Home
News

கடிச்சு கூட சாப்பிடலாம்.. உலகின் முதல் சாக்லேட் கண்ட்ரோலர்.. இலவசமாக வெல்ல ஒரு வாய்ப்பு..

எக்ஸ்பாக்ஸ் (Xbox) மற்றும் வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து, உருவாக்கியுள்ள புதிய உண்ணக்கூடிய கேமிங் கண்ட்ரோலர் பற்றி தான் இப்போது உலகம் முழுக்க பேச்சு. ஆம், உணவாக உண்ணக்கூடிய ஒரு முழுமையான சாக்லேட் மூலம் இந்த கேமிங் கண்ட்ரோலரை உருவாக்கியுள்ளனர்.

இனிய கேமிங் அனுபவத்திற்காக, வரவிருக்கும் திரைப்படமான "வோன்கா (Wonka)" உடன் இணைந்து செயல்படுகிறது. இந்த படத்தை ப்ரோமொட் செய்யும் விதமாக நிறுவனம், முழுக்க-முழுக்க தூய சாக்லேட்டால் செய்யப்பட்ட உண்ணக்கூடிய எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலருடன் ஸ்பெஷல் எடிஷன் வோன்கா சாக்லேட் பார் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் கன்சோலை அறிமுகம் செய்துள்ளது.

கடிச்சு கூட சாப்பிடலாம்.. உலகின் முதல் சாக்லேட் கண்ட்ரோலர்..

இதை பரிசாக வெல்லும் வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் வொன்காவை பரிசாக வெல்ல ஒரு லக்கி டிரா போட்டியை நடத்துகிறது. இந்த தனித்துவமான எக்ஸ்பாக்ஸ் கன்சோல் மற்றும் உண்ணக்கூடிய கண்ட்ரோலரை உங்கள் பற்களால் கடித்து சாப்பிடலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான லக்கி டிரா போட்டி நவம்பர் 13, 2023 முதல் டிசம்பர் 14, 2023 வரை திறந்திருக்கும்.

ஸ்பெஷல் எடிஷன் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் வோன்கா (Special edition Xbox series Wonka):

"பாக்ஸ் ஆஃப் சாக்லேட்" என்று அழைக்கப்படும் இந்த பேக்கேஜ், வோன்காவின் கோட் மூலம் ஈர்க்கப்பட்ட பர்கண்டி எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் கன்ட்ரோலரை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், ஐந்து சாக்லேட் டிரஃபிள் மாறுபாடுகளையும் கொண்டுள்ளது. "அச்சீவ்மென்ட் ஹண்டிங்" என்ற சாக்லேட் நீண்ட கேமிங் அமர்வுகளுக்கு சக்தி தரும் எனர்ஜி பார் போல செயல்படுகிறது.

"பட்டன் மாஷர் (Button Masher)" உணவு பண்டங்களில் போல்ட் எஸ்பிரெசோ டேஸ்ட் உள்ளது. "யுவர்ஸ் சிட்ரஸ் சைட்கிக் (Your Citrus Sidekick)" என்பது சாக்லேட் மற்றும் ஆரஞ்சு கலவையாகும். இது எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸில் உள்ள பல்வேறு கேம்களால் ஈர்க்கப்பட்டது. "எக்ஸ்ட்ரா கிக் (Xtra Kick)" ட்ரஃபிள் உற்சாகம் மற்றும் இனிமையான வெகுமதிகளுக்கு ஒரு பிட் வெப்பத்தை சேர்க்கிறது.

கடைசியாக, " வோன்கா ஃபார் தி வின் (Wonka for the Win)" உணவு பண்டம் நார்மல் சாக்லேட் அனுபவத்தை வழங்குகிறது. இந்த எக்ஸ்பாக்ஸ் லக்கி டிரா போட்டி நியூயார்க், லண்டன் மற்றும் சிட்னியில் உள்ள மைக்ரோசாஃப்ட் அனுபவ மையங்களுக்கு "வோன்கா" மேஜிக் என்ற நேரடி பஸ்ஸில் சால்விங் கேம் உடன் வருகிறது.

"வொன்கா" திரைப்படம் எப்போது ரிலீஸ்:

இந்த இடங்களுக்குச் சென்று, வோன்காவின் சூட்கேஸ் போன்ற வடிவிலான பஸ்ஸில் சால்விங் கேம்களை விளையாடி, வெற்றிபெற்றால், ஸ்பெஷல் எடிஷன் எக்ஸ்பாக்ஸ் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெற முடியும்.
பால் கிங் இயக்கிய "வொன்கா" திரைப்படம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி சர்வதேச சினிமாக்கள் மற்றும் IMAX இல் வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 7 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது.

முதல் முறையாக ஒரு கண்ட்ரோலர் சாதனத்தை முழுமையான சாக்லேட் மூலம் உருவாக்கி இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த ஸ்பெஷல் எடிஷன் வொன்கா எக்ஸ்பாக்ஸ் சாதனத்துடன் வழங்கப்படும் சாக்லேட் கண்ட்ரோலர் இல் உள்ள மூவிங் கீபேட்கள் மற்றும் ப்ரெஸ்ஸிங் பட்டன்கள் என்று எல்லாமே சாக்லெட்டால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு எடிபில் சாக்லேட் என்பதனால், விருப்பம் உள்ளவர்கள் இதை மக்கள் உண்டு மகிழலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Wonka Themed Special Edition Xbox Series X console With Edible Chocolate Controller
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X