்கிய இளைஞர்: சிறு காயமின்றி சாமர்த்தியமாக உயிர் தப்பி அசத்தல்- இதோ வீடியோபுலியிடம் தனியாக சிக்கிய இளைஞர்: சிறு காயமின்றி சாமர்த்தியமாக உயிர் தப்பி அசத்தல்- இதோ வீடியோ

உலகப் போர் ஏற்படும் ஆபத்தும் உள்ளது

உலகப் போர் ஏற்படும் ஆபத்தும் உள்ளது

இந்த வைரசால் முதல் 6 மாதத்தில் 3.30 கோடி பேர் இறக்க கூடும். அந்த வைரசால் உலகப் போர் ஏற்படும் ஆபத்தும் உள்ளது என கூறியுள்ளார். அதோடு, அந்த வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்கு நாம் தயாராக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பில்கேட்ஸ் கணிப்பு, இந்த கொரோனா குறித்த என்பது துல்லியமாக தெரியவில்லை என்றாலும், கொரோனா தாக்கம் அவர் வார்த்தைக்கு ஏற்ப பரவி வருகிறது.

Best Mobiles in India

English summary
world needs to prepare for pandemics just like war: Bill gates predicted Chinese corona virus a year ago!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X