அலுவலகத்துக்கு வந்து வேலை- பின்வாங்கிய முடிவுகள்., ஆப்பிள் ஊழியர்களுக்கு அறிவித்த சிறப்பு திட்டம்!

|

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி முன்னதாக ஊழியர்களை வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று காரணமாக நிறுவனம் தற்போது தனது முடிவை நிறுத்தி வைத்துள்ளது.

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்பும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் தற்போது அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுகள் காரணமாக ஆப்பிள் தனது முடிவை நிறுத்தி வைத்திருக்கிறது. ஆப்பிள் குறிப்பிட்ட தொழிலாளர்களுக்கு வேலை நேரங்களின் அடிப்படையில் சில திட்டங்களையும் அறிவித்திருக்கிறது.

அலுவலகத்திற்கு திரும்பும் படி அறிவிப்பு

அலுவலகத்திற்கு திரும்பும் படி அறிவிப்பு

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்பும் படி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு ஆப்பிள் ஊழியர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. அலுலகத்திற்கு வந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தியதை தொடர்ந்து சுமார் ரூ.6 கோடி வரை வருடாந்திர வருமானம் பெற்ற ஆப்பிள் இன்ஜினியர் வேலையில் இருந்து விலகி கூகுளில் இணைய விரும்பினார். இதையடுத்து தற்போது வெளியான சமீபத்திய புதுப்பிப்புப்படி, குபெர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமானது சில தொழிலாளர்களுக்கு வேலை நேரத்தை நெகிழ்வாக மாற்றும் வகையிலான சில திட்டங்களை அறிவித்துள்ளது.

இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு

இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு

ஆப்பிள் நிறுவனத்தில் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவை மேற்பார்வையிட்டு வந்த ஊழியர் இயன் குட்ஃபெலோ, நெகிழ்வான பணிச்சூழல் மற்றும் கொள்கைகள் இல்லாத காரணத்தால் கடந்த மாதம் ராஜினாமா செய்தார். குட்ஃபெலோ ஆல்பாபெட் இன்க் இன் டீப்மைண்ட் பிரிவில் இணைந்துள்ளார். இவர் மார்ச் 2019 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்தவர். முன்னதாக ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி ஊழியர்களை வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டார். அதிகரித்து வரும் கோவிட்-19 பாதிப்பு காரணமாக நிறுவனம் தற்போது இந்த முடிவை நிறுத்தி வைத்திருக்கிறது.

திட்டமிடல் மாற்றங்கள் குறித்த விவரம்

திட்டமிடல் மாற்றங்கள் குறித்த விவரம்

ப்ளூம்பெர்க் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, திட்டமிடல் மாற்றங்கள் குறித்த விவரம் வரவிருக்கும் மாதங்களில் வெளியிடப்படும் என ஆப்பிள் கூறியுள்ளது. மாற்றங்களில் ஷிப்டுகளுக்கு இடையே உள்ள குறைந்தபட்ச நேரத்தை 10 மணிநேரத்தில் இருந்து 12 மணிநேரமாக நீட்டிப்பதும் அடங்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பான விஷயங்கள் எதையும் நிறுவனம் தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை.

பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை முறை

பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை முறை

கோவிட்-19 தொற்றுநோய் பரவல் என்பது பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்திருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக பள்ளிக் கல்லூரியில் படித்தவர்கள் ஆன்லைன் வகுப்பு ஆன்லைன் தேர்வு என்ற முறைக்கு மாற்றப்பட்டனர். கொரோனா காலத்தில் சில நிறுவனங்கள் லாபம் கிடைப்பதில்லை என்று கூறி வேலையாட்களை குறைப்பதும், அவர்களின் வருமானத்தில் சில சதவீதங்களை குறைக்கும் சூழலுக்கும் தள்ளப்பட்டன. அதேபோல் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தியது. கொரோனா தொற்றில் இருந்து உலகம் விடுபட்டு வரும் நிலையில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட "வொர்க் ஃப்ரம் ஹோம்" திட்டம் படிப்படியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது.

40 மணி நேரமாவது வேலை செய்ய வேண்டும்

40 மணி நேரமாவது வேலை செய்ய வேண்டும்

பிரபல நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தங்களது ஊழியர்களுக்கு அனுப்பிய இமெயில் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், டெஸ்லா ஊழியர்கள் உடனே அலுவலகத்துக்கு திரும்ப வேண்டும், வாரத்துக்கு 40 மணி நேரமாவது வேலை செய்ய வேண்டும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்காதவர்கள் வேலையில் இருந்து வெளியேறும்படி எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவல் உலகை ஆக்கிரமித்த போது ஊழியர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் திட்டத்தை அமல்படுத்தியது. தற்போது கொரோனா தொற்று பரவலில் இருந்து விடுபட்டு உலகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் தொற்று பரவல்

மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் தொற்று பரவல்

இருப்பினும் குறிப்பிட்ட இடங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள காரணத்தால் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வாரத்தில் இத்தனை நாட்கள் அலுவலகத்துக்கு வர வேண்டும், ஷிப்ட் முறை போன்ற பல்வேறு முறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Work From Office: Apple Hold its Decision Due to Rising Covid-19 Cases

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X