100க்கும் மேற்பட்ட இலவச பார்சல்களை ஒரே நபருக்கு அனுப்பிய Amazon.. FedEx.. என்ன காரணம்?
அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தேறியுள்ளது. ஆர்டர் செய்யாத ஒரு நபருக்கு 100 க்கும் மேற்பட்ட அமேசான் (Amazon) மற்றும் ஃபெட்எக்ஸ் (FedEx) பார்சல்கள் அவரின் வீட்டு வாசலை முற்றுகையிட்டுள்ளது.
100 கணக்கான இலவச பார்சல்களை ஏன் அந்த நபர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு இலவசமாக கொடுத்து வழங்கினார் என்று தெரிந்துகொள்ளலாமா? அமேசான், பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் பிற பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் சில தயாரிப்புகளின் நிரம்பி வழியும் போது என்ன செய்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக, இத்தகைய நிறுவனங்கள், அதன் ஸ்டாக்கில் உள்ள அதிகப்படியான பொருட்களை உலகெங்கிலும் உள்ள தங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அனுப்புவதை சில நேரங்களில் வழக்கமாக கொண்டுள்ளன. வெகு சில நேரங்களில் மட்டும் என்பதை கவனிக்க மறக்காதீர்கள். இருப்பினும், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான இ-காமர்ஸ் வழங்குநரிடமிருந்து மற்றொரு தொகுப்பைப் பெறும்போது கலவையான உணர்வுகளைக் கொண்டிருக்கலாம்.
வர்ஜீனியாவில் வசிக்கும் சிண்டி ஸ்மித் என்பவருக்கும் இதேபோன்ற சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. அவர் ஆர்டர் செய்யாத பேக்கேஜ்கள் தொடர்ந்து அவரின் வீட்டு வாசலுக்கு வருவதை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளார். ஓரிரு பார்சல்களை மட்டும் பெற்றிருந்தால், அது அவருக்கு அவ்வளவு ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருந்திருக்காது.
இலவசமான பார்சல்களே இவருக்கு நூற்று கணக்கில் வந்ததனால், இவர் உண்மையில் மிரண்டு போய்விட்டதாக கூறப்படுகிறது. அமேசான் அல்லது பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் இத்தகைய எண்ணிக்கையிலான பார்சல்களை ஒரே நபருக்கு ஒரு போதும் அனுப்பாது என்பதே உண்மை. அப்படியானால், இந்த பார்சல்களை இவருக்கு யார் அனுப்பியது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தீர விசாரித்த போது, இந்த நிகழ்வு ஒரு விற்பனையாளர் மோசடியின் ஒரு பகுதியாக இருக்கும் என்ற விஷயம் அவருக்கு தெரியவந்துள்ளது. உண்மையில், இவருக்கு அனுப்பட்ட பார்சல்களில் எதிலும் இவருடைய பெயர் குறிப்பிடப்படவே இல்லை. அவரின் பெயருக்கு பதிலாக பார்சல்களில் 'லிக்ஸியோவா ஜாங்' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெயர் மட்டும் தான் வேறுபட்டுள்ளது, ஆனால், பார்சல் டெலிவரி அட்ரஸ் ஸ்மித்தின் வீட்டு முகவரியை குறித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிக்கலான சூழ்நிலையை எதிர்கொண்ட ஸ்மித், டெலிவரி நிறுவனங்களை அணுகி, FedEx மற்றும் Amazon இலிருந்து பேக்கேஜ்களைப் பெறுவதை கண்டறிந்திருக்கிறார். அதிக எண்ணிக்கையிலான பேக்கேஜ்கள் காரணமாக அவரது வீட்டு வாசல் முற்றிலுமாக முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவருக்கு வந்த பார்சல்களில் அவருக்கு பல தேவைப்படாத பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தேவையற்ற பொருட்களை அகற்ற, ஸ்மித் அவர் வசிக்கும் பகுதியை சுற்றி வந்து, யாருக்கெல்லாம் என்ன தேவையோ அதையெல்லாம் இலவசமாக வழங்கி இருக்கிறார் ஸ்மித். பிடித்த பொருட்களை எடுத்துச் செல்ல விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு பார்சல்களை இலவசமாக வழங்கியிருக்கிறார். இதில் க்ளூ கன் (Glue gun) மற்றும் ஹெட்லேம்ப்ஸ் (headlamps) போன்ற பொருட்களை அவர் தனது அண்டை வீட்டாருக்கு விநியோகித்திருக்கிறார்.
இதில் சில பொருட்கள் பெட் கேர், பெட் ஷெல்டர் போன்ற பொருட்களை அவர் அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைகளுக்கு இலவசமாக வழங்கி இருக்கிறார். மேலும் பர்கர் கிங் போன்ற சீரற்ற இடங்களுக்கும் சென்று சில பொருட்களை வழங்கி இருக்கிறார் ஸ்மித். முதலில் இது ஒரு ப்ரஷிங் ஸ்கேம் (brushing scam) மோசடி என்று கூறப்பட்டது.
ப்ரஷிங் ஸ்கேம் என்பது ஈ-காமர்ஸ் விற்பனையாளர்கள், போலியான ரெவியூ அல்லது மதிப்புரைகளை இடுகையிட சீரற்ற முகவரிகளுக்கு இதுபோன்ற பார்சல்களை அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், அதுவும் கூட ஒரே முகவரிக்கு இத்தனை பார்சல்களை அனுப்பாது என்று கூறப்படுகிறது. இறுதியில், விற்கப்படாத பொருட்களை அப்புறப்படுத்த விரும்பும் விற்பனையாளர்களால் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








