Home
News

World Earth Day 2022: ச்ச! எப்படி இருந்த பூமி இப்படி ஆகிடுச்சு.. கூகிள் டூடுல் சொல்லும் முக்கியமான விஷயம்..

World Earth Day 2022: கூகுள் டூடுல் , ஆக்கப்பூர்வமான மற்றும் நகைச்சுவையான அனிமேஷன்களுடன் உலகம் முழுவதும் மிக முக்கியமான நாட்களைக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அதன் டூடுல் படைப்புகளில் ஏதேனும் ஒரு விதியசத்தை செய்து கூகிள் பயனர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் வடிவமைக்கிறது. அப்படி, கூகிள் நிறுவனம் ஏப்ரல் 22 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலக புவி தினமான 2022 தினத்திற்காக ஒரு புதிய டூடுல் படைப்பை மீண்டும் ஒருமுறை புதிய முயற்சியுடன் உருவாகியுள்ளது.

ச்ச! எப்படி இருந்த பூமி இப்படி ஆகிடுச்சு..

ச்ச! எப்படி இருந்த பூமி இப்படி ஆகிடுச்சு..

இதுவரை கூகிள் டூடுல் உருவாக்கிய மிகவும் ஆக்கப்பூர்வமான டூடுல்களில் இதுவும் சிறப்பான ஒன்று என்று நாம் கூறலாம். Google நிறுவனம் இம்முறை அதன் முகப்புப் பக்கத்தில் காலநிலை மாற்றத்துடன் பூமி தினம் 2022 பற்றிய விழிப்புணர்வைப் பரப்புகிறது. இதற்காகக் கூகிள் உருவாக்கிய புதிய டூடுல், இந்த கிரகம் முழுவதும் பல தசாப்தங்களாக காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் எப்படிப்பட்ட மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. குறிப்பாக, நாம் எவ்வளவு அலட்சியமாகப் பூமியின் வளங்களை இழந்து வருகிறோம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

பவளப்பாறைகள், பனிப்பாறைகள் மற்றும் பூமியின் பொதுவான பசுமை க்கு என்னாச்சு?

பவளப்பாறைகள், பனிப்பாறைகள் மற்றும் பூமியின் பொதுவான பசுமை க்கு என்னாச்சு?

கூகுள் எர்த் மூலம் சேகரிக்கப்பட்ட படங்களின் தொகுப்பின் மூலம் ஒரு டைம் லேப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. பவளப்பாறைகள், பனிப்பாறைகள் மற்றும் பொதுவான பசுமை உட்படக் கிரகத்தின் பல பகுதிகளை இந்த டூடுல் படங்கள் காட்டுகிறது. இது பல தசாப்தங்களான படங்களை டைம் லேப்ஸ் பார்வையின் மூலம் நேரத்தை மிக சுருக்கமாகக் குறைத்துக் காண்பிக்கிறது. இன்று நீங்கள் கூகுள் டூடுலைக் கிளிக் செய்யும் போது, ​​காலநிலை மாற்றத்தின் மீது கவனம் செலுத்தும் டைம் லேப்ஸ் புகைப்படங்களைக் காண்பீர்கள். மேலும், இந்த புகைப்படத்துடன் ஏற்படும் சிக்கலுடன் இணைக்கப்பட்டுள்ள பல அம்சங்களையும் விளக்குகிறது.

பூமியின் இயற்கை வளம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறதா?

பூமியின் இயற்கை வளம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறதா?

இந்த பூமி தினத்தின் போது, காலநிலை மாற்றத்தால் பூமியின் இயற்கை வளம் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என்பதை இந்த டூடுல் தெளிவாகக் காண்பிக்கிறது. பல தசாப்தங்களை சில நொடியில் காண்பிக்கிறது. காலநிலை மாற்றத்தின் விளைவுகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், "வெப்பமான வெப்பநிலை காலப்போக்கில் வானிலை வடிவங்களை மாற்றுகிறது மற்றும் இயற்கையின் வழக்கமான சமநிலையைச் சீர்குலைக்கிறது. இது மனிதர்களுக்கும் பூமியில் உள்ள மற்ற அனைத்து வகையான உயிரினங்களுக்கும் பல ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது." என்பதைக் கூகிள் குறிப்பிட்டுள்ளது.

பூமியின் ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணம் என்ன?

பூமியின் ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணம் என்ன?

பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணம் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம் என்று கூகுள் மேலும் விளக்கியது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, "கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகள் பூமியை மூடுவதால், அவை சூரியனின் வெப்பத்தை ஈர்த்துச் சிக்க வைக்கின்றன. இது புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் எந்தப் புள்ளியையும் விட உலகம் இப்போது வேகமாக வெப்பமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் வெப்பமடைதல் அழிவிற்கான அறிகுறி என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

பூமியை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறிய மாற்றங்களுடன் களமிறங்குவோம்

பூமியை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறிய மாற்றங்களுடன் களமிறங்குவோம்

UN ActNow, பூமி நாள் 2022 அன்று மக்கள் காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான பல வழிகளையும் கூறியுள்ளது. மக்கள் வீட்டில் அதிக ஆற்றலைச் சேமிக்கவும், வேலைக்குச் செல்ல மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தவும், அதிக காய்கறிகள் மற்றும் குறைந்த இறைச்சியைச் சாப்பிடவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த சிறிய விஷயங்கள் மீது மக்கள் அதிக கவனம் செலுத்தினால், பூமியின் ஆயுளை மீட்டெடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இனியாவது பூமியை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறிய மாற்றங்களுடன் களமிறங்குவோம்.

Best Mobiles in India

English summary
World Earth Day 2022 Google Doodle Creates Time lapse Of How Climate Change Impacts Daily Life : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X