ஒமைக்ரான் வைரஸ்: மிகவும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம்.! பில்கேட்ஸ் தகவல்.!
தற்போது ஒமைக்ரான் வைரஸ் என்ற புதிய கோவிட் வேகமாக பரவி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், டெல்லி,தமிழகம், குஜராத், ராஜஸ்தான், மகாரஷ்டிரா போன்ற பல மாநிலங்களில் ஒமைக்ரான் கால் பதித்து விட்டது.

அதேபோல் சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 220 ஆக உயர்ந்துள்ளது எனவும், இது டெல்டாவை விட தீவிரத்தன்மை கொண்டதால் 3-வது அலையை தடுக்க கட்டுப்பாடு அவசியமாகிறது. மேலும் இரவு ஊரடங்கு, எப்போதும் செயல்படும் உதவி மையம்,
கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றின் மிகவும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அனைத்து நாடுகளிலும் ஒமைக்ரான் வைரஸின் பரவல் மிகவும் கவலைதரும் வகையில் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பா அவர் ட்விட்டரில் தெரிவித்த கருத்து என்னவென்றால், கொரோனா பெருந்தொற்றின் மிகவும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம். குறிப்பாக அனைத்து இடங்களிலும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகமாக உயர்கிறது. எனக்கு நெருக்கமான நண்பர்கள் பலர் இந்த மோசமான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் எனது விடுமுறை திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டேன்
என்று கூறியுள்ளார்.

அதேபோல் இந்த மோசான ஒமைக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து நாம் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பின்பு மக்கள் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் என பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

அதேபோல் இப்போதும் பல நிறுவனங்கள் வொர்க் ஃப்ரெம் ஹோம் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மேலும் வரும் 2022 ஜனவரி 10 முதல்ஊழியர்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு மூன்று நாட்களாவது அலுவலகம் வர வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் கூகுள்நிறுவனம் தெரிவித்திருந்தது. குறிப்பாக வொர்க் ஃப்ரெம் ஹோம் திட்டத்தை கைவிடுதாகவும் சொல்லி இருந்தது. ஆனால் பல நாடுகளில் ஒமைக்ரான் கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் கூகுள் நிறுவனம் அந்த முடிவை கைவிட உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஊழியர்கள் எப்போது அலுவலகம் வர வேண்டும் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என கூகுள் நிர்வாகம், ஊழியர்களிடம் சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஊழியர்கள் தாங்கள் தடுப்பூசி செலுத்தியதன் விவரம் குறித்த ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்பு தடுப்பூசி செலுத்த முடியாத நிலை இருந்தால் அதற்கான மருத்து ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இல்லாத பட்சத்தில் தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்போம். குறிப்பாக வரும் ஜனவரி 18-ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லையெனில், 30 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். அதை தொடர்ந்து சம்பளம் இல்லாத விடுப்பும் தொடர்ந்து
பணி நீக்கமும் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டதாக செய்திகள்வெளிவந்துள்ளன.


Click it and Unblock the Notifications