26வது மாடியில் இருந்து கீழே விழுந்த iPhone-க்கு எதுவுமே ஆகலையா.! எப்படி சாத்தியம்?
ஆப்பிள் ஐபோன் (Apple iPhone) என்றாலே எல்லோரும் ஆஹா.. ஓஹோ.. என்று தான் பெருமை பேச்சு பேசுவார்கள். இதுவரை ஐபோன் பற்றி நீங்கள் எத்தனை கதை கேட்டிருந்தாலும், இது போன்ற ஒரு பயங்கரமான கதையை நீங்கள் கேட்டிருக்கவே முடியாது.!
பெரும்பாலும் ஒரு ஸ்மார்ட்போனை (smartphone) நாம் கை தவறி தரையில் தவறவிட்டால், பதட்டத்தில் இருதயம் வைக்கே வந்துவிடும் போன்ற பீலிங் வந்துவிடும். ஆனால், இங்கோ ஒரு பெண்மணி தனது ஐபோன் (iPhone) சாதனத்தை 26வது மாடியில் இருந்து கைநழுவி தவறவிட்டிருக்கிறார். 26வது மாடியில் இருந்து கீழே விழுந்த ஐபோன் சின்னா-பின்னம் ஆகியிருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால், அதற்கு நேர்மறையாக ஐபோன் சேதமடையாமல் தப்பித்துவிட்டது. எப்படி இது சாத்தியம் என்று தானே கேட்கிறீர்கள்? இதே கேள்வி தான் எங்களுக்கும் எழுந்தது. ஐபோன் பில்ட் (iPhone built) அப்படியானது என்று ஆப்பிள் ரசிகர்கள் கெத்தாக ஸீன் போட்டுக் கொண்டாலும், என்ன நடந்தது என்பதை ஆராய்ந்தபோது தான் உண்மை புலப்பட்டது.
புஜியான் மாகாணத்தில் உள்ள நிங்டேயில் உள்ள சீனப் பெண் ஒருவர், தனது ஐபோன் 12 ப்ரோ ஸ்மார்ட்போனை ஒரு கட்டிடத்தின் 26வது மாடியில் இருந்து கீழே தவறவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 26வது மாடியில் இருந்து கீழே அவருடைய ஐபோன் விழுந்ததாகவும், அது முழுமையாக சேதமடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 26வது மாடியின் பால்கனியில் தனது பாக்கெட்டிலிருந்து ஸ்மார்ட்போன் நழுவிவிட்டதாக அந்த பெண் கூறுகிறார். இந்த சம்பவம் டிசம்பர் 18 அன்று நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது. 26வது மாடியில் இருந்து அவருடைய ஐபோன் கீழே விழுந்தும் சேதமடையவில்லை என்பது அதிசயமான கதையாக இருக்கிறது. உண்மையில் இந்த தகவலை கேட்டு நிறைய பேர் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த ஐபோன் தொடர்பான சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முன்னதாக, ஐபோன்கள் கழிப்பறைக்குள்ளும், ஆற்றின் உள்ளேயும், விமானத்தில் இருந்து விழுவதும், கடலில் இருந்து மீட்டெடுக்கப்பட்டதும் என்று பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், சமீபத்திய சம்பவம் ஐபோன் மிகவும் முரட்டுத்தனமாகவும் நீடித்ததாகவும் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது என்று கூறப்படுகிறது.
வெளியான அறிக்கையின்படி, கீழே விழுந்த ஐபோன் 12 ப்ரோ கட்டிடத்தின் 2வது மாடியில் உள்ள ஃபோம் செய்யப்பட்ட மேடையில் விளைந்ததால் சேதமடையாமல் தப்பித்திருக்கிறது. அந்தப் பெண்ணின் ஐபோனை அந்த கட்டிடத்தின் உதவியாளர்கள் இரண்டாவது மாடியில் இருந்து மீட்டெடுத்துள்ளனர். இந்த நிகழ்வில் ஐபோன் சாதனத்தின் டிஸ்பிளே சேதமடையவில்லை, இது உண்மையாக இருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும்.
இருப்பினும், இந்த சமத்துவம் குறித்துப் பல விமர்சனங்கள் இணையத்தில் பதிவாகியுள்ளது. எது எப்படியாக இருந்தாலும், ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ விழும்போது ஏற்படும் சேதத்திலிருந்து தப்பிப்பதற்கான சில பாதுகாப்புடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இது ஒரு சூப்பர் செராமிக் பேனல் மற்றும் மேட் டெக்ஸ்சர்டு கிளாஸ் பேக் பேனல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு துருப்பிடிக்காத அலுமினியம் சேசிஸ் உடன் வருகிறது. இது சிறந்த தரத்தை ஐபோனிற்கு வழங்குகிறது.
இருப்பினும், இந்த பண்புகள் 26 வது மாடியில் இருந்து சாதாரணமாக எந்த போன் கீழே விழுந்தாலும் தப்பிக்க வாய்ப்பே இல்லை என்பதே உண்மையாகும். ஆனால், இங்கு இணையத்தில் கூறப்படும் கதையானது தற்செயல் நிகழ்வுகளின் உச்சக்கட்டமாக இருக்கிறது. தற்செயல் நிகழ்வின் விளைவாக ஸ்மார்ட்போன் 26வது மாடியில் இருந்து விழுந்த ஐபோன் ஃபோம் தரையில் விழுந்து தப்பித்துவிட்டது என்பதே உண்மையாகும்.


Click it and Unblock the Notifications