Home
News

தமிழ்நாட்டில் மகளிர் மட்டும் இன்டெர்னெட் சென்டர்கள்

பெண்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட மகளிர் மட்டும் பேருந்து, மகளிர் ரயில்வே கோச், மகளிர் கல்லூரி போல இப்பொழுது மகளிர் மட்டும் இன்டெர்னெட் சென்டர்களும் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட உள்ளன.

சென்னை போன்ற நகரத்தில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் வீட்டிலேயே இன்டெர்னெட் வசதிகளை பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் சிறிய டவுன்களில் அல்லது கிராமங்களில் இருக்கும் பெண்களுக்கு இது போன்ற வாயப்புகள் அமைவதில்லை.

இது போன்ற பெண்களின் தேவைகளை கருத்தில் கொண்டே மகளிர் மட்டும் இன்டெர்னெட் சென்டர்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் மகளிர் மட்டும் இன்டெர்னெட் சென்டர்கள்

Click Here For Latest Gadgets Gallery

பொதுவாக இன்டெர்னெட் சென்டர்களுக்கு செல்லும் பெண்கள் நிறைய இன்னல்களை சந்திக்கின்றனர். ஒரு சில நேரங்களில் ஆபாஷ வெப்சைட்கள் எதிர்பாராத விதமாக வந்துவிடுகின்றன இது போன்ற சங்கடங்களை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை.

இது போன்ற சங்கடங்களை தவிர்ப்பதற்க்காக சிறிய டவுன்களில் அல்லது கிராமங்களில் இருக்கும் பெண்கள் இன்டெர்னெட் சென்டர்களுக்கு செல்வதில்லை.

ஆகையால் பெண்களின் பாதுகாப்பு, தேவைகள், வசதி போன்றவைகளை கருத்தில் கொண்டு மகளிர் மட்டும் இன்டெர்னெட் சென்டர்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இதன் அமைப்பாளர் சந்தோஷ் குமார் சுப்பரமணியம் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக தாம்பரம் மற்றும் காஞ்சிபுரம் அருகில் உள்ள சிறிய டவுன்களில் மகளிர் மட்டும் இன்டெர்னெட் சென்டர்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

பெண்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட உள்ள இந்த புதிய சேவையை நம்மளும் வரவேற்ப்போம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X