Home
News

ரேட்டிங் இல்லான ID கார்டு பிளாக்கிங்! புது ரூல்ஸ் போட்ட கம்பெனி! வெளியே பியூட்டிசியன்ஸ்!

பெரும்பாலான கார்ப்பரேட் கம்பெனிகள் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு விதவிதமான ரூல்ஸ்களை போட்டு, திண்டாட வைப்பதை நாம் பாத்திருப்போம். ஆனால், அர்பன் கம்பெனி (Urban Company) என்னும் நிறுவனம் ஒருபடி மேலே போய் ஊழியர்களை சங்கடப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

அர்பன் கம்பெனி என்னும் கார்ப்பரேட் நிறுவனம், பியூட்டி ட்ரீட்மென்ட்ஸ் (Beauty Treatment), மசாஜ் தெரபி (Massage Therapy), ஹேர் ஸ்டைலிங் (Hair Styling) உள்ளிட்ட பல்வேறு வாடிக்கையாளர் சேவையை வழங்கிவருகிறது. இந்தியா முழுவதும் அர்பன் கம்பெனியின் கிளைகள் இருக்கின்றன. இதில், பியூட்டி ட்ரீட்மென்ட்ஸ் சேவையானது, அர்பன் கம்பெனி ஆப் (Urban Company App) புக்கிங் மூலம் வழங்கப்படுகிறது.

ரேட்டிங் இல்லான ID கார்டு பிளாக்கிங்! வெளியே நிற்கும் பியூட்டிசியன்ஸ்!

இதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சேவை குறித்து ரேட்டிங் கொடுக்கும் வசதியும் இருக்கிறது. இந்த ரேட்டிங் மூலம் அந்த கம்பெனியில் வேலை செய்யும் பியூட்டிசியன்களுக்கு கிரிடிட்ஸ் கொடுக்கப்படுகிறது. இங்கு பியூட்டிசியன்களாக பணிக்கு சேர வேண்டும் என்றாலோ அல்லது பயிற்சி பெற வேண்டும் என்றாலோ ரூ.1 லட்சம் பணம் கட்டி சேர்ந்து கொள்ளலாம். இவர்களின் திறமையை பொறுத்து சம்பளம், ஸ்டைபெண்ட் கொடுக்கப்படும்.

இதன் மூலம் பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என ஆயிரக்கணக்கானோர் பியூட்டிசியன் பார்ட்னர்களாக அங்கு பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல குருகிராமில் செயல்பட்டுவரும் அர்பன் கம்பெனியின் கிளை அலுவலகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பியூட்டிசியன் பார்ட்னர்கள் பணிபுரிந்தும், பயிற்சி பெற்றும் வருகின்றனர். இவர்களுக்கும் வழக்கம்போல் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரேட்டிங் வந்துள்ளது.

இதில பலருக்கு மொத்தமாக உள்ள 5 ஸ்டார் ரேட்டிங்கில் 4.8 க்கும் கீழே கொடுக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த கம்பெனி, இவர்களின் ஐடி கார்டுகளை சொல்லாமலேயே பிளாக் செய்துள்ளது. இதனால், நாள்தோறும் வேலைக்கு வரும் பல பியூட்டிசியன்கள், அலுவலகத்துக்குள் நுழைய முடியாமல், வெளியிலேயே காத்திரும் சூழல் ஏற்பட்டது. இப்படி பல மாதங்களாக நடந்து வந்துள்ளது.

ரூ.1 லட்சம் பணத்தையும் வாங்கிக்கொண்டு, இப்படி நடத்துவதா? என்று கோபம் கொண்ட பியூட்டிசியன்கள், நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய போது, நீங்கள் பயிற்சிக்கோ, பணிக்கோ சேரும்போதே, இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளீர்கள். ஆகவே, இதை மாற்ற முடியாது என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பியூட்டிசியன்கள் கடந்த 4 நாட்களாக ஐடி கார்டு பிளாக்கிங் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பியூட்டிசியன்கள் கூறுகையில், "இந்த அர்பன் கம்பெனியில் பாராபட்சமாக வேலை வழங்கப்படுகிறது. இங்கு உயர் பதிவியில் இருக்கும் சிலர், தங்களுக்கு வேண்டிய பியூட்டிசியன்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து பீக் நேரத்தை ஒதுக்குகின்றனர். இதனால் பலருக்கு சில கஸ்டமர்கள் மட்டுமே கிடைக்கின்றனர். இதையும் கெடுக்கும் நோக்குடன் ஐடி கார்டு பிளாக்கிங் செய்துவிட்டு, அந்த நேரத்தில் வேறு பியூட்டிசியன்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது" எனத் தெரிவித்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அர்பன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும், பியூட்டிசியன்களை ஊக்குவிக்கவும் ஐடி கார்டு பிளாக்கிங் நடைமுறை இருக்கிறது. இது தற்காலிகமான நடைமுறை மட்டுமே. நிரந்தரமானது கிடையாது. இதுகுறித்து போராட்டம் நடத்திவரும் பியூட்டிசியன்களோடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் எனத் தெரிவித்தார்.

இருப்பினும், ஊழியர்களை அலுவலகத்துக்குள் நுழையவிடாமல் தடுப்பது என்பது முறையல்ல என்ற பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்பதெல்லாம், கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் ஊழியர்களை எளிதாக அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் தடுத்துவிடுகிறது.

Best Mobiles in India

English summary
Workers Protest Against Urban Company ID Card Block Policy For Low Ratings Here is Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X