Work From Home 4G Data Plans List: வொர்க் ஃப்ரம் ஹோம்: டெலிகாம் நிறுவனங்களின் அருமையான திட்டங்கள்.!
கொரோனா வைரஸ் பரவக்கூடாது என்பதற்காக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்டன. எனவே பல்வேறு மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்துவருகின்றனர். மேலும் டெலிகாம்
நிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை செய்யும் நபர்களை கருத்தில் கொண்டு சிறந்த சேவையை வழங்கி வருகிறது.

குறிப்பாக ஜியோ நிறுவனமும் இன்று வொர்க் ஃப்ரம் ஹோம் கருத்தில் கொண்டு ஒரு அருமையான திட்த்தை அறிமுகம்செய்தது, கண்டிப்பாக ஜியோவின் இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது. மேலும் பிஎஸ்என்எல்உள்ளிட்ட நிறுவனங்களும் சிறந்த திட்டங்களை அறிவித்துள்ளது, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ நிறுவனம்
ஜியோ நிறுவனம் வழங்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் பேக்கின் விலை ரூ.251-ஆகும், இது 51நாட்கள் வேலிடிட்டி-ஐ அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் எந்த விதமான குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மையையும் அணுக கிடைக்காது.

இதற்கு முன்னதாக இது கிரிக்கெட் பேக் எனும் பெயரின் கீழ் இதே நன்மைகளை வழங்கியது என்பதும், தற்போது வொர்க் ஃப்ரம் ஹோம் எனும் பெயரை அளவிலான மாற்றத்தை மட்டுமே கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல்
பிராட்பேண்ட் சேவையில் மற்ற ஆபரேட்டர் நிறுவனங்களை விட அரசு நடத்தும் பிஎஸ்என்எல் எப்போதும் ஒருபடி முன்னிலையிலிருந்து பல சலுகைகளை அறிமுகம் செய்து வழங்கி வருகிறது. கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதிகமான பயனர்களை வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் BSNL நிறுவனம், ISP Work @ Home என்ற புதிய பிராட்பேண்ட் திட்டத்தை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது

எது இலவசமாக பிராட்பேண்ட் சேவையா என்று நீங்கள் சந்தேகமாகப் பார்க்காதீர்கள், உண்மையிலேயே பி.எஸ்.என்.எல் இன் இந்த Work @ Home இலவசமாகத் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சிறிய சூட்சம முடிச்சையும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் போட்டுவைத்துள்ளது. இந்த புதிய Work @ Home இணைப்பு அனைத்து பி.எஸ்.என்.எல் வட்டங்களிலும், அந்தமான் & நிக்கோபார் உட்பட எல்லா வட்டங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்த இலவச பிராட்பேண்ட் சந்தா உங்களுக்கு வேண்டுமென்றால் உங்களிடம் பிஎஸ்என்எல்லின் லேண்ட்லைன் இணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும். பி.எஸ்.என்.எல் லேண்ட்லைன் வைத்துள்ள தற்போதுள்ள பிஎஸ்என்எல் பயனர்கள் மட்டுமே இந்த திட்டத்தை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த Work @ Home திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 5 ஜிபி டேட்டா 10 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் இத்திட்டத்தின் கீழ் 1 எம்.பி.பி.எஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, 5 ஜிபி தினசரி வரம்பிற்குப் பிறகு இத்திட்டத்தில் எந்தவொரு FUP வரம்பும் இல்லை. கூடுதல் தகவல்களுக்கு BSNL வலைத்தளத்தை அணுகுங்கள்.

ஏர்டெல் நிறுவனம்
ஏர்டெல் நிறுவனம் பொறுத்தவரை எந்தவொரு வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தையும் அறிமுகம் செய்யவில்லை, ஆனாலும் சிறந்த டேட்டா திட்டங்களை கொண்டுள்ளது. அதன்படி எர்டெல் நிறுவனத்திடம் ரூ.298-திட்டம் உள்ளது,இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்பு,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்ததிட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.

ஏர்டெல் நிறுவனம் ரூ.698-திட்டத்தையும் வைத்துள்ளது, இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்பு,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியா நிறுவனமும் எந்தவொரு வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தையும் அறிமுகம் செய்யவில்லை, ஆனாலும் மக்களுக்கு பயன்படும் வகையில் அருமையான திட்டங்களை வைத்துள்ளது. இந்நிறுவனம் ரூ.299-ப்ரீபெய்ட் திட்டத்தைவைத்துள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்பு, உள்ளிட்ட சலுகைகள் 28நாட்கள்கிடைக்கும்.

வோடபோன் நிறுவனத்திடம் ரூ.398-ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்பு, உள்ளிட்ட சலுகைகள் 28நாட்கள் கிடைக்கும். அதேபோல் வோடபோன் வழங்கும் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டத்தில்
தினசரி 2ஜிபி டேட்டா சலுகையை 56நாட்கள் ஆகும். வோடபோன் நிறுவனத்தின் ரூ.558-திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா கிடைக்கும், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். வோடபோன் நிறுவனத்தின் ரூ.699-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது,இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications