எல்லா புகழும் வாட்ஸ் ஆப்-க்கே: 54 வயதில்காணாமல் போகி 94 கண்டுபிடிக்கப்பட்ட பெண்- நெகிழ்ச்சி சம்பவம்

|

கடந்த 1979-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தின் சாலையோரம் பரிதாபமான நிலையில் நின்று கொண்டிருந்த பெண்ணை அந்த வழியாக வந்த லாரி ஓட்டுனர் ஒருவர் பார்த்துள்ளார். அந்த பெண்ணை அதிகமான தேனீக்கள் கடித்திருந்த நிலையில், சரியாக பேசமுடியமால் இருந்துள்ளார்.

ண்ணை அச்சான் மவுசி என பெயர் வைத்து அழைத்து

உடனே அந்த ஓட்டனர் தனது வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார். மேலும் ஓட்டனரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை அச்சான் மவுசி என பெயர் வைத்து அழைத்து வந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஓட்டுனரின் மகன் இஸ்ரான் கான் கூறுகையில் மவுசு எங்கள் வீட்டிற்கு வந்த போது நான் சிறுவன்,

லை. ஆனால் அந்த

அவர் அடிக்கடி மாரத்தி மொழியில் ஏதேனும் புலம்புவார், பின்பு அவர் குடும்பத்தினர் குறித்த தகவலை கேட்கும் போது எதுவும் கூறவில்லை. மவுசி குறித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டேன் ஆனால் எந்த பலனும் இல்லை. ஆனால் அந்த பெண் கஞ்மா நகர் என்ற ஒரு இடத்தைப் பற்றி கூறவார். ஆனால் கூகுளில் அதுபோன்ற இடம் பற்றி சரியான தகவல் கிடைக்கவில்லை என்றார்.

பரஸ்பூர் பகுதியில்

மேலும் ஊரடங்கு காலத்தில் மவுசி,பரஸ்பூர் என்ற இடத்தை கூறியுள்ளார். அதனை இஸ்ரான் கான் கூகுள் செய்து தேடியுள்ளார்,அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் அப்படி ஒரு ஊர் இருப்பது தெரிய வந்தது. பின்பு இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் பரஸ்பூர் பகுதியில் கடை நடத்தி வரும் நபர் ஒருவரை தொடர்பு கொண்ட இஸ்ரான், மவுசு குறித்த தகவலை கூறி வீடியோ ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

காரணமாக தனது

அந்த வீடியோவை கடை நடத்தி வரும் நபர் தனது வாட்ஸ்அப் வழியாக அனைவருக்கும் பகிர பிரித்வி என்பவர் அது தனது பாட்டி தான் எனக் கூறி, இஸ்ரானை தொடர்பு கொண்டுள்ளார். ஊரடங்கு காரணமாக மத்திய பிரதேச மாநிலம் செல்ல முடியாத நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக தனது பாட்டியை பிரித்வி அழைத்து வந்துள்ளார்.

மேலும் தனது பாட்டி மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 1979-ம் ஆண்டு சிகிச்சைக்காக நாக்பூர் சென்ற போது அவர் மாயமானதாக பிரித்வி தெரிவித்தார். பின்பு பிரித்வியின் தந்தை தனது தாயை பல நாட்கள் தேடி அலைந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு அவர் உயிரிழந்து விட்டார்.

 40வருடங்களுக்கு முன்பு

அதற்குமுன்பு தனது பாட்டி கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என பிரித்வி தெரிவித்துள்ளார். கடந்த 40வருடங்களுக்கு முன்பு தொலைந்த பெண் ஒருவர் இப்போதுள்ள இணையம் மற்றும் சமூகவலைதள உதவியால் தனது குடும்பத்தாருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Women Went Missing Four Decades Ago Found With The Internet Help: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X